என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.

    ரிஷபம்

    தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    மிதுனம்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். அரசு வழியில் கேட்ட உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கும்.

    கடகம்

    யோகமான நாள். உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணையாக விளங்குவர்.

    சிம்மம்

    போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    கன்னி

    சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    துலாம்

    காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். கவலைக்குரிய தகவல் வந்து சேரலாம். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    விருச்சிகம்

    யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    தனுசு

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். உங்களை பொல்லாதவர்கள் விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    மகரம்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

    கும்பம்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். தடம் மாறிச் சென்ற நண்பர்கள் திரும்பி வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    மீனம்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும்.

    • விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
    • ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இ

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    * ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.

    * விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

    * ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    * ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.

    * ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.

    * மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.

    * ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

    * முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.

    * மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-4 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி காலை 11.19 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : கார்த்திகை இரவு 10.36 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருத்தணி முருகன் கோவிலில் தெப்பம், பார்த்தசாரதி கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரம். திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் பல்லக்கில் பவனி. நயினார் கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகி பல்லாங்குழி ஆடிவரும் கோலாகலக்காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-கவனம்

    கடகம்-பொறுப்பு

    சிம்மம்-பொறுமை

    கன்னி-ஆக்கம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- மேன்மை

    மகரம்-நற்சொல்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    நெருக்கடி நிலை அகலும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. உடல் நலம் சீராகும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    கடகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட பகை மாறும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும்.

    கன்னி

    யோகமான நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்கு உரிய செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அயல் நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும்.

    துலாம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்புக் குறையும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர்.

    விருச்சிகம்

    முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    தனுசு

    யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சனைகளைக் கண்டும், காணாமல் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவீர்கள்.

    கும்பம்

    விரோதிகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தினர்களுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும்.

    மீனம்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    • ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.
    • அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி,

    * தை மாதம் வரும் தை கிருத்திகை,

    * கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

    * ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

    இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

    ஆடி மாதக்கிருத்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    ஆடிக்கிருத்திகை தினமான நாளை பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

    ஆடிக்கிருத்திகை அன்று பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள்.

    உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவுகூரும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும்.

    அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    • பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • பக்தர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்காரம்.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-3 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி நண்பகல் 1.45 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.13 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், சனிபகவானுக்கு அலங்காரம்

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்காரம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். நயினார் கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் உற்சவம் ஆரம்பம். இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-பொறுமை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-நன்மை

    துலாம்- வரவு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பக்தி

    கும்பம்-களிப்பு

    மீனம்-உவகை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

    ரிஷபம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். இல்லத்தில் மனக்கசப்பு தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    மிதுனம்

    நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் உண்டு.

    கடகம்

    கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    சிம்மம்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். வாழ்க்கைத் தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    கன்னி

    ஆதாயம் கிடைக்க அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாகனப் பழுது செலவுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    துலாம்

    வம்பு வழக்குகள் வந்த வழியிலேயே திரும்பும் நாள். உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்ட முன்வருவர். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சிகம்

    தேசப்பற்றும், தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    தனுசு

    கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். கூடப்பிறந்தவர்களால் தொல்லை உண்டு. பயணத்தை மாற்றியமைக்க நேரிடும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    மகரம்

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். விரயங்களை சுப விரயமாக்கிக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருந்து விலக நேரிடும்.

    மீனம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் அதிக சம்பளம் தருவதாக அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    • ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது.
    • அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    சாத்தூர்:

    உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது. ஏன் என்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மாரியம்மன் கோவில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது. இந்த மாதத்தில் தென் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் மாதம் முழுவதும் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

     

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் குழுவாக கோவிலில் அம்மன் பாடல்கள் பாடி கையில் வேப்பிலையுடன் ஆடிக் கொண்டு கோவிலிலை வலம் வந்தனர். மேலும் இந்த கோவிலுக்கு சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி அம்மனை வணங்கினர்.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குமிடம், கழிவறை குளியலறை வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சார்பில் பரம்பரை அறங்காவலர் குமு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, மற்றும் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது ‘பூமி வாஸ்து.’
    • அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி ‘வீட்டு வாஸ்து’ குறிப்பிடும்.

    அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி 'வீட்டு வாஸ்து' குறிப்பிடும்.

