கோத்தகிரியில் காய்ந்து வரும் தேயிலை செடிகள்

கடந்த 2 மாதங்களாகவே கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது தேயிலை செடிகளை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.
கோத்தகிரியில் காய்ந்து வரும் தேயிலை செடிகள்
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகவே கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. தற்சமயம் பனிப்பொழிவின் தாக்கம் குறைந்த நிலையில் பகல் பொழுதுகளில் வெயில் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கோத்தகிரி பகுதிகளில் தேயிலை செடிகளை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அதிகப்படியான பனிப்பொழிவு வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் தேயிலை செடிகள் காய்ந்து வருகின்றது.இதனால் வருமானமின்றி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com