என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டையன்"

    • தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி
    • எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார்.

    தவெக மூன்றாமாண்டு தொடக்கவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர்,

    "முதன்முதலில் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமா படத்தைப்போல 100 நாட்கள்தான் இது ஓடும் என்றார்கள். ஆனால் அவர் உயிருள்ளவரை அவர்தான் அவர்தான் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். அதற்கு பிறகு பொறுப்பேற்ற ஜெயலலிதா இருந்தவரை அந்த இயக்கத்தை யாராலும் அசைக்கமுடியவில்லை. இன்று, நாளை தமிழ்நாட்டை ஆளப்போகிறேன். எதிர்கால தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறேன் என தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதுபோல தொடர்ந்து பல இடங்களில் விஜய்யை புரட்சித்தளபதி எனக்கூறி வருகிறார். இந்நிலையில் விஜய்யை செங்கோட்டையன் இவ்வாறு அழைப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "இதுகுறித்து நான் கண்ணீர்தான் விடவேண்டும். எங்களுடன் இருந்த ஒரு பெரியமனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டாரே என்று கண்ணீர்தான் விடவேண்டும். எல்லோருக்கும் ஒரு தகுதி இருக்கும். எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார். அப்பொழுதும் அவரை நான்காவது, ஐந்தாவது இடத்தில்தான் உட்கார வைத்துள்ளனர். எங்களுக்கு அந்த நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் கண்ணீர் வடிக்கிறோம். அவரது நிலை தாழ்ந்து விட்டது" என தெரிவித்துள்ளார். 

    • தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.
    • தவெக நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும். வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியது பரபரப்பி ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தொடர்ந்து தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.

    அப்போது பேசிய செங்கோட்டையன், "விசில் அடிச்சிட்டு போகட்டும் விடுங்க... ஒன்னும் பண்ண முடியாது போயிடலாம் வாங்க... விசில் அடிக்கிறதை நிறுத்த மாட்டாங்க... என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
    • தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள்.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக வெற்றிக்கழகத்தின் ஒரே எதிரி தி.மு.க. தான். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.

    * தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல.

    * தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

    * த.வெ.க. சார்பில் விருப்ப மனு அளிக்க வந்து 15,000 பேர் திரும்ப சென்றதால் ஆன்லைனில் விருப்ப மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * த.வெ.க. கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள்.

    * குறுகிய காலக்கட்டத்தில் கூட்டணி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது.
    • 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார்.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுவாக தமிழக மக்கள் இரண்டு இயக்கங்களே தமிழகத்தை ஆள வேண்டுமா? என்று சிந்தித்து வருகின்றனர். புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மக்கள் புதிய தலைமையை முடிவு செய்து விட்டனர். அந்த நோக்கத்தோடு எங்களது தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு வருகிறது.

    தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜயை பற்றி மற்ற கட்சிகள் கருத்து சொல்வதற்கு காரணம், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை ஒவ்வொரு இயக்கங்களும் மாறி மாறி கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேர் தமிழகத்தில் தேர்தல் எப்போது நடக்க போகிறது என்பதற்காக பதிவு செய்து, காத்திருக்கும் வரலாறு இந்திய வரலாற்றில் இடம் பெறப்போகிறது.

    புதிய தலைமை ஆளவேண்டும். அதுவும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது. எனவே 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும்.

    அ.தி.மு.க வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் தி.மு.க.வை தான் பேச வேண்டும். இதில் இருந்தே பி டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

    அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தோல்வி பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட காரணத்தால் தான் இப்படி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்க வேண்டியது. ஆனால் தோல்வி பயம் வந்ததன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார் என்றார். 

    • வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.
    • தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலகத்தை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் செங்கோ டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * த.வெ.க.தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது .

    * அனைத்து இல்லங்களிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துகொண்டு இருக்கிறது.

    * 3-ம் ஆண்டு விழாவில் விஜய் சிறப்பாக உரையாற்றினார். அவருடைய இலக்கு தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆண்டு உள்ளன. இந்த முறை மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

    * வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.

    * தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.

    * ராசிபுரம் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டத்தில் அவர்களே த.வெ.க கொடியை பிடித்து விட்டு த.வெ.க.வினர் வந்தனர் என தவறாக கூறியுள்ளனர்.

    * வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் விருப்ப மனு அளிக்க உள்ளேன்.

