என் மலர்

  நீங்கள் தேடியது "நிர்மலா சீதாராமன்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை.
  • இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது.

  புனே:

  மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:

  மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் சரியான நேரத்திலும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைப் பொறுத்த வரையில், பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறேன்.

  பணவீக்கத்தை 4 சதவீதத்துக்கு கீழ் வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்க பிரச்சினையில் உலக சூழல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அமெரிக்கா அனுபவித்து வருகிறது. ஜெர்மனி கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத உயர் பணவீக்கத்தை எதிர் கொள்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம் உள்பட பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மத்திய அரசு கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்கவர் என நிதி மந்திரி தெரிவித்தார்.
  • தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்றார்.

  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  பிரதமருக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டும் என்று இந்த நல்ல நாளில் இறைவனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன். பிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்கவர்.

  ஒக்கிப்புயலின் போது என்னை தமிழகத்தின் கடைகோடி மாவட்டம் மற்றும் கேரள எல்லைக்கு அனுப்பியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பிரதமர் எனக்கு அறிவுறுத்தினார். அந்த நேரத்தில், கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாமல் இருந்தது தொடர்பாக அரசு கவனமாக நடவடிக்கை எடுத்தது.

  காணாமல் போன மீனவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி இருந்தார். அதற்காக கடற்படை, விமானப்படை மற்றும் அனைத்து படகுகளையும் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டோம். கடைசி மீனவரை உயிரோடு மீட்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது என பிரதமர் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.

  தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போதும் நேரடியாக சென்று இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என பிரதமர் என்னை அனுப்பினார். அந்த மீனவரின் உடலை வாங்காமல் 'எங்களுக்கு நீதி வேண்டும்' என பெற்றோர் போராடிக் கொண்டிருந்தனர். நான் சென்று அந்தப் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, 'அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என அறிவித்த பிறகு அந்த மீனவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  தமிழகத்தின் மீது பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. தமிழகத்தின் இலக்கியங்கள் உள்ளிட்டவை பற்றி பிரதமர் மோடி பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார் என தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
  • பணவீக்கத்தை பற்றி நிர்மலா சீதாராமன் கவலைப்படவில்லை.

  புதுடெல்லி:

  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

  இந்நிலையில், சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி மிக விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், பணவீக்கம் என்னுடைய தலையாய கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது! உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்.
  • தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

  சென்னை :

  சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.) 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

  விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

  மாணவர் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் முன்னேற வேண்டும் என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

  அவர் கூறியது போல ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கு அவசியம். 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும்.

  தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். 2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும். உலக அளவில் 58 சி.இ.ஓ.க்கள் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள்.

  சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள 25 சதவீத நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. 100 யூனிகான் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய்நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இவ்வாறு அவர் பேசினார்.

  விழாவில் இக்கல்வி நிறுவனத்தின் புதிய அரங்குக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஏ.ஐ.ஐ.ஓ.டி. ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

  விழாவில் ஐ.ஐ.ஐ.டி.டி.எம். நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ்.சடகோபன், இயக்குனர் டி.வி.எல்.எம்.சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.
  • தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை உருவாக்க வேண்டும்.

  மேலக்கோட்டையூர்: 

  செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி  நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

  தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது, எனவே பெற்றோர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 


  மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும்.அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.

  சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியம்.

  2047 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

  2028 ஆண்டு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும்.

  2014-2015 ஆண்டில் 42,000 என்ற எண்ணிக்கையில் இருந்த காப்பீட்டு ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, இந்த வருடம் 66,000 ஆக அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலம் சென்றார்.
  • அங்கு ரேஷன் கடையை ஆய்வு செய்த அவர், ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

  ஐதராபாத்:

  தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.

  அப்போது மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும்போது, ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

  இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் கியாஸ் சிலிண்டரில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். அதில் கியாஸ் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

  இதுதொடர்பான வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்திருப்பதோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதமரின் படங்களை வைக்க பாஜகவினரும் அனுமதிக்கப்படவில்லை.
  • பிரதமரின் பேனர் அகற்றப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

  தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். 

  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அது குறித்து மாவட்ட ஆட்சியர் தடுமாற, பதில் அளிக்க அவருக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.

