search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biking Queens"

    ‘பைக்கிங் ராணிகள்’ என்றழைக்கப்படும் குஜராத்தை சேர்ந்த 3 பெண்கள் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் வழியாக லண்டன் வரை சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்த டாக்டர் சரிகா மேத்தா என்பவர் இதற்கு முன்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று சாகசப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

    தன்னுடன் குடும்பத்தலைவியான ஜினால் ஷா மற்றும் கல்லூரி மாணவியான ருட்டாலி படேல் ஆகியோரை இணைத்துக் கொண்டு ‘பைக்கிங் ராணிகள்’ என்ற குழுவை டாக்டர் சரிகா மேத்தா ஏற்படுத்தியுள்ளார்.

    இந்த குழுவினர்  ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் வழியாக 25 நாடுகளை கடந்து லண்டன் வரை சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். பெண்களின் பெருமிதத்தை பறைசாற்றும் விதமாக  கரடுமுரடான மலைப்பாதை, பாலைவனம் வழியாக செல்லும் இவர்களின் இந்த சாகசப் பயணம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மலையடிவாரப் பகுதியில் இருந்து ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது.



    உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வாரணாசி நகரில் இவர்களின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    நேபாளம், பூடான், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், லாட்வியா, ரஷியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், மொராக்கோ வழியாக பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டன் சென்றடைய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    ×