என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் காட் மெக்னல் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    உலகின் நம்பர் 1 வீரரும், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் வுகிக் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 7-5, 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் கொரன்டின் மவூட்டை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
    • கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடித்து 269 ரன்கள் எடுத்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்னும், ஜடேஜா 41 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 41 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் 269 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் ஆகாஷ் தீப் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

    பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றினார். சிராஜ் கிராலியை அவுட்டாக்கினார். 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசைச் சேர்ந்த கடரினா சினியாகோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.
    • பெண்கள் ஒற்றையரிலும் அமெரிக்காவின் கோகோ காப் உள்பட பலர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர், இத்தாலியின் மேட்டியோ பிரெட்டேனி, டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, கிரீசின் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உள்பட பலர் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினர்.

    • இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
    • லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    பர்மிங்காம்:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ் டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை. முதல் டெஸ்டில் ஆடிய வீரர்களே களமிறங்குகின்றனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் முகமது சிராஜை நீக்கவேண்டும் என முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

    முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் சிராஜை இரண்டாவது டெஸ்டில் நீக்குவதுதான் சரியாக இருக்கும்.

    முதல் டெஸ்டில் அவரைவிட பிரசித் கிருஷ்ணா நேர்த்தியாக பந்து வீசினார். இதனால் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம்.

    இது கடினமான முடிவாக இருக்கும். தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    ஒரு வேகப்பந்து வீரருக்கு பதிலாக குல்தீப் யாதவையும், ஷர்துல் தாக்குருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டியையும் சேர்க்கலாம் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • அவரிடம் சச்சின், ஜாக் காலிஸ் ஆகியோரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அவரிடம், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த பட்லர், நான் காலிஸ் என சொல்லப் போகிறேன். காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் என ரிக்கி பாண்டிங் நேரடியாக சொல்லியிருக்கிறார். அவரது சாதனைகளை ஒன்றாகச் சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம். நீங்கள் ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம் என தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப், உக்ரைனை சேர்ந்த யாஸ்ட் ரெம்ஸ்கா உடன் மோதினார்.

    இதில் ரெம்ஸ்கா 7-6 (7-3), 6-1 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் தரவரிசையில் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங்கும் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இரு அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பிரிஸ்டோல்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார்.

    அமன்ஜோத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரிச்சா கோஷ் 32 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 2 விக்கெட்டும், லாரன் பைலர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.

    அந்த அணியின் டாமி பியூமாண்ட் 35 பந்தில் 54 ரன்கள் குவித்தார். சோபி எக்ளஸ்டோன் 35 ரன்னும், எமி ஜோன்ஸ் 32 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது அமன்ஜோத் கவுருக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் 6-ம் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் பிரான்சை சேர்ந்த அலெக்சாண்டர் முல்லரை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-1, 6-7 (7-9), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியைப் பெற அவருக்கு 3 மணி 19 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாக்டெக் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் லூகா நார்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2வது சுற்றில் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதுகிறார்.

    ×