என் மலர்
பாகிஸ்தான்
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 74 ரன்னிலும், பர்ஹான் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பகர் ஜமான் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் விக்கெட்கள் வீழ்ந்தன. உஸ்மான் தரிக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தரிக் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜெனித் லியாங்கே 41 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாஹிப்ஜாதா பர்ஹான் அதிரடியாக ஆடி 45 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முத்தரப்பு தொடரில் இலங்கை தான் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
- லாகூரில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- வெடிப்பின் தீவிரம் காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு பசை தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
லாகூரில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
சம்பவம் நடந்த உடனேயே தொழிற்சாலை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். அதே நேரத்தில் மேலாளரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
வெடிப்பின் தீவிரம் காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக பைசலாபாத் துணை ஆணையர் ராஜா ஜஹாங்கிர் அன்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மீட்புக் குழுக்கள் இதுவரை இடிபாடுகளில் இருந்து 15 உடல்களை மீட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. பென்னட் 49 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 47 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டும், ரிச்சர்ட் நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சிக்கந்தர் ராசாவுக்கு அளிக்கப்பட்டது.
முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே தான் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் வழக்குகளை தானாக முன்வந்து விசாரித்தல், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும். இதனால் சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மன்சூர் அலி ஷா, அத்தர் மினல்லா மற்றும் லாகூர் ஐகோர்ட் நீதிபதி ஷம்ஸ் மெஹ்மூத் மிர்சா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் உள்ள வக்கீல்கள் கால வரையற்ற கோர்ட் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். மேலும் மற்ற நீதிபதிகளும் எதிர்ப்பை காட்டும் விதமாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராவல்பிண்டி:
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 11 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 2-0 என கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 45.2 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 212 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றி அசத்தியது. பகர் சமான், ரிஸ்வான் அரை சதம் கடந்தனர்.
ஆட்ட நாயகன் விருது வாசிம் ஜூனியருக்கும், தொடர் நாயகன் விருது ஹரிஸ் ராப்புக்கும் வழங்கப்பட்டது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த 11-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 289 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. சதமடித்து அசத்திய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
- குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
- குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான் பிரதிநிதிகள் இந்திய ஆதரவுடன் நடத்தினர் என்று தெரிவித்தார்.
- மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
- இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் உடனே மீட்புப் பணிக்கு விரைந்து சென்றனர்.
இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் அமைந்த இந்த பரபரப்பான பகுதியில் நடந்த இச்சம்பவம் அங்கு பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக அந்நாட்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. பீல்டு மார்ஷல் உச்சபட்ச பதவி என்பதால் அதில் உள்ளவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய அந்நாட்டு அரசியலமைப்பில் இடமில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலமைப்பு 243 பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் , பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைமை பதவியாக இது அமையும். நேற்று தாக்கலான அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ராணுவ தளபதியே, பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று அதிபருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த அந்த அணி 50 ஓவரில் 269 ரன்கள் எடுத்தது.
பைசலாபாத்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. சல்மான் ஆகா 69 ரன்னும், முகமது நவாஸ் 59 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 53 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் பர்கர் 4 விக்கெட்டும், பீட்டர் 3 விக்கெட்டும், கார்பின் பாஸ்ச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அதிரடியாக ஆடி சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். டோனி டி சோர்சி அவருக்கு பக்கபலமாக நின்று அரை சதம் கடந்து 79 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி காக் 123 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
- 2014 ஆண்டு வாகா எல்லை அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 3 பேருக்கு தூக்குத்தண்டனை மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் வாகா எல்லையில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் கடத்தப்பட்டது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜமாத்-அல்-அஹ்ரார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 300 ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்பை எதிர்த்து 3 பேருக்கும் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலயைில் லாகூர் உயர்நீதிமன்றம் மூன்று பேரின் தூக்குத்தண்டனை மற்றும் ஜெயில் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்த உத்தரவிட்டுள்ளது. தற்கொலை படையாக செயல்பட்டவர்களுக்கு உதவியதாக இந்த மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.






