என் மலர்
பிரிட்டன்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் ரஷிய வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பென்கிக் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ரஷிய வீராங்கனை ஆண்ட்ரிவா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் பென்கிக், ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் போலந்தின் ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் 8-வது வரிசையில் உள்ள போலந்தின் இகா ஸ்வியாடெக், 19-வது வரிசையில் உள்ள ரஷியாவின் சம்சனோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி தோல்வி அடைந்தது.
- இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.
லண்டன்:
இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி தலைவராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடந்தாண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை கடந்தாண்டு ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.பி.யாக தொடர்கிறார்.
இந்நிலையில், ஆரம்ப காலத்தில் பணிபுரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாச்சிஸ் நிதி நிறுவனத்தில் மீண்டும் ரிஷி சுனக் பணியில் சேர்ந்துள்ளார்.
முதுநிலை ஆலோசகர் பணியில் ரிஷி சுனக் இணைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சீனியர் ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.
தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் 'தி ரிச்மண்ட் திட்டம்' என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
கோல்டுமேன் சாச்சிஸ் நிதி நிறுவனத்தில் தொடக்க நிலை பணியாளராக சேர்ந்து ரிஷி சுனக் 5 ஆண்டு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அபார வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் அரினா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் பிரிட்ஸ் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் நம்பர் 5 வீரரும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என முதல் இரு செட்களை வென்றார். 3வது செட்டை 1-6 என இழந்தார்.
இறுதியில் 4வது செட்டை 7-6 (7-4) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள்.
- அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேசவில்லை.
லண்டன்:
லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த விமான நிலையத்தில் வந்திறங்கிய இங்கிலாந்து பெண்மணி லூசி ஒயிட், அங்கு வேலை செய்யும் இந்திய பணியாளர்களை சரமாரியாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக, லூசி ஒயிட் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனித்தேன்.
அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேசவில்லை. அவர்கள் தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என குற்றம் சாட்டினர்.
அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் நுழையும் முதல் இடத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்கள் அனைவரையும் நாடு கடத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து பெண்மணியின் இந்தப் பதிவைக் கண்டித்து வலைதளவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
- இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- ஜோகோவிச் அபாரமாக விளைாயடி காலிறுதிக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீரரான ஜோகோவிச், 11ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் டி மினார்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை மினார் 6-1 என எளிதாக வென்றார். பின்னர் ஜோகோவிச் அபாரமாக விளைாயடினார். இதனால் அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் - அலெக்ஸ் டி மினார் மோதிய போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.
விம்பிள்டனில் தனது போட்டியை கண்டுரசித்து, அதுகுறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார்
- இரு அணிகள் மோதும் மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.
சோபியா டங்க்ளே 75 ரன்னும், வியாட் ஹாட்ஜ் 66 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில், ஷபாலி வர்மா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிர்தி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் கவுர் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்று டி20 தொடரில் 2-1 என நீடிக்கிறது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- 3வது சுற்றில் நம்பர் 2 வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் நம்பர் 2 வீரரும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் ஜென் லேன்னர்ட் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரினன் மன்னரினோவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் ஜெய்ஸ்வால் 87 ரன்னில் வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விரைவில் அவுட்டாகினர். 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.
6வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக்குடன் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இருவரும் சதமடித்தனர்.
6வது விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரி புரூக் 158 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேமி ஸ்மித் 184 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-சீனாவின் ஜியாங் ஜின் யு ஜோடி, அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் - நிகோல் மார்டினஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 1-6, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்றார்.
- இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி ஒன்றில் இணைந்து பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடுமையான நிதி குற்றங்களைச் சந்தித்து வரும் இந்த இருவரும் லண்டனில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் இருவரும் பாடல்களைப் பாடி மகிழ்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்தில் 310க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்று லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
"இது நிச்சயமாக சர்ச்சைக்குரியது. ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன்" என்ற தலைப்புடன் இந்த வீடியோவை லலித் மோடியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.
மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாதப் பொருளாக மாறியுள்ளது.






