என் மலர்
நீங்கள் தேடியது "பேட் கம்மின்ஸ்"
- 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
- மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதனிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த கம்மின்ஸ், ஹேசல் வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார். இதனால் மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி
மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா
- அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
- அதற்கு முன்னதாக பாகிஸ்தானுடன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி போட்டியாக இந்த தொடரில் இரு அணிகளும் மோதுகின்றனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை.
இந்நிலையில் முழுமையாக காயம் குணமடையாததால் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். அடுத்த 2-3 போட்டிகளில் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயத்தில் இருந்த அதிரடி பேட்டர் டிம் டேவிட் டி20 தொடரில் விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் உள்ளார் எனவும் ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
- பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட நாதன் லயனும் அணியில் இடம்பிடித்துள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.
கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் காணும் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சுக்கு பதிலாக ஜோஷ் டாங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மிரட்டும் நிலையில், கம்மின்சின் வருகை பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதே போல் பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் அணியில் இடம்பிடித்துள்ளார்
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:
டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (WK), ஜோஷ் இங்லிஸ், பாட் கம்மின்ஸ்(C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்,
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
- முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
அடிலெய்டு:
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் அவரே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
- இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
அடிலெய்டு:
இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடதா ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாடுவார் என உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் எஞ்சிய டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
- முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபா மைதானத்தின் தன்மையை பொறுத்தே கம்மின்ஸ் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கமால் இருந்து வருகிறது.
- கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
- தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
- முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், "இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம். இது மைதானத்தை அமைதியாக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க கேப்டனின் இந்த பேச்சு 2023 இல் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸின் பேச்சை நினைவுபடுத்தியது.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசிய பேட் கம்மின்ஸ், "1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும்" என்று கூறினார்
- கோலியும், ரோகித்தும் கடந்த 15 ஆண்டுகளாக ஏறக்குறைய இந்திய அணியின் ஒவ்வொரு தொடரிலும் அங்கம் வகித்து இருக்கிறார்கள்.
- அவர்கள் இங்கு விளையாடுவதை ஆஸ்திரேலிய மக்கள் பார்க்க இருப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது.
இதையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று இரு குழுவாக டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர். முதல் குழுவில் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, புதிய கேப்டன் சுப்மன்கில், ஜெய்ஸ்வால், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப்சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இதற்கிடையே இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், 'விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கடந்த 15 ஆண்டுகளாக ஏறக்குறைய இந்திய அணியின் ஒவ்வொரு தொடரிலும் அங்கம் வகித்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கு விளையாடுவதை ஆஸ்திரேலிய மக்கள் பார்க்க இருப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்.
இருவரும் இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போதெல்லாம் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அமோகமாக இருக்கும். காயத்தால் நான் இந்த தொடரில் ஆட முடியாமல் போவது வேதனை அளிக்கிறது. போட்டியை நேரில் பார்க்க அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருவார்கள்.
ஏற்கனவே இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எப்போதும் இது போன்ற பெரிய தொடரை தவற விடுவது ஏமாற்றமாக இருக்கும். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வெல்ல விரும்புகிறோம். அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த உலகக் கோப்பையில் ஆடாதவர்கள். அவர்களது செயல்பாடு எப்படி இருக்குப்போகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம்' என்றார்.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது.
- இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மிகவும் பழமையான ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதுகுவலி பிரச்சனை காரணமாக அவர் முதல் டெஸ்டில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் குணமடையாத பட்சத்தில் முழு தொடரையும் அவர் இழக்க நேரிடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர் விலகினால் ஆஸ்திரேலிய அணிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படும்.
அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான வெள்ளை தொடரில் இருந்து விலகினார். அடுத்து தொடங்கவிருக்கும் இந்திய தொடரிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது.
- ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த 2 தொடரில் இருந்தும் முதுகு வலி காயம் காரணமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். மேலும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பெரிய அடியாக உள்ளது.
- ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக இருந்தது.
- வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என எதற்கும் ஒத்துழைக்கவில்லை.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. என்ற போதிலும் இங்கிலாந்து ஆடுகளத்திற்குரிய ஸ்விங் மிகப்பெரிய அளவில் இல்லை. பேட்டிங்கிற்கு சொர்க்கமாக இருந்தது.
பேஸ்பால் எனச் சொல்லிக் கொண்டு ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-
இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச்சாளராக விரும்புவார்கள். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இது 3ஆவது மிகவும் மோசமான பிளாட் பிட்ச்.
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியை இந்தியா- இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் போட்டியுடன் ஒப்பிடும்போது இரண்டு வேறுபட்ட விளையாட்டாக தெரிகிறது. இந்தியா- இங்கிலாந்து தொடர் நல்லத் தொடராக செல்லும் போன்று தெரிகிறது. தற்போது 1-1 என இருக்கிறது. அதிக அளவில் போட்டியை பார்க்கவில்லை. இருந்தபோதிலும் ஸ்கோர் பார்த்தேன்.
இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.






