என் மலர்

  நீங்கள் தேடியது "டாஸ்மாக்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
  • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  சென்னை:

  தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

  இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

  அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

  மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

  இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

  நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

  கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக மக்கள் நலன் கருதி படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • பிரதமரால் சென்னையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய விமான நிலைய வளாகத்தில் காமராஜரின் உருவ சிலையை நிறுவ வேண்டும்.

  சென்னை:

  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் போரூரில் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்தது.

  கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

  தமிழக மக்கள் நலன் கருதி படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

  இந்தியாவின் புதிய அடையாளமாக பாராளுமன்ற புதிய கட்டிடத்தையும், தமிழர்களின் நீதிக்கும், நேர்மைக்கும் மதிப்பளிக்கும் வகையில் பாராளுமன்ற அவைக்குள் தமிழர்களின் செங்கோலையும் நிறுவி பெருமை சேர்த்த மோடிக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

  பிரதமரால் சென்னையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய விமான நிலைய வளாகத்தில் காமராஜரின் உருவ சிலையை நிறுவ வேண்டும். தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கிட தமிழக அரசு முன் வரவேண்டும்.

  தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பதநீர், கள் இறக்கி விற்றுக் கொள்ளும் உரிமையை பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும்.

  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
  • இந்த 4 கடைகளுமே அரசு அனுமதி பெற்ற பார் என பிளக்ஸ் பேனர் வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை ஒட்டி பார் செயல்பட்டு வந்தது. இந்த 4 கடைகளுமே அரசு அனுமதி பெற்ற பார் என பிளக்ஸ் பேனர் வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த கடைகளில் அதிகாலை முதலே மது விற்பனை நடைபெற்றது.

  இந்த நிலையில் டாஸ்மாக் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் 2 கடைகள் மட்டுமே, அரசு அனுமதி பெற்றுள்ளது என தெரிய வந்தது. மேலும் 2 கடைகள் அனுமதி பெறாமல், அனுமதி பெற்ற கடையை போல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

  அனுமதி பெறாமல் இயங்கிய பார்களை உடனடியாக மூட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதிகாரிகள் ஆய்வை அடுத்து அனுமதி பெறாமல், இயங்கிய வந்த 2 பார்களும் மூடப்பட்டது.மேலும் உரிய லைசென்ஸ் பெறாமல் பார் நடத்தினால் பாரில் பணி புரிபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார்.
  • பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

  தஞ்சாவூர்:

  தஞ்சையில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  அரசாங்கமே டாஸ்மாக்கை திறந்து வைத்துள்ளது. தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவத்தில் முதலில் மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறினர். பின்னர் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இதுவரை சரியான உண்மை தகவல் இல்லை.

  தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை.

  பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

  அவர்கள் தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள். அதற்காக தமிழ், தமிழ்நாடு என கூறி வருகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்கு உள்ளே வைக்க வேண்டியது தானே? ஏன் வெளியே வைத்துள்ளார்கள். செங்கோல் வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு.
  • வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தகவல்.

  தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

  அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இந்த நிலையில், சோதனையின் போது வீட்டின் வெளியே திரண்ட குமார் மற்றும் மேலும் சிலரை அதிகாரிகள் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மீது கையால் தாக்கியது, தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர்.
  • தாக்குதலில் காயமுற்ற நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

  அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  இந்த நிலையில், அதிகாரிகளை தடுத்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கரூர் மாவட்ட காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

  வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.
  • பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  சென்னை :

  சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் விசாகன் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

  அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். இதில் எந்தவித விதிமீறல்களும் இருக்கக்கூடாது. அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்.

  மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப்பட்டியல், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபான கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதிசெய்ய வேண்டும்.

  முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள், அவரவர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் எதுவும் செயல்படும் பட்சத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும், மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களைக் கண்டறிந்து, காவல்துறைக்கு தெரிவித்து, அவர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மாவட்ட மேலாளர்கள் தினந்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. அதில் எதுவும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். அப்பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  அனைத்து விதிமுறைகளையும் செவ்வனே செயல்படுத்தி அனைத்து நிலை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு.
  • அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை.

  தமிழகம் முழுக்க வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடரந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

  கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. தமிழகத்தின் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

  கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது, அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

  இந்த நிலையில், நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  • கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தம்.

  தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

  சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறியதாவது.,

  "கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை. சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்."

  "சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும். ," என்று தெரிவித்தார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
  • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  கரூர்:

  தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் இந்த சோதனையானது நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

  இந்நிலையில் கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

  இதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டது. 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

  இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு செய்வார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin