search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea plants"

    • 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப் பட்டு ள்ளது.
    • வால்பாறையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் வால்பாறையில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.

    30-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட் களில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப் பட்டு ள்ளது.

    இது தவிர சிறிய அளவில் காப்பி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப் பட்டுள்ளன.

    வால்பாறையை படும் சுற்றி உள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை த்தூள் கோவை, கொச்சி, குன்னூர்போன்ற ஏல மையங்கள் மூலம் வெளிநா டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் பருவ மழைக்கு பின்னர் வால்பாறையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

    இரவு முதல் காலை வரை பனிப்பொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. தொடரு ம் இந்த காலநிலை மாற்றத்தால், தேயிலை செடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் துளிர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, ஸ்பிரிங்லர் மூலம் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்து தேயிலை மகசூலை அதிகரிக்கும் பணியில் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளனர். 

    • கடந்த 2 மாதங்களாகவே கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது
    • தேயிலை செடிகளை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகவே கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. தற்சமயம் பனிப்பொழிவின் தாக்கம் குறைந்த நிலையில் பகல் பொழுதுகளில் வெயில் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கோத்தகிரி பகுதிகளில் தேயிலை செடிகளை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அதிகப்படியான பனிப்பொழிவு வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் தேயிலை செடிகள் காய்ந்து வருகின்றது.இதனால் வருமானமின்றி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர்.
    • கடும் உறைபனி கொட்டி வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது.

    போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் நோய்கள் தாக்கி தேயிலை செடிகள் கருகி உற்பத்தி குறைந்து காணப்பட்டு வருகிறது.

    தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட ப்பட்டு உள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தேயிலை செடிகளை காப்பதற்க்கு செடிகளுக்கு மேல் பாகங்களை வெட்டி போடுதல் மற்றும் தேயிலை செடிகளின் தலைகளை பரப்பி விடுதல் என பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில் பெரும்பா ன்மையான விவசாயிகள் ஸ்பிரிங்ளர் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் மூலமாக நீர் பா ய்ச்சு தேயிலை செடிகளின் பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பனிகள் தேயிலை செடிகள் மீது படாமல் இருக்கின்றது.

    கடுமையான வெயிலும், கடும் பணியும் காணப்பட்டு வந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இரவு முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டங்களுடன் சிறிய சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பணியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது. #Teapowder
    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடக்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். குன்னூர் மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 21, 22-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு 11 லட்சத்து 16 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 6 லட்சத்து 40 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 76 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 10 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.9 கோடியே 93 லட்சம் ஆகும். இது 90 சதவீத விற்பனை ஆகும்.

    சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.241, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.256 என ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.90 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.125 முதல் ரூ.140 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.82 முதல் ரூ.89 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.138 வரையும் ஏலம் போனது. அடுத்த ஏலம் வருகிற 28, 1-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.  #Teapowder
    ×