என் மலர்
நீங்கள் தேடியது "வெங்கடேச பெருமாள்"
- இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும்.
- புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.
நாளை (20-ந்தேதி) புரட்டாசி முதல் சனிக்கிழமை. இந்த ஆண்டு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புமிக்கவை.
ஜாதக அமைப்பின்படி சனி திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8-ல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12-ல், 1-ல், 2-ல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.
இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை (தளிகை) சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட தோஷம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.

புரட்டாசி சனிக் கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனை தந்தருளும்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்லுங்கள். பெருமாளையும் தாயாரையும் வழிபடுங்கள். கோவிந்தனிடம் குறைகளையெல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை நடத்தி அருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!
ஆலயத்துக்கு செல்ல இயலாவிட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.
- ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி கிடைக்கும்.
- உறியடி திருவிழா 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.
சைவ தலங்களுக்கு புகழ் பெற்ற மதுரையில் வைணவத்தலங்களும் குறைவின்றி உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாகதான் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது கிருஷ்ணஜெயந்தி. இந்த விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடும் ஆலயங்களில் ஒன்று, ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பெயரில் பெருமாள் என இருந்தாலும் மதுரை பகுதி மக்களின் உச்சரிப்பில் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்றே கூறப்படுகிறது.
இதற்கு காரணம் இந்த கோவிலின் ஆதிமூர்த்தி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் என்பதால் தான். சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் அமைந்துள்ள வீதியின் பெயரும் கிருஷ்ணன் தெற்கு தெருதான்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தூவாரகை கிருஷ்ணனை மனதில் கொண்டு இங்கு நவநீதகிருஷ்ணன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து சவுராஷ்டிரா சமூக மக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். அப்போது முதலே இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளடைவில் கோவிலை வழிபட்டோர் கனவில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரர் பெருமாள் பிரசன்னமாகி தன்னையே பிரதிஷ்டை செய்ய சொன்னதால் ஆலயம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயமாக உருமாறியதாக வரலாறு கூறுகிறது.
கோவிலின் திருநாமம் மாறினாலும், ஆதிமூர்த்தியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபடுவதை பக்தர்கள் கைவிடவில்லை. இதனால் இங்கு கொண்டாடப்படும் உறியடித் திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு வாய்ந்த விழாவாக அமைந்துள்ளது.
உறியடி திருவிழாவுடன் நடைபெறும் கிருஷ்ணஜெயந்தி விழா இக்கோவிலின் ஆன்மீக பக்தர்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது நவநீதகிருஷ்ணன் உற்சவம் தங்கத் தொட்டிலிலும், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், தங்கப் பல்லக்கிலும் வீதி உலா செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணரை வழிபட்டால் சந்தான அபிவிருத்தி, புத்ர பாக்கியம் கிடைப்பது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இன்றளவும் சுவாமிக்கு பூஜை, நெய்வேத்தியம்., வெண்ணெய் சாத்தி அர்ச்சனை வழிபாடு போன்றவற்றை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு 13 அடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர். மதுரையில் வேறு எங்கும் இதுபோன்று சுதையில் (கற்சிலை) ஆஞ்சநேயர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரையில் புகழ்பெற்ற கூடழலகர் பெருமாள் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் போன்றவற்றிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
- துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.
லட்சுமி கடாட்சம் தரும் திருப்பதி
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.
ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.
பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.
வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதிரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.
அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
சந்திரன்சக்தி மிகுந்த கோவில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.
மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.
திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆன கதைகள் உண்டு.
இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.
துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.
திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால்தான் இவ்வளவு கூட்டம்.
செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால், பணம், என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம்தான்.
ஜோதிடப்படி மிதுன லக்னம், ரிசப லக்னம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.
அவர்கள் பெருமாள் வழி பாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடு இருக்கின்றனர்.
வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்டனர் என்று சொல்கிறார்கள்.
பெருமாள் சிரித்த ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்தபடுத்தும்.
அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.
குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.
நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.






