search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
    • பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை.

    புதுடெல்லி:

    கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை(272 இடங்கள்) கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது.

    அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    240 தொகுதிகளை வைத்துக்கொண்டு மோடி பிரதமராகிறார். ஜவகர்லால் நேரு தொடர்ந்து 3 முறை தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆனார். இருப்பினும் அவர் ஜனநாயகவாதியாகவே இருந்தார். ஆனால் பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை.

    மோடியின் நயவஞ்சகத்திற்கு அளவே கிடையாது. அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் அவரது ஆட்சி இருந்தது. மோடி அரசு முறைகேடான அரசாக இருந்தது. பணம், அதிகாரம், ஊடகம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலை பயன்படுத்தி ஆட்சி செய்தார்கள்.

    இந்த புதிய அரசாங்கத்தை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக நான் பார்க்கவில்லை, ஏனெனில் மக்களின் தீர்மானம் மோடிக்கு எதிராகவே உள்ளது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
    • பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி நாளை பதவியேற்க உள்ளார்.

    தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்ம்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு வரும்போது அது குறித்து சிந்திப்போம் என தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அவையின் மொத்த இடங்களில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டாக பல தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதனால் நாடுமுழுவதும் காங்கிரஸ்காரர்கள் சோர்வில் இருந்தனர்.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமார் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

    நடந்து முடிந்த 18-வது பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.


    இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையானது என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • காபந்து பிரதமருக்கு கண்ணியமும், தார்மீகமும் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? அவரை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.
    • ஐக்கிய ஜனதாதளம், பீகாருக்கு சிறப்பு நிதிதொகுப்பு வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக கேள்விப்படுகிறோம்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பதவி விலகப்போகும் பிரதமர் மோடி, இப்போது காபந்து பிரதமர் ஆகிவிட்டார். காபந்து பிரதமர், 1962-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே கட்சி 3-வது தடவையாக ஆட்சி அமைப்பதாக மார் தட்டுகிறார். அவர் வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார்.

    ஜவகர்லால் நேரு 1952-ம் ஆண்டு 364 தொகுதிகளிலும், 1957-ம் ஆண்டு தேர்தலில் 371 தொகுதிகளிலும், 1962-ம் ஆண்டு தேர்தலில் 361 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். ஆனால் மோடி 2024-ம் ஆண்டில் வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இது அவருக்கு எதிரான பெரிய தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை நாசமாக்குவதை நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார்.

    கடந்த 1989-ம் ஆண்டு தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 197 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி நினைத்திருந்தால், ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். ஆனால், அவர் கண்ணியமும், தார்மீகமும் கருதி, அதை செய்யவில்லை.

    காபந்து பிரதமருக்கு கண்ணியமும், தார்மீகமும் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? அவரை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.

    ஐக்கிய ஜனதாதளம், பீகாருக்கு சிறப்பு நிதிதொகுப்பு வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக கேள்விப்படுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான முந்தைய நிலைப்பாட்டில் மோடி உறுதியாக இருப்பாரா?" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • மாவட்ட கலெக்டர்கள் மீது யாராவது ஒருவரால் செல்வாக்கு செலுத்த முடியுமா?.
    • வதந்தி பரப்பி எல்லோர் மீதும் சந்தேகத்தை கிளப்புவது சரியானது அல்ல.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஜூலை 1-ந்தேதி) முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 150 மாவட்ட கலெக்டர்களுடன் பேசினார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.

    மாவட்ட கலெக்டர்கள்தான் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவின் போது முறைகேடு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி ராஜிவ் குமார் கூறியதாவது:-

    மாவட்ட கலெக்டர்கள் மீது (தற்போது தேர்தல் அதிகாரி) யாரேனும் ஒருவர் செல்வாக்கு செலுத்த முடியுமா?. யார் செய்தது என்று எங்களிடம் யார் என்று சொல்லுங்கள். யார் செய்தாலும் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். வதந்தி பரப்பி ஒவ்வொருவர் மீது சந்தேகத்தை கிளப்புவது சரியானது அல்ல.

    வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம். கட்டுப்பாட்டு பிரிவுகளின் இயக்கங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு செய்யப்படும்.

    இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

    குற்றச்சாட்டு தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

    • 2019-ல் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் அதிகமான இடங்கள் கிடைக்கும்.
    • பல்டி அடிப்பது நிதிஷ் குமாரின் பழைய பழக்கம். ஜூன் 4-ந்தேதி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை.

    பாராளுமன்ற மக்களை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முழு மெஜாரிட்டியை பெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வரிசையில் நிற்கும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி தெளிவான தீர்க்கமான முழு மெஜாரிட்டியை பெறும். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைவதற்கான வரிசையில் நிற்கும்.

    2019-ல் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் இந்தமுறை பல மாநிலங்களில் மிகச் சிறந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும்.

    தேர்தல் முடிவுக்குப் பிறகு நிதிஷ் குமார் மற்றொரு பல்டி அடிக்க வாய்ப்புள்ளது என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பல்டி அடிப்பது நிதிஷ் குமாரின் பழைய பழக்கம். ஜூன் 4-ந்தேதி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை. ஆனால், நாங்கள் அவர் இல்லாமல் அதிகாரத்தை பிடிக்க போகிறோம். இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது. அங்கே ஐக்கிய ஜனதா தளத்தின் உதவி தேவையில்லை.

    பீகாரில் இருந்து ஆச்சர்யமான முடிவை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அங்கே பல்டி தேவையிருக்காது. ஆனால் பல்டியடிக்க விரும்பினால், அதை நம்மால் தடுக்க முடியாது.

    ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா மாநிலங்களில் 2019-ல் நாங்கள் முற்றிலுமாக தோல்வியடைந்தோம். இந்த மாநிலங்களில் எங்களுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என்பதை பார்க்கப் போகிறீர்கள். ராஜஸ்தானில் எங்களுடைய செயல்திறன் நன்றாக உள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் நாங்கள் கூட்டணியாக சிறந்த செயல்திறனை அடைவோம்.

    நான் இதை டெல்லியில் இருந்து சொல்லவில்லை. இந்த மாநிலங்களுக்கு எல்லாம் சென்றுள்ளேன். எங்களுடைய தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றுள்ளனர். 2019-ல் அவர்களுக்கு இருந்த சூழ்நிலை போன்று தற்போது எங்களுக்கு நிலவுகிறது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • வெளிப்படையாக பதில் அளிக்கக் கூடிய மற்றும் பொறுப்பான அரசை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
    • வெற்றியின் போது பெரிய மனதுடன் இருப்போம். பழி வாங்கும் அரசியல் இருக்காது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பி.டி.ஜ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியக் கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. 272-க்கு மேல் மிக அதிகமான இடங்களை பெறுவோம்.

    இந்தியா கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்த 48 மணி நேரத்துக்குள் பிரதமரை இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும். 2004-ல் மன்மோகன் சிங்கை 3 தினங்களுக்குள் பிரதமராக தேர்வு செய்தோம். தற்போது 48 மணிநேரத்திலேயே முடிவு செய்து விடுவோம்.

    இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சி பிரதமர் பதவிக்கு தானாகவே உரிமை கோரும். இந்தியா கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்கள் அணிக்கு வரலாம். அப்போது அந்த கட்சிகளை சேர்ப்பதா? இல்லையா? என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் தீர்மானிக்க வேண்டும்.

    மக்கள் ஆதரவை பெற்ற இந்தியா கூட்டணி அரசு நிலையாக இருக்கும். வெளிப்படையாக பதில் அளிக்கக் கூடிய மற்றும் பொறுப்பான அரசை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

    வெற்றியின் போது பெரிய மனதுடன் இருப்போம். பழி வாங்கும் அரசியல் இருக்காது. ஓய்வுக்கு பிறகு அவர் (மோடி) வாழ்க்கை எப்படி இருக்க போகிறது. தியானம் செய்யப் போகிறார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எங்கள் நிலை மேம்படும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்களை பெறும் கட்சியாக இருக்கும். பல்வேறு மாநிலங்களில் காங்கிரசுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. வெவ்வேறு உத்திரவாதங்கள் அளிக்கப்பட்டன. இது இந்தியா கூட்டணியை மேம்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், ​​காந்தியை பற்றி மக்கள் தெரிந்து கொண்டார்கள்.
    • நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவரது சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான்.

