என் மலர்
அமெரிக்கா
- கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது.
- துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மீது இதுவரை இரண்டு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முதல் முறை அரங்கேறிய கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது.
அப்போது நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் அதன் பிறகு தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டினார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் மர்ம நபர் துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனால் டிரம்ப் மீது நடத்தப்பட இருந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் தோல்வியில் முடிந்தது. அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும், துப்பாக்கி சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது. இரண்டாவது முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட இருந்தது பற்றி பேசிய டிரம்ப், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நான் நாட்டை காப்பாற்றி விடுவேன் என்று எண்ணி என்னை சுட்டுத் தள்ள முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
- சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர்.
- சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர். கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
- ஜனநாயக் ஜனத கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர் அனூக் தனக்.
- பாஜக-அரசில் அங்கம் வகித்தபோது மந்திரியாக இருந்தார்.
அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி என்றாலும், மாநில கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (JJP) செல்வாக்கு பெற்ற கட்சியாகும்.
அரியானாவில் ஜேஜேபி ஆதரவுடன்தான் முதலில் பாஜக ஆட்சி அமைத்திருந்தது. மக்களவை தேர்தலின்போது இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சியின்போது துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக இருந்தார். அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அனூப் தனக் மந்திரியாக இருந்தார்.
தற்போதைய தேர்தலையொட்டு ஜேஜேபி கட்சியில் இருந்து அனூப் தனக் விலகி, பாஜக-வில் இணைந்துள்ளார். இந்த ஜேஜேபி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் துஷ்யந்த் சவுதாலாவின் தாயார் நைனா சவுதாலா, அனூப் தனக் கருநாகம் என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நைனா சவுதாலா கூறுகையில் "நாங்கள் அனூப் தனக்கிற்கு மரியாதை கொடுத்தும். ஆனால், அவரைவிட இரண்டு முகங்கள் கொண்டு பாம்பு சிறந்தது. குறைந்த பட்சம் ஒரு பாம்பு எந்த வழியில் கடிக்கும் என்பது தெரியும். அனூப் தனக்கிற்கு கடவுள் கருநாகம் முகத்தை கொடுத்துள்ளார்.
- கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.
- தனது தந்தை வன்முறையை விரும்பும் ஆள் கிடையாது என்று ரூத்தின் மகன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
கோல்ப் விளையாடும் டிரம்ப்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 நடக்க உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னால் அதிபர் டிரம்ப் மீது அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி பென்சில்வேனியா பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது காதில் குண்டு உரசிச் சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] புளோரிடா மாகாணத்தில் தனக்குச் சொந்தமான கோல்ப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

ஏகே 47 ஸ்டைல் ரைபிள்
டிரம்ப்பை குறித்து வைத்தே அந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் டிரம்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தூரத்தில் உள்ள இலக்கை குறி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கோப் பொருத்தப்பட்ட ஏகே 47 ஸ்டைல் ரைபிள் துப்பாக்கியையும் GoPro கேமரவையும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

உக்ரைனை ஆதரிக்கும் ஜனநாயகவாதி
இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏறி தப்பிய கருப்பு நிற காரை டிராக் செய்து அவரை கைது செய்துள்ளனர். 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் [Ryan Wesley Routh] என்பவரே அந்த நபர். இவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கு வலுவான ஆதரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ரயான் வெஸ்லி ரூத் ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சியின் ஆதரவாளர் என்பதும் 2022 ஆம் ஆண்டு ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பொதுவெளியில் வெளிப்படுத்தி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தொழில்முறையாக கட்டட தொழிலாளியான ரூத், உக்ரைனுக்கு சென்று ஆயுதம் ஏந்தி ரஷியாவுக்கு எதிராக போராட அதிக ஆர்வமாக இருந்துள்ளார். உக்ரைனுக்காக ஆயுதமேந்தி சாகவும் தான் தயார் என்று கூறி வந்துள்ளார். அமரிக்க அரசியலை கூர்மையாக கவனித்து தனது கருத்துக்களை எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்பவராக ரூத் இருந்துள்ளார். சுதந்திரம், ஜனாயநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்கை, அது சிரியாயதாக இருந்தாலும் செய்தாக வேண்டும் என்ற கருத்து கொண்ட ரூத், டிரம்ப்பின் கொள்கைகள் இவை அனைத்துக்கும் எதிரானவை என்று கருதியுள்ளார். தன்னை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தபோது எந்த ஆரவாரமும் ஆச்சரியமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர்களுடன் சென்றுள்ளார்.
வன்முறையை விரும்பாத உழைப்பாளி
கடந்த 2002 ஆம் ஆண்டு கையில் ஆட்டோமேட்டிக் துப்பாக்கியுடன் கிரீன்ஸ்போரோ நகரில் உள்ள கட்டடத்தில் தடுப்பை உடைத்து அத்துமீறி புகுந்ததற்காக ரூத் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தற்போதைய தேர்தலில் விவேக் ராமசாமி, நிக்கி ஹாலி உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்த ரூத்,அவர்கள் தேர்தலில் இருந்து பின்வாங்கியதை கண்டித்திருந்தார்.

இந்நிலையில் தனது தந்தை வன்முறையை விரும்பும் ஆள் கிடையாது என்று ரூத்தின் மகன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தனது தந்தை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டால் என்பதை தன்னால் நம்பமுடியவில்லை என்று தெரிவித்த அவரது மகன், அவர் கடின உழைப்பாளியும் சிறந்த மனிதனும் ஆவார் என்று தெரிவித்தார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் அவர் உழைத்தார் [has worked his whole f***ing life] என்றும் அவரது மகன் கூறுகிறார்.
- 2-வது முறையாக டொனால்டு டிரம்ப்-ஐ வெளிப்படையாக கொலை செய்ய முயற்சி.
- டொனால்டு டிரம்ப்-ஐ கொல்ல அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? என கேள்வி.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மைதானத்தை ஒட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டொனால்டு டிரம்ப்-ஐ குறிவைத்துதான் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 2-வது முறையாக வெளிப்படையாக டொனால்டு டிரம்ப்-ஐ கொல்ல முயற்சி நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் எலாக் மஸ்க்கிடம் ஒருவர் "ஏன் அவர்கள் டொனால்டு டிரம்ப்-ஐ கொலை செய்ய விரும்புகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எலான் மஸ்க் "மேலும், ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸை படுகொலை செய்ய யாரும் முயற்சி கூட செய்யவில்லை" எனக் பதில் கூறியுள்ளார்.
அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் உள்ளார். நான் வெற்றி பெற்றால் எலாஸ் மஸ்க்கிற்கு மந்திரிசபையில் இடம் அளிப்பேன் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது
- நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர்.
உலக அளவில் மார்க்கெட் கொண்டுள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது . அந்த வகையில் 2024 எம்மி விருது வழங்கும் விழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர். தொடர்ந்து இன்றைய தினம் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது,
❧சிறந்த ரிலாலிட்டி போட்டி - டிரையேட்டர்ஸ் [Traitors]
❧சிறந்த டிராமா சீரிஸ் - ஷோ கன் [Shogun]
❧சிறந்த டாக் சீரிஸ் தி டெய்லி ஷோ [The Daily Show]
❧சிறந்த ஆன்தாலஜி சீரிஸ் - பேபி ரெய்ன்டீர் [Baby Reindeer]

❧சிறந்த நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' [The Bear] சீரிஸ் நடிகர் ஜெர்மி ஆலன் வைட் [Jeremy Allen White]
❧சிறந்த துணை நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகர் எபோன் மாஸ் [Ebon Moss]
❧சிறந்த நடிகை விருது [ காமெடி] ஹேக்ஸ் [Hacks] நடிகை ஜீன் ஸ்மார்ட்
❧சிறந்த துணை நடிகை விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகை லிசா கோலன் [Liza Colon]