    * முருகன் பக்தி பாடலை பாடி வேல்முருகன் ஆட கூறியதால் விஜய் நடனம் ஆடினார். அதை விமர்சனம் செய்கிறார்கள். நயினார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லை.

    * எப்போதும் விஜயுடன் தான் இருப்பேன். 2 நாட்களில் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    * ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட் குறித்து பேசுகிறோம்.

    * திண்டுக்கல் சீனிவாசன், விஜய் கருப்பு பணம் வாங்குவது குறித்து ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது.

    * அவர்கள் யாரிடம் அடிமையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    * த.வெ.க.தனித்துப் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மவுனம் வெற்றிக்கு அறிகுறி என்றார்.

    இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் த.வெ.க.வால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரியாது, தி.மு.க.விற்கு தான் பாதிப்பு என்று சொல்லி உள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு,

    2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவுக்கு பிறகு யார் எங்களை கண்டு அச்சப்படுகிறார்கள். யாருக்கு நாங்கள் போட்டி. யாருடைய வாக்கு வங்கி சரிகிறது என்பது தெரியவரும், என்றார்.

    • ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார்.
    • நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .

    ஈரோடு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக அலுவலகத்தை தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே .ஏ .செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தைப்பூச நாளன்று இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது .இதற்காக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எந்த திசையை காண்பிக்கிறாரோ அதைநோக்கி செல்ல தயாராக இருக்கிறோம்.

    தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளது. அவருடைய வெற்றி உறுதி என்ற நிலையில் உள்ளது.

    தமிழகத்தில் தற்பொழுது ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு மாற்றாக தமிழக வெற்றி கழகம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் அவர் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலோடு மக்கள் இருக்கின்றனர்.

    ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார். கூட்டணியில் யார் வரவேண்டும் என்பதை தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். மேலும் அவர் எந்த தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். விரைவில் மாற்றுக் கட்சியிலிருந்து இக்கட்சியில் ஏராளமானோர் சேர உள்ளனர். நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .

    அந்த கட்சி தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கு இன்னும் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரே நியமிக்கப்படவில்லை. மேலும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ தான் தற்பொழுது பொறுப்பு வகித்து வருகிறார். இதிலிருந்து அந்த கட்சியினுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடுகளிலும் மகன், மகள், மனைவி ஆகியோர் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்து விட்டனர் என்றார்.

    பேட்டியின் போது மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜம்பு கார்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • செங்கோட்டையன் அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார்.
    • த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார்.

    இதையடுத்து, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "செங்கோட்டையன் அவர்களை எனக்கு 30 வருடங்களுக்கு மேலாக தெரியும். எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே என்று வருத்தப்படுகிறேன். அவரை முழுவதுமாக உணர்ந்தவன் என்ற அடிப்படையில் வருத்தப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

    • யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் .
    • கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும்.

    தமிழக வெற்றிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம், ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன்,

    யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் . என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தானே தெரியும். யாருடன் கூட்டணி பேச்சு என்பதை சொல்லாமல் இருப்பது தான் சரி.

    டி.டி.வி. தினகரன் சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்.

    ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இப்போதுதான் செய்தி வந்தது. கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும் என்றார். 

    • விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    "அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு புதிய முகத்தை, எதிர் கால தமிழ்நாட்டை ஆளப் போகிற தமிழக வெற்றிக் கழக தலைவருடன் இணைந்து இந்த பணிகளை ஆற்றுகிற நல்ல வாய்ப்பை எனக்கு தந்து இருக்கிறார்கள். இங்கு எல்லோர் கையிலும் விசில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நாளை காவல்துறை கூட விசிலை வைக்க முடியாத சூழல் ஏற்படும்.

    அதை போலத்தான் பஸ்சில் பயணம் செய்கின்ற போது கண்டக்டர் விசில் அடிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகும். விஜய் திரைப்படத்தில் ஹீரோ அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தினுடைய ஹீரோ என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு ஆளுக்கு 1000 ரூபாய். தொலை தூரத்திலே தாய்மார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் பேசியவர்கள் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று குரல் கொடுத்தார்கள். ஒருவரும் கை தட்டவில்லை.

