என் மலர்tooltip icon

    இந்தியா

    GST சீர்திருத்த பலன்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
    X

    GST சீர்திருத்த பலன்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

    • அமெரிக்கா விதித்த 50சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.
    • நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017இல் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை ஜிஎஸ்டி கொண்டிருந்தது. 8 ஆண்டுகளாக இவ்வரி மாற்றம் இன்று வசூலுக்கப்பட்டு வந்த நிலையில் இந்நிலையில் அண்மையில் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்பட்டது.

    கடந்த மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. மேலும் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இன்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

    அதில் பேசிய நிர்மலா சீதாராமன், "நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளன.

    செப்டம்பரின் கடைசி ஒன்பது நாட்களில் மட்டும் பயணிகள் வாகன விற்பனை 3.72 லட்சம் அலகுகளாகவும், இருசக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் அலகுகளாகவும் உயர்ந்துள்ளது. டிவி விற்பனை 30-35% ஆகவும், ஏ.சி. விற்பனை இருமடங்காகவும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.

    அதாவது, இந்த சீர்த்திருத்தம் குறித்து கடந்த ஒன்றை வருடங்களாக திட்டமிடப்பட்டது என்றும் எனவே வர்த்தக போருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

    செய்தியாளர்களிடம் அஸ்விணி வைஷ்ணவ் பேசுகையில், "ஜி.எஸ்.டி. குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

    பியூஷ் கோயல் பேசுகையில், "ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் உள்நாட்டு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    8 நாட்களில் 1.65 லட்சம் மாருதி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. மகேந்திரா கார் விற்பனை 50% அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா கார்கள் விற்பனையாகியுள்ளன" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×