என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் காயத்தால் விலகிய சிட்சிபாஸ்
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் காயத்தால் விலகிய சிட்சிபாஸ்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காயத்தால் விலகினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் வேலன்டின் ரோயர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரோயர் முதல் செட்டை 6-3 என வென்றார். இரண்டாவது செட்டிலும் 6-2 என ரோயர் முன்னிலை பெற்றிருந்தார்.

    அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக சிட்சிபாஸ் விலகினார். இதன்மூலம் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×