என் மலர்

  நீங்கள் தேடியது "ஐரோப்பிய ஒன்றியம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது.
  • உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

  பிரஸ்ஸல்ஸ்:

  நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும்.

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.

  இதற்கிடையே, உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளது. அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

  இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வரி தகராறு காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை பலர் புறக்கணிக்கும் முடிவில் இருக்கின்றனர். இது சிறப்பான ஒன்று என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். #Trump #HarleyDavison
  வாஷிங்டன்:

  அமெரிக்க தயாரிப்புகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரியை சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் அதிரடியாக உயர்த்தினார்.

  இதனால், போட்டி போட்டுக்கொண்டு மேற்கண்ட நாடுகளும் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்த வரி அதிகரிப்பு தகராறுகளால் வணிக யுத்தம் நிகழும் சூழல் உருவானது. இந்த தகராறுகளின் ஒரு பகுதியாக அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரியை 31 சதவிகிதமாக ஐரோப்பிய நாடுகள் கூட்டின.

  இதனால், அமெரிக்காவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.

  ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியிருந்தார்.

  எனினும், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முடிவில் உறுதியாக இருந்தது. தனது ராஜ தந்திரங்கள் பலிக்கவில்லை என டிரம்ப் நினைத்தாரோ என்னவோ, தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு எதிராக கருத்து வெளியிட தொடங்கியுள்ளார்.

  ‘நிறைய ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் அந்த நிறுவனத்தை புறக்கணிக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். சிறப்பு! அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் நம்மை நோக்கி வருகின்றனர். உண்மையில் ஹார்லி நிறுவனத்தின் முடிவு தவறான ஒன்று’ என டிரம்ப் தற்போது ட்வீட் செய்துள்ளார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ஐரோப்பாவில் இனி உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. #Trump #HarleyDavison
  வாஷிங்டன்:

  அமெரிக்க தயாரிப்பு பொருட்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இறக்குமதி பொருட்கள் பலவற்றுக்கு வரியை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்தது. அலுமினியம் மற்றும் ஸ்டீஸ் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப்பின் நடவடிக்கை கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை கொடுத்தது.

  இதனால், போட்டிக்கு போட்டியாக அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான வரியை  சீனா உயர்த்தியது. இதனால், வணிக யுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  இதனால், முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. 

  இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.  ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
  ×