என் மலர்
பிரிட்டன்
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் இந்தியா 359 ரன்கள் குவித்தது.
லீட்ஸ்:
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அடுத்து அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேறினர்.
3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சுப்மன் கில் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.
3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் இறங்கினார்.
இந்த ஜோடி மேலும் விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 127 ரன்னும், ரிஷப் பண்ட் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு கேப்டனாக ஐ.பி.எல். கோப்பையை வெல்வது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது - இவற்றில் எது பெரிது என கேட்டால், டெஸ்ட் தொடர் என்றுதான் சொல்வேன்.
ஏனெனில் ஒரு கேப்டனாக அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று விளையாட வாய்ப்பு கிடைக்காது. அத்துடன், உங்களது தலைமுறை சிறந்த வீரர்கள் 2-3 சுற்றுப்பயணத்தில் மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் அப்படி இல்லை. ஆண்டுதோறும் நடக்கிறது. அதில் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வசப்படுத்துவது, ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை விட பெரியது, கவுரவமிக்கது என்பதே எனது கருத்து.
தற்போதைய இந்திய அணி போதிய அனுபவம் இல்லாதது என பேசுகிறார்கள். அதன் காரணமாக, எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதுவே எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம்தான். எங்களது மூத்த வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் எங்கு சென்று விளையாடினாலும் வெற்றி பெற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். அதையே நாங்களும் பின்பற்றுவோம்.
எனது கேப்டன்ஷிப் ஸ்டைல் எந்த மாதிரி இருக்கும் என்று கேட்கிறீர்கள். எனது கேப்டன்ஷிப் அணுகுமுறையை முழுமையாகப் பார்க்க ஆகஸ்டு வரை (கடைசி டெஸ்ட் நடக்கும் வரை) காத்திருங்கள் என தெரிவித்தார்.
- இந்தியர்களுக்கு சொந்தமான 1194 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 72.17 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரிப்பு.
பிரிட்டனில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து பிராணட் தோர்ன்டன் என்ற உலகளாவிய நிதி ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட இந்தியா மீட்ஸ் பிரிட்டைன் டிராக்கர் (India Meets Britain Tracker) வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 23 சதவீதம் உயர்ந்து 1,194 ஆக உள்ளது. ஒருங்கிணைந்த வருமானம் முந்தைய ஆண்டு 68.09 பில்லியன் பவுண்ட் ஆக இருந்த நிலையில், 2024-ல் 72.14 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் 1,26,720 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 8 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
விப்ரோ ஐ.டி. சர்வீசஸ் நிறுவனம் 448 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜோஹோ கார்பரேசன் லிமிடெட்டின் வளர்ச்சி 197 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இந்திய அணியின் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார்.
- இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட இருக்கிறார்.
ஓய்வுபெற்ற போதிலும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நடவடிக்கைகளை விராட் கோலி கண்காணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லீட்சில் தொடக்க ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், சிராஜ் மற்றும் சிலரை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.
கென்ட்டில் நடந்த அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்தியாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே வீரர்கள் கோஹ்லியுடனான சந்திப்பிற்கு தயாராக இருந்தனர். இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் தொடர் பற்றிய பேச்சுவார்த்தைகள் முதல் கில் மற்றும் பண்ட் இளம் அணியை எவ்வாறு அணிதிரட்ட முடியும் என்பது வரை விவாதம் நடைபெற்றது என்றும், இந்த விவாதம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது எனவும் தெரிகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும்.
- பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
லண்டன்:
விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான ரியானேர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
- குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, மரியா உடன் மோதுகிறார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
- இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும்
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.
இதன்படி, போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.
ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.34 கோடியை பரிசுத் தொகையாக அள்ளுவார்கள். முந்–தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.1 சதவீதம் கூடுதலாகும். 2-வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.17¾ கோடி கிடைக்கும்.
இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.
ஒற்றையர் முதலாவது சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனை கூட ரூ.76 லட்சம் பரிசுடன் தான் வெளியேறுவார்கள்.
- குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி பெற்றார்.
லண்டன்:
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு மார்கிரம்-பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 102 ரன்னும், பவுமா 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
- குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.
லண்டன்:
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் எலினா ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டது.
- ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவரில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச் சிறந்த பந்துவீச்சு இதுவா–கும்.
இதற்குமுன் 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.
மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.