  பின்னர் பேசிய அவர், வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

  கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்பு இல்லாமல் அந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் காணவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் ​​அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

  பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனரை ரேஷன் கடைகளில் வைத்தால், அது அகற்றப்படாமலோ அல்லது கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். 

  இதைத் தொடர்ந்து, ஏழை மக்களுக்கு பிரதமரின் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என்றும், இதனால் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் பேனர் அல்லது போஸ்டர்கள் வைக்கப்படுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்றும் நிதி மந்திரி அலுவலகம் சார்பில் டுவிட் செய்யப்பட்டது.

  முன்னதாக பான்ஸ்வாடா பகுதிக்கு சென்ற மத்திய நிதி மந்திரியின் காரை மறித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், விலைவாசி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அந்த கும்பலை கலைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது.
  • அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  பிரதமரின் மக்கள் நிதித்தி்ட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி தமது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் 8வது ஆண்டு தினத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

  அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பெரும் முன்னெடுப்பு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாகும். இது சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது.

  2014 ஆகஸ்ட் 28க்கு பின் பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள், 67 சதவீத கணக்குகள் ஊரக மற்றும் சிறு நகரங்களில் உள்ளன. ரூ.1.74 லட்சம் கோடி வைப்புத் தொகை இருப்புடன் 46 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

  இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல், பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்களை பாதுகாத்தல், நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்தல் போன்றவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இதன் மூலம் இதுவரை வங்கி சேவை கிடைக்காத பகுதிகளில் வங்கி சேவை வழங்குவதற்கும் வகை செய்துள்ளது.

  மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களின் ஒப்புதலுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் வாயிலாக, தகுதியுள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களில் நேரடி பணப்பரிமாற்றத்திற்கு வகை செய்துள்ளது.

  பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு நேரடி வருவாய், பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்கத் தொகை பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி சூழல் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் பலன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தெரிந்தது.

  பிரதமரின் மக்கள் நிதித்திட்ட அணுகு முறையை நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை மாபெரும் வெற்றியடையச் செய்ய அயராது முயற்சிகளை மேற்கொண்ட கள அலுவலர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய அரசின் வரி வருவாய் குறித்த பட்டியலை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.
  • பொதுமக்களிடம் வசூலித்த வரி வருவாய் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

  மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை விட மக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வரி வருவாய் பெறுவதை விளக்கும் பட்டியலை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

  அதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி வருவாய் 40 சதவீதமாக உள்ளதாகவும் அதுவே பொதுமக்களிடமிருந்து பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக உள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

  கடந்த 2021 ஆண்டு கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து தற்போதைய மத்திய அரசு பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக குறைந்திருப்பதும், அதே நேரத்தில் பொதுமக்களிடமிருந்து வசூலித்த வரி வருவாய் 48 சதவீதமாக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  மக்கள் மீது வரியை உயர்த்து, நண்பர்களுக்கு வரியை குறை, இதுதான் சூட்-பூட்-சர்க்காரின் செயல்பாடு என்று ராகுல்காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


  இதனிடையே, அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய நிதி மந்திரிக்கு எழுதியிருந்த கடிதத்தை தமது டுவிட்டர் பதிவில் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

  சென்னை:

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசி, ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
  • இன்றைக்கு இந்தியா ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

  புதுடெல்லி :

  மத்திய செலவினத்துறையின் கூடுதல் செயலாளர் சஜ்ஜன் சிங் யாதவ் 'இந்தியாவின் தடுப்பூசிகள் வளர்ச்சி கதை' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். டெல்லியில் நேற்று இந்த புத்தகத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசினார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  உலகளவில் பயன்படுத்தப்படுகிற அனைத்து தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுபவை ஆகும். பல பத்தாண்டுகளில் உலகளவில் தடுப்பூசி வினியோகத்தில் இந்தியா சிறப்பான பங்களிப்பை தனி ஒரு நாடாக செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசி, ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

  இன்றைக்கு இந்தியா ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக அந்த அளவுக்கு அதிகமாக தடுப்பூசிகளை தயாரிப்பதும், அவற்றை போடுவதும் எளிதான ஒன்று அல்ல.

  பொது முடக்க காலத்திலும்கூட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்தது. உலகளவில் நமது நாடு தடுப்பூசிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்பது இந்தியாவின் மரபணுவில் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிராக 208 கோடியே 57 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.