    ஆனால் தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி நம்முடைய தலைவர்தான். 10 கூட்டணி, 8 கூட்டணி ஆகியவற்றை தூள் தூளாக்குகிற சக்தி த.வெ.க. தலைவராக மட்டுமல்ல எதிர்கால தமிழ்நாட்டை ஆளப் போகிற நம்முடைய விஜய்க்குதான் உண்டு. நான் பல தலைவர்களை பார்த்து இருக்கிறேன். புரட்சித் தலைவரை பார்த்தேன். அப்போது 26 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினர். அப்போது உங்களை போலத்தான் நானும் இருந்தேன்.


    இந்திய வரலாற்றில் யாருக்கும் இல்லாத புகழ் விஜய்க்கு இருக்கிறது. ரூ.1000 கோடி வருவாயை வேண்டாம் என்று கூறி விட்டு மக்களை காப்பதற்காக ஒரு தலைவர் இங்கு வந்திருக்கிறார் என்று சொன்னால் இந்த தலைவரின், ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வையை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு எந்த வீட்டை எடுத்துக் கொண்டாலும் விஜய்க்குதான் ஓட்டு உள்ளது.

    கேட்காமல் கொடுக்கக்கூடிய ஒரு தலைவர் தமிழ்நாட்டில் தோன்றப் போகிறார். அவர் முதல்-அமைச்சராக வரப்போகிறார். அந்த வரலாறு படைக்கப்படும். 10 கட்சிகளின் கூட்டணியை அசைத்து விட முடியுமா? என்று நினைக்கிறார்கள். எல்லோரும் ஆடிப்போய் நிற்கிறார்கள். ஏனென்றால் அந்த இரு கட்சிகளிலும் இருக்கின்ற தலைவர்கள் தலைவர்களே அல்ல. தலைமை என்பது வேறு. இன்று இருக்கிற தலைமை ஆடிப் போய் இருக்கிறது.

    இவரை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆக்குவோம் என்று மக்கள் சூளுரை ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்தக்கூடிய ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வை, மனித நேயம் ஆகியவற்றுடன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை தமிழகத்தில் உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் விஜய் மட்டும்தான். எந்த சக்தியாலும் தமிழ்நாட்டில் இனி விஜய்யை தடுத்து நிறுத்த முடியாது. அவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது. நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும்.

    வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இங்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கூடுகிற கூட்டத்தை பார்க்கும் போது நம்மை வெல்வதற்கு எந்த சக்தியும் இனி தமிழ்நாட்டில் இல்லை என்று வரலாறு படைக்கின்ற காலம் அமையும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • கூட்டணிகளை தூளாக்கும் சக்தி த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டும் தான் உண்டு.
    • எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்.

    மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது.

    மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதையடுத்து த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே தளபதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான்.

    * கூட்டணிகளை தூளாக்கும் சக்தி த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டும் தான் உண்டு.

    * தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்போர் தலைவர்களே இல்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • செங்கோட்டையன் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார்.
    • நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாக தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும்.

    உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அதில் முதல் இடம் விஜய்க்கு தான். 2-வது இடத்தில் தான் பிரதமர், 3-வது இடம் முன்னாள் ஆந்திர முதல்-அமைச்சர், 4-வது இடத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.

    அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்பதை காலம் பதில் சொல்ல இருக்கிறது.

    ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவரே 100 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்தால் எங்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பாக இருக்கும் என அ.தி.மு.க.வை பார்த்து குறிப்பிட்டார். அப்படி என்றால் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று பொருள்.

    தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார். அதுபோன்று தற்போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் வரலாறு படைப்பார். தலைவர் வருவார். முதல்வர் ஆவார் என்று தான் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

    நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளுமே வேண்டாம். புதிய முகம் தான் தேவை என தமிழக மக்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.

    பொதுவாகவே ஒரு திரைப்படத்தை வெளியிடும் போது வளர்ந்து வரும் இயக்கங்களுக்கு இதுபோன்ற தடைகள் வரும். பொங்கல் வரை காத்திருங்கள். அதற்குள் எத்தனை பேர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என்று பாருங்கள். டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நமது கூட்டணியில் இடம் பெறுவார்கள்.

    மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது. அங்கு பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தான் சாலையில் ரோடு ஷோ நடத்தப்படும். பொதுவாக அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. ஆனால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஆன வரலாறும் அங்கே உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் எழுச்சியாக இருந்தது. அது ஒரு மாற்றத்தை உருவாக்கும். திரைப்படம் வெளியான பிறகு மக்களை வியக்கத்தக்க வகையில் அந்த படம் இருக்கும் என்றார்.

    ×