என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து கேப்டன் கம்மின்ஸ் விலகல்?
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது.
- இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மிகவும் பழமையான ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதுகுவலி பிரச்சனை காரணமாக அவர் முதல் டெஸ்டில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் குணமடையாத பட்சத்தில் முழு தொடரையும் அவர் இழக்க நேரிடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர் விலகினால் ஆஸ்திரேலிய அணிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படும்.
அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான வெள்ளை தொடரில் இருந்து விலகினார். அடுத்து தொடங்கவிருக்கும் இந்திய தொடரிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