❧சிறந்த நடிகை விருது [டிராமா] - ஷோ கன் சீரிஸ் நடிகை அனா சவாய் [Anna Sawai]
❧சிறந்த துணை நடிகை விருது [டிராமா] - 'தி கிரவுன்' The Crown நடிகை எலிசபெத் டெபிக்கி [Elizabeth Debicki]
❧சிறந்த நடிகர் விருது [டிராமா] -ஷோ கன் சீரிஸ் நடிகர் ஹிரோயுகி சனாடா [Hiroyuki Sanada]
தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கான எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒருபோதும் நான் சரண் அடையமாட்டேன். நீங்கள் எனக்கு ஆதரவு அளிப்பதை எப்போதும் விரும்புகிறேன்- டிரம்ப்
- அமெரிக்காவில் அரசியல் வன்முறை அல்லது எந்தவொரு வன்முறைக்கும் எப்போதும் இடமில்லை- ஜோ பைடன்
குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உடன் நேரடி விவாதத்தில் ஈடுட்ட நிலையில், புளோரிடாவில் உள்ள கோல்ப் பிளபபில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது கோல்ப் கிளப் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதையடுத்து அதிகாரிகள் டிரம்பை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். முன்னதாக பிரசாரத்தின்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். எதுவும் என் வேகத்தை கட்டுப்படுத்தாது. ஒருபோதும் நான் சரண் அடையமாட்டேன். நீங்கள் எனக்கு ஆதரவு அளிப்பதை எப்போதும் விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், "அமெரிக்காவில் அரசியல் வன்முறை அல்லது எந்தவொரு வன்முறைக்கும் எப்போதும் இடமில்லை" இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் ரியான் வெஸ்லி ரவுத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடா விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி புறப்பட்டுச் சென்றனர்.
- விண்வெளி பயணம் வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.
வாஷிங்டன்:
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
டிராகன் விண்கலம் புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1,400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.
டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர். அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர்.
இந்தப் பயணத்தின்போது 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பியது.
புளோரிடா கடற்கரை அருகே அந்த விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார்.
- அங்கு காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதனால் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் புளோரிடாவில் உள்ள அவரது சொத்துக்களுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் குறித்து எனக்கு விளக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- கோல்ப் மைதானத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2வது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கார்ட்டர் என்ற நபர் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
- கையில் விலங்கு போடப்பட்டு இருந்த நிலையில் கார்ட்டர் தப்பியோட முயன்றார்.
மைன் நீதிமன்றத்தில் குழந்தையை தாக்கிய குற்றத்திற்கு தண்டனை பெற்ற குற்றவாளி அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிக்கோலஸ் கார்ட்டர் என்ற நபர் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
யாரும் எதிர்பாராத சமயத்தில் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறிய கார்ட்டர் படிக்கட்டுகளில் தாவி கீழே வந்தார். கையில் விலங்கு போடப்பட்டு இருந்த நிலையில் கார்ட்டர் தப்பியோட முயன்றார். நீதிமன்ற வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியே வந்த கார்ட்டரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் துப்பறிவாளர் பிடித்துக் கொண்டனர்.
தப்பி ஓட முயன்ற கார்ட்டரின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், அவர் குழந்தையை தாக்கிய குற்றத்தோடு, தப்பிச்செல்ல குற்றத்திற்காகவும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
- அமேரிக்கா அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார்.
- அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று ஐன்ஸ்டீன் எண்ணினார்.
அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டிற்கு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இந்த கடிதம் அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல மனித உயிர்களை பறிபோக காரணமாக இருந்ததால் அதற்காக பின்னாட்களில் ஐன்ஸ்டீன் மனம் வருந்தினார்.
அமெரிக்க அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவை பார்த்து ஐன்ஸ்டீன் வேதனை அடைந்தார். அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று அவர் எண்ணினார்.
நியூயார்க்கில் உள்ள பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகத்தில் ஐன்ஸ்டீனின் அசல் கடிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐன்ஸ்டீனின் கடிதங்கள் ஏலம் விடுவது ஒன்றும் இது முதன் முறையல்ல. ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும் அவர் எழுதிய கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது.






