என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை படோசா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரிட்டனின் கேடி பவுல்டர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 என பிரிட்டன் வீராங்கனை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பவுலா படோசா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பவுல்டர் 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×