என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும்.
    • பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    லண்டன்:

    விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.

    இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான ரியானேர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, மரியா உடன் மோதுகிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
    • இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.

    இதன்படி, போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.

    ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.34 கோடியை பரிசுத் தொகையாக அள்ளுவார்கள். முந்–தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.1 சதவீதம் கூடுதலாகும். 2-வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.17¾ கோடி கிடைக்கும்.

    இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.

    ஒற்றையர் முதலாவது சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனை கூட ரூ.76 லட்சம் பரிசுடன் தான் வெளியேறுவார்கள்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார்.

    3வது விக்கெட்டுக்கு மார்கிரம்-பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 102 ரன்னும், பவுமா 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் எலினா ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டது.
    • ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவரில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

    புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச் சிறந்த பந்துவீச்சு இதுவா–கும்.

    இதற்குமுன் 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.

    மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, பிரிட்டனின் ஹீதர் வாட்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஜகாரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென் ஆப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
    • இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

    அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.

    • 2-வது டி20யில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது
    • டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து / England whitewashed West Indies in T20

    ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் 2 டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெண் டக்கெட் 84 ரன்கள் விளாசினார்.

    இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, டி20 தொடரிலும் அனைத்து போட்டிகளில் வென்று ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடி காட்டியுள்ளது.

    ஒருநாள் தொடரில் ஜோ ரூட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ×