என் மலர்
பாகிஸ்தான்
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
- இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் சமரசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.
இந்தியா பின்வாங்குவதை தேர்வுசெய்தால், இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்." என்று தெரிவித்தார்.
- பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
- பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தங்கள் நடவடிக்கைகள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே என்றும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
- பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டன.
- ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
- இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தலைவர் அகமது ஷெரீப் சவுதிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கோழைத்தனமானது. எதிரி இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் ஆகிய 3 நகரங்களில்
வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளது.
- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
- ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாதுகாப்பு, அச்சுறுத்தல் கறித்து கேட்டறிந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நிதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இருநாட்டு தலைவர்களும் ராணுவ தளபதியுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படலாம் என பற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தலைமையகத்திற்கு சென்றார். அவருடன் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் பல உயர் அதிகாரிகள் சென்றனர்.
நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல், ராணுவத்தின் நிலை, போர் வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஎஸ்ஐ தலைவைர் முகமது ஆசிம் மாலிக், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து அதற்காகப் போராடுவீர்கள்? என்று அப்துல் அஜீஸ் கேட்டார்.
- இங்கே ஒரு கொடூரமான, பயனற்ற அமைப்பு உள்ளது. அது இந்தியாவை விட மோசமானது
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் அமைச்சர்களும் இந்தியா நிச்சயமாகத் தாக்கும் என்று அஞ்சுகிறார்கள். இதற்கிடையில், இஸ்லாமாபாத்தின் லால் மசூதியின் மதகுரு அப்துல் அஜீஸ் காசி தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.\
ஒரு மேடையில் இருந்து, அங்கு கூடியிருந்த மக்களிடம், "உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது. சொல்லுங்கள், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் போராடினால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து அதற்காகப் போராடுவீர்கள்?" என்று அப்துல் அஜீஸ் கேட்டார்.
இந்தக் கேள்விக்குப் பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் மௌனம் நிலவியது. கூட்டத்தில் யாரும் கையை உயர்த்தவில்லை.
இதன்பின் பேசிய மதகுரு அப்துல் அஜீஸ் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்தார். "இன்று பாகிஸ்தானில் அவநம்பிக்கை நிலவுகிறது. இங்கே ஒரு கொடூரமான, பயனற்