    1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "மகாத்மா காந்தி ஒரு சிறந்த ஆன்மா. கடந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அறியச் செய்வது நமது பொறுப்பு அல்லவா?

    தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நிகரானவர் மகாத்மா காந்தி.

    காந்தி மூலமாக இந்தியா கவனம் பெற்று இருக்க வேண்டும். காந்தியின் தத்துவம் உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "1982 க்கு முன் மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லும் பதவி விலகும் பிரதமர் எந்த உலகில் வாழ்கிறார் என்று தெரியவில்லை.

    மகாத்மாவின் பாரம்பரியத்தை யாராவது அழித்திருந்தால், அது பதவி விலகும் பிரதமரே. வாரணாசி, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய நிறுவனங்களை அவரது சொந்த அரசாங்கம் அழித்துவிட்டது.

    மகாத்மா காந்தியின் தேசியத்தை அறியாத ஆர்எஸ்எஸ்காரர்களின் அடையாளம் இதுதான். நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவரது சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான்.

    2024 தேர்தல் மகாத்மா காந்தி பக்தருக்கும் கோட்சே பக்தருக்கும் இடையே நடைபெற உள்ளது. பதவி விலகும் பிரதமர் மற்றும் அவரது கோட்சே பக்தர் கூட்டாளிகளின் தோல்வி உறுதியாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • 2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது.
    • குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது மனிதர்களுக்கு இடையிலான அழகுப் போட்டி அல்ல. நாங்கள் கட்சி சார்ந்த ஜனநாயகம். எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கும் என்பது கேள்வி.

    கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கும். கட்சி தனது தலைவரை தேர்ந்தெடுத்து அந்த தலைவர் பிரதமராகிறார்.

    2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை 4 நாட்கள் கூட ஆகாது. 2 நாளில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். எம்.பி.க்கள் கூடி தேர்வு செய்வார்கள். இது ஒரு செயல்முறை.

    குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல. சில மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். மிகப் பெரிய கட்சியின் வேட்பாளர் பிரதமர். 2004-ம் ஆண்டில் எப்படி நடந்ததோ அப்படியே நடக்கும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார்.
    • அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார்.

    பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது, சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனக் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் தனது நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார். உண்மை மீது அவருக்கு ஒருபோதும் பற்று இருந்ததில்லை.

    அவர் ஒரு பொய்யர் (jhoothjeevi). இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார். அவர் மங்களசூத்ரா பற்றி பேசுகிறார். அவர் முஸ்லிம் லீக் பற்றி பேசுகிறார். காங்கிரஸ் கட்சி மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கிறது என பேசுகிறார். இவை அனைத்தும் அவர் கூறிய பொய்யானவை.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
    • பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதம் அடிப்படையில் வாக்காளர்களை பிரித்தவர் பிரதமர் மோடி. தற்போது இந்து- முஸ்லிம் அரசியல் பற்றி பேசவில்லை என பொய் சொல்கிறார். பிரதமர் மோடி தற்போது அவுட்கோயிங் (வெளியேறும்) பிரதம மந்திரியாகியுள்ளார். தொடக்க கால வாக்குப்பதிவுக்குப் பிறகு அவரின் விரக்தி இதை காட்டுகிறது. அமித் ஷா அவுட்கோயிங் உள்துறை மந்திரி. ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பொய்கள் என்ற தொற்றில் இருந்த நாம் விடுபடுவோம்.

    இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும். பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது. அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

    நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பா.ஜனதா அரசு மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இந்தியா கூட்டணி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. நாங்கள் இந்த தேர்தலில் அதுபோன்ற நிறுவனங்களை பாதுகாக்க போராடி வருகிறோம். வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பேசாது. ஆனால், உள்ளடக்கிய பகிர்ந்தளிப்பு பேசியது.

    இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
    • கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். அதற்கான வேட்மனுவை இன்று பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இத்தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    அப்போது பேசிய மோடி, "கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.

    இந்நிலையில், கங்கை நதி குறித்து மோடி பேசியது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

    • கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ.20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்?

    • மோடி, தான் தத்தெடுத்த வாரணாசி கிராமங்களை கைவிட்டது எதற்கு?

    • வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்?

    என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

    ×