    வீடு, மனை ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பது மட்டுமே 'வாஸ்து' என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நான்கு வகையான வாஸ்து உள்ளது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பூமி வாஸ்து

    நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது 'பூமி வாஸ்து.' மனையானது கிழக்கு மனையா, மேற்கு மனையா, வடக்கு மனையா, அல்லது தெற்கு மனையா என்பது பற்றிக் குறிப்பிடும். மேலும் மனைக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சாலையா, இரு பக்கமும் சாலைகளா, மூன்று புறங்களும் சாலைகளா, அல்லது நான்கு பக்கங்களும் சாலைகளா என்பதையும் எடுத்துக்காட்டும். பூமியில் சல்லிய தோஷங்கள் ஏதாவது உள்ளதா?, மனையானது சாலையில் இருந்து பள்ளத்தில் உள்ளதா?, அந்த மனையில் மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது என்பதையும் குறிப்பிடும்.

    வீட்டு வாஸ்து

    வீடு, அரண்மனை, வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் போன்ற அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி 'வீட்டு வாஸ்து' குறிப்பிடும். ஒரு இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எப்போது, எவ்வாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்பதையும், சொந்த வீடு அல்லது வாடகை வீட்டு விஷயங்களையும் இது எடுத்துக்காட்டும். மேலும் அந்தக் கட்டிடம் வங்கியா?, மருத்துவமனையா?, வணிக வளாகமா?, பள்ளி- கல்லூரியா?, ஓட்டலா?, உணவகமா?, தங்கும் விடுதியா?, தொழிற்சாலையா?, தகவல் தொழில்நுட்ப அலுவலகமா?, வாடிக்கையாளர் சேவை மையமா?, பொதுத்துறை நிறுவனமா?, ஊடகங்கள் சார்ந்த அலுவலகமா? என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்புகளையும் இது சொல்லும்.

    முக்கிய நுழைவுவாசல், வரவேற்பறை, பின்புறம் அமையும் வாசல்கள், சமையலறை, உணவு உண்ணும் அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின்சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம்-டாய்லெட் போன்ற எல்லா அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.

    இருக்கை வாஸ்து

    வீடுகள், வியாபார, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் பற்றி கூறுவது 'இருக்கை வாஸ்து.' ஒரு வீடோ, அலுவலகமோ அல்லது வேறு நிறுவனம் சார்ந்த கட்டிடங்களோ எதுவாக இருந்தாலும், அங்கு பணியாற்றுபவர்கள் அமர்வதற்கான இடம், மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய எல்லாவித தகவல்களையும் சொல்லும் வாஸ்து இது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பங்களையும் இது தெளிவுப்படுத்தும்.

    வாகன வாஸ்து

    இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தேர், பல்லக்கு போன்ற அனைத்து வகையான போக்குவரத்து சாதனங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் வாஸ்து இது. இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வீட்டின் அத்தியாவசிய ஒரு தேவையாக மாறிவிட்டது. அந்த வாகனத்தை வீட்டில் எப்படி நிறுத்துவது, வாகனங்களை எப்போது வாங்குவது, வாராந்திர பூஜை போன்ற முறைகளை இது விரிவாகச் சொல்கிறது. நமது பயணங்களுக்குத் துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி இந்த வாஸ்து பிரிவு குறிப்பிடுகிறது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-2 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி மாலை 4.11 மணி வரை பிறகு நவமி.

    நட்சத்திரம் : அசுவினி நள்ளிரவு 1.52 மணி வரை பிறகு பரணி.

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-கவனம்

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-புகழ்

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-கண்ணியம்

    கும்பம்-கடமை

    மீனம்-இன்சொல்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    ரிஷபம்

    சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

    மிதுனம்

    பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    சிம்மம்

    வழக்குகள் சாதகமாகும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் உருவான தொல்லை அகலும்.

    கன்னி

    விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.

    துலாம்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். வரவு திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.. கல்யாண முயற்சி கைகூடும்.

    விருச்சிகம்

    பயணம் பலன் தரும் நாள். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.

    தனுசு

    அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும் நாள். பழைய வாகனத்தைப் புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மகரம்

    வரவைவிட செலவு கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வேலையை நம்பி பழைய வேலையை விட வேண்டாம்.

    கும்பம்

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    மீனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    ×