என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராசக்தி"

    • அந்த உடையின் விலை மட்டுமே ரூ.2¼ லட்சம் என்று கூறப்படுகிறது.
    • ஸ்ரீலீலாவின் ரசிகர்கள் பதில் கருத்துகளை வீசி வருகிறார்கள்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் ஸ்ரீலீலா மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் அணிந்த உடை அனைவரையும் ஈர்த்தது. இடுப்பில் கூடை அணிந்தது போன்று காணப்பட்ட அந்த உடை இருந்தது. அந்த உடையின் விலை மட்டுமே ரூ.2¼ லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் 'கோவில்' படத்தில் இடுப்பில் கூடையை வைத்து வடிவேலு நடக்கும் புகைப்படத்தையும், ஸ்ரீலீலாவின் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு சில குறும்புக்கார ரசிகர்கள் 'கமெண்ட்' அடித்து வருகிறார்கள். ஸ்ரீலீலாவின் ரசிகர்கள் பதில் கருத்துகளை வீசி வருகிறார்கள். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிவகார்த்திகேயனின் 25வது படம் பராசக்தி.
    • ஜன.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார்.  பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

    மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. இந்நிலையில் பராசக்தி படம் வரும் பிப்.7ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • பராசக்தி படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அமரன், மதராசி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த 9-ந்தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

    படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சிவகார்த்திகேயனின் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலான படப்பட்டியலில் பராசக்தி இணைந்துள்ளது.

    இதற்கு முன்னதாக அமரன் (300 கோடி ரூபாய்க்கு மேல்), மதராசி (100 கோடி ரூபாய்க்கு மேல்), டாக்டர் 100 கோடி ரூபாய்க்கு மேல், டான் (125 கோடி ரூபாய்க்கு மேல்) 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது.

    மதராசி, அமரன், பராசக்தி என தொடர்ந்து 3 படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

    • உலகிலேயே தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் நிழல் கீழே விழாது
    • சீமான் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி பராசக்தி படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    இந்நிலையில், பராசக்கதி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

    படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை" என்று விமர்சித்தார்.

    மேலும், பேசிய சீமான், "உலகிலேயே தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் நிழல் கீழே விழாது என்று தெரிவித்தார்.

    சீமான் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக அவர் பேசிய தவறு என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    உண்மையில், தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் காலையில் மேற்கிலும் மாலையில் கிழக்கிலும் கீழ் விழும் என்று நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    • தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது.
    • வலுக்கட்டாக ஆங்கில சொற்களை சேர்த்து, தங்கிலீஸ் உருவாக்கிவிட்டோம்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி பராசக்தி படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    இந்நிலையில், பராசக்கதி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

    படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. விரும்பினால் எம்மொழியும் கற்போம். ஈழத்தில் நாங்கள் எங்கள் தாய் நிலத்தை இழந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக போனோம். ஒரு மொழி தேவை என்றால் கற்று கொள்வோம். ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதிகபட்சமாக ஆறு மாதம் ஏழு மாதம் ஆகும்.

    கடந்த 3 தலைமுறைகளாக தாய் மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது. நமக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வலுக்கட்டாக ஆங்கில சொற்களை சேர்த்து, தங்கிலீஸ் உருவாக்கிவிட்டோம்.

    மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை" என்று விமர்சித்தார்.

    அப்போது பராசக்தி படத்தில் வரும் "செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா?"என்ற கேள்விக்கு, அந்த செழியன் நான்தான் என்று சீமான் பதில் அளித்தார்.

    பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.

    சென்னையில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா என செய்தியாளர்கள் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த வைரமுத்து கூறியதாவது:-

    பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன்..ஆம், 1952ம் ஆண்டில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன். முன்பே பார்த்து நான் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்த திரைப்படம்.

    நடிகர் திலகம் என்கிற மாபெரும் கலைஞனும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வசனகர்த்தாவும் தமிழ்நாட்டிற்கு கொடுத்த குடை என்று சொல்லவேண்டும்.

    பராசக்தி 52-ல் வெளிவந்தது.. 53-ல் நான் பிறக்கிறேன். நான் வளர வளர பராசக்தி படித்து, கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.

    தற்போது வந்துள்ள பராசக்தி படத்தை நான் பார்க்கவில்லை. படம் பார்க்காமல் நான் கருத்து சொல்லக் கூடாது. முகர்ந்து பார்க்காமல் வாசனை சொல்லக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை.
    • காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

    * பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது.

    * பராசக்தி ஒரு கமர்ஷியல் திரைப்படம் அவ்வளவு தான். இதை வைத்து அரசியல் narrative set பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம்.

    * காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    * நிர்வாகிகளுக்கு பலவித கருத்து இருக்கலாம். தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

    • அண்ணா (விஜய்) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, 'மன்னிப்புச் சான்றிதழ்' வாங்கு
    • ஒரு படத்தின் வெற்றிக்காக மற்றொன்றின் தோல்வியை விரும்புவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமானதல்ல

    விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் திட்டமிட்டப்படி வெளியாகாத நிலையில், அந்த கோபத்தை விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது காட்டுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

    பராசக்தி படம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அடையாளம் தெரியாத சமூக வலைதள கணக்குகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, படத்தைப் பற்றித் தவறான கருத்துகளைப் பரப்புவதும், தனிநபர் தாக்குதல் நடத்துவதும் மிக மோசமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தளப்பக்கம் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு பேசிய அவர், அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, மிக மோசமான வகையிலான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடக்கின்றன. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கே தெரியும்.

    "Blasting Tamil Cinema" என்ற எக்ஸ் பக்கத்தில் நான் பார்த்த ஒரு விஷயத்தை வாசிக்கிறேன். "தணிக்கை குழுவிடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயம் இல்லை.. அண்ணா (விஜய்) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, 'மன்னிப்புச் சான்றிதழ்' வாங்கு.. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, அவர்கள் மன்னித்துவிட்டால் #பராசக்தி திரைப்படம் ஓடும்." எனக் குறிப்பிட்டுள்ளனர் என அந்தப் பதிவை வாசித்தார். 

    மேலும் தனது படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காகச் சிலர் செய்யும் இத்தகைய செயல்களை "ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரம்" என்றும் சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஒரு படத்தின் வெற்றிக்காக மற்றொன்றின் தோல்வியை விரும்புவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமானதல்ல என்றும், ஆரோக்கியமான போட்டியை ரசிகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
    • இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றது குறித்து காமகிரஷ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு... ஆனா ஜன நாயகன் blocked" என்று தெரிவித்துள்ளார்.

    • மத்திய இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார்.
    • விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    • பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு இந்திரா காந்தி வருகை புரியவில்லை.
    • முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள 'பராசக்தி' படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அணி தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவர் அருண் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "1965-ல், அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் அலுவலகப் படிவங்கள் இந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான புனைவு ஆகும்.

    திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பது போன்றும், அதில் இந்திரா காந்தி வில்லத்தனமாகப் பேசுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது முழுவதும் ஒரு கற்பனை சித்தரிப்பு காட்சி. மறைந்த தேசியத் தலைவர்களை அவர்கள் வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகளில் சம்பந்தப்படுத்திச் சித்தரிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. 

    இந்த சித்தரிப்பை மேலும் வலுப்படுத்தி திரைப்படத்தில் இந்திரா காந்தி பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அப்படி ஒரு வருகை நிகழவே இல்லை. பின்னர், அவர் முன்னிலையில் ஒரு ரயில் எரிக்கப்படுவது போன்ற காட்சிகளும், இந்தி திணிப்புக்கு எதிரான கையெழுத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்றில் நடக்கவில்லை, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அதுபோல திரைப்படத்தின் இறுதியில்,  நமது தலைவர்களான கே. காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் உண்மையான புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன், பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றது என்ற முற்றிலும் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்டு, நமது கட்சியையும், நமது தலைவர்களையும் தவறான மற்றும் அவதூறான தகவல்களின் மூலம் வேண்டுமென்றே கலங்கப்படுத்தும் காட்சி. 

    இது தவிர, காங்கிரஸ் கொடி எரிக்கப்படும் காட்சிகள் கூட படத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    வரலாற்றில் நிகழாத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பராசக்தி திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். திரைப்படத் தயாரிப்புக் குழு பொது மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அநீதிக்கு எதிராகத் தங்கள் குரல்களை எழுப்புமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    #பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன்.
    • பராசக்தி படம் மூலமாக முதல் முறையாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்த படம் "பராசக்தி".

    டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

    விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-

    படத்தை பார்த்து விட்டு குட்டி பையன் ஒருவன் தீ பரவட்டும், தமிழ் வாழ்க என்று வீடியோ அனுப்பி இருந்தான். அந்த அளவுக்கு மக்களிடம் பராசக்தி படம் சென்று அடைந்துள்ளது.

    நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன். பராசக்தி படத்தில் நடித்தது என் வாழ்நாள் பெருமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் ஸ்ரீலீலா பேசுகையில், பராசக்தி படத்தில் நடித்தது ரொம்ப திருப்தியாக இருக்கிறது. என்னுடைய நடனம், பாடலுக்கு பாராட்டுகள் வருவது எனக்கு பழகிவிட்டது. பராசக்தி படம் மூலமாக முதல் முறையாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச் சரியான அறிமுக படம் என தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×