என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: கம்மின்ஸ் விளையாட வாய்ப்பு
- முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபா மைதானத்தின் தன்மையை பொறுத்தே கம்மின்ஸ் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கமால் இருந்து வருகிறது.
Next Story






