என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பொழிவு"

    • 5 முதல் 6 அடி ஆழத்திற்குப் பனி குவிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
    • சுமார் 38 கி.மீ தூரத்திற்கு மூடிக்கிடந்த பனியை இரவு பகலாக அகற்றினர்.

    ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தோடா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 40 ராணுவ வீரர்கள் மற்றும் 20 பொதுமக்கள் என மொத்தம் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    தோடா மாவட்டத்தில் உள்ள சத்தர்காலா கணவாய் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவியது. கடல் மட்டத்திலிருந்து 10,500 அடி உயரத்தில் உள்ள இந்தப் பகுதியில் சுமார் 40 மணி நேரம் இடைவிடாது பனி கொட்டியது.

    இதனால் 5 முதல் 6 அடி ஆழத்திற்குப் பனி குவிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜனவரி 24 முதல, எல்லை சாலைகள் அமைப்பு (BRO) அதிகாரிகள் சுமார் 38 கி.மீ தூரத்திற்கு மூடிக்கிடந்த பனியை இரவு பகலாக அகற்றினர்.

    இந்நிலையில் அங்கு சிக்கியிருந்த 4 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுடன் அங்கிருந்த 20 பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இதேபோல், ராஜௌரி மாவட்டத்தின் கண்டி-கோத்ரங்கா பகுதியிலும் 35 கி.மீ தூரத்திற்குப் பனியை அகற்றி BRO அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர் செய்துள்ளனர்.

    இதற்கிடையே  உதம்பூர் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள். 

    • விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.
    • ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன.

    காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரி கூறுகையில்,

    பாதகமான வானிலை மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுவதால், விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.

    பனிப்பொழிவு காரணமாக இதுவரை சுமார் 50 விமானங்கள் - 25 உள்வரும் மற்றும் 25 வெளிச்செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை இயக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறினார்.

    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், வார இறுதி மற்றும் குடியரசு தின விடுமுறைக்கு காஷ்மீர் வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

    • ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 30 வரையிலான 40 நாட்கள் 'சில்லாய் காலன்' என்று அழைக்கப்படுகிறது.
    • வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளன.

    ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 30 வரையிலான 40 நாட்கள் 'சில்லாய் காலன்' என்று அழைக்கப்படுகிறது.

    இது மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலமாகும். தற்போது அந்த உச்சக்கட்ட குளிர் நிலவி வருகிறது.

    பள்ளத்தாக்கு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    எங்குப் பார்த்தாலும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போலப் பனி படர்ந்துள்ளது.

    சுற்றுலாப் பயணிகள் இதனை ரசித்தாலும், போக்குவரத்து பாதிப்பால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    காந்தர்பால், ரஜௌரி, வைஷ்ணோ தேவி கோயில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    சாலைகளில் பல அடி உயரத்திற்குப் பனி தேங்கியுள்ளதால், முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ரெயில் சேவை மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களின் உதவியுடன் பனியை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

    • அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும்.
    • உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும்.

    அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.

    வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு வரை கடும் பனிப்பொழிவு இருக் கும் என்றும் திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் இந்த பனிப்புயல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக இருந்தன. 

    பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்க ளுக்குப் பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.
    • உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது.

    ரஷியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் பனியால், வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரை வரை பனி படர்ந்துள்ளது. பல இடங்களில் பனியின் உயரம் பல மீட்டர்களை எட்டியுள்ளது.

    தலைநகர் மாஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ரஷியாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை சேர்ந்துள்ளன.

    உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் மலை போல் பனி குவிந்துள்ளதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலுமாகப் புதைந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

    மோசமான வானிலை காரணமாகச் சகாலின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

    • உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நடப்பாண்டு நீலகிரியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிமாக உள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது.

    ஊட்டி நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியை எட்டியது. தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி வரை நிலவியது.

    இதன் காரணமாக ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று உறைபனி படிந்து காணப்பட்டது. உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.

    இதற்கிடையே மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் மற்றும் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கம் காணப்படுகிறது. தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 2020-க்கு முன்பு பனிப்பொழிவால் 3,700 ஏக்கர் முதல் 4,900 ஏக்கர் பரப்பில் தேயிலை செடிகள் கருகின. 2021-22-ல் பனிப்பொழிவு குறைந்ததால் 1,200 ஏக்கர் மட்டுமே தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டன.

    கடந்த 3 ஆண்டுகளாக பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் நடப்பு பருவத்தில் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தேயிலை செடிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறும்போது, தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக நிழல் தரும் சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும். கொப்புள நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றினால், தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்கலாம் என்றனர்.

    • பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,974 விமானங்கள் தாமதமாகி உள்ளன. நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.

    நியூயார்க் நகரில் ஒரே இரவில் 10 அங்குலம் வரை பனிப்பொழிவு இருக்கும் என்றும், வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 10 மணி பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    வட இந்தியாவில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் அதிக பனிப்பொழிவை எதிர்கொள்ளும் மாதங்கள் ஆகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன.

    காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக மாறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அங்குள்ள பல நீர் நிலைகள் மற்றும் அருவிகள் உறைந்துபோய் பனிக்கட்டிகளாக காட்சி அளிக்கின்றன.

    டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மூடுபனி போல் உள்ளதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் செல்கின்றன.

    மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துகாணப்படுகிறது. வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் வட மாநிலங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 10 மணி பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது. இப்போதே வாகனங்கள் காலையில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி தான் சாலையில் பயணிக்கின்றன. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    மக்கள் குளிர் காய்ச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொடர்ந்து உடலை சூடாக வைத்துக்கொள்ளவும், அதிகமாக வெளியில் பயணிப்பதை தவிர்க்கவும், வாகனங்களில் மெதுவாக செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வரும் நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
    • 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.

    இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.

    இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    சுசீந்திரம், சாமிதோப்பு, மயிலாடி பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மயிலாடியில் அதிகபட்சமாக 126.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொட்டாரம், கன்னிமார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, முக்கடல், இரணியல், கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.47 அடியாக இருந்தது. அணைக்கு 266 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது. அணைக்கு 268 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.05 அடியாக உள்ளது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் பஸ்கள் காலை 7.30 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.

    • பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்
    • நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது

    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தக்காளி, மிளகாய், பீட்ரூட், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதாலும், ஈரப்பதத்தாலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கேற்ப விலை ஏற்றம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில்பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

    இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    மழைக்குப் பின் நிலவி வரும் குளிர்ந்த வானிலை என்பது பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற பருவநிலையாக இருக்கும். தற்போதைய நிலையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் அடியில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது. இவை இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதோடு பூஞ்சணங்கள், வைரஸ், பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற சில நோய்க் கிருமிகளையும் செடிகளுக்குள் செலுத்தி பலவிதமான நோய்களை உருவாக்குகின்றன. எனவே பூச்சி தாக்குதல் அறிகுறி தென்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

    பொதுவாக பயிர் சாகுபடி செய்யும்போதே தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்ற கவர்ச்சிப் பயிர்களை வரப்புப் பயிராக நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் இவற்றின் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்கலாம். வெள்ளை ஈக்கள் தென்னையில் மட்டுமல்லாமல் பப்பாளி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 300 விதமான பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலமடங்கு வீரியத்துடன் பெருகும் சூழல் உருவாகலாம்.

    எனவே இயற்கை முறையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை கவர்ந்து அழிக்கலாம். மேலும் அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதவீதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிக அளவில் தென்பட்டால் தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்று ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மல்லிகை பூ வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்றது. வழக்கமாக திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு 1.5 டன் மல்லிகை பூ விற்பனைக்கு வரும். நல்ல வருவாய் கிடைப்பதுடன் விரைவாக விற்றுத்தீர்ந்து விடுவதால் மொத்த வியாபாரிகள் பலர் மல்லிகை பூ வாங்கி, விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இரவு, அதிகாலையில் பனி தூறல் மழை போல் பொழிகிறது. நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது. திருப்பூர் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வழங்கி வரும் சத்தியமங்கலம், திண்டுக்கல், சேலம், ஓசூர் பகுதியில் பனி அதிகரிப்பால், செடிகளில் மொட்டுக்கள் பூ ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மல்லிகை பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் பூக்கள் வந்த மார்க்கெட்டுக்கு மொத்தம், 350 கிலோ மல்லிகை பூ மட்டும் வருவதால் சீசன் இல்லாவிட்டாலும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை விற்கப்படுகிறது. முல்லை, 600 ரூபாய், செவ்வந்தி 120, அரளி 150 ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரிகள் கூறுகையில், பனி குறைந்து விட்டால், ஓரிரு நாளில் நிலை சரியாகும். திருக்கார்த்திகை தீபம் வரை விலை உயர்வு இருக்கும் என்றனர்.

    • கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.
    • 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.

    திருப்பூர் :

    கார்த்திகை, மார்கழி மாதங்களில் வழக்கமாக அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படும்.அவ்வகையில் திருப்பூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல தரப்பினரும் பல்வேறு நடைமுறைகளை கையாளுகின்றனர்.

    இதில் பொதுவான விஷயமாக உடலில் குளிர் பாதிக்காமலும் வெப்பத்தை தக்க வைக்கும் விதமாகவும், உல்லன் ஸ்வெட்டர்கள், குரங்கு குல்லா, மப்ளர், ஜெர்கின், காதுகளை அடைக்கும் ஹியர் கேப் என பல விதமான உடை வகைகளை பயன்படுத்துகின்றனர்.அவ்வகையில் இவற்றின் விற்பனை தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் பகுதியில் இருந்து இவற்றை கொள்முதல் செய்து வந்து வட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.

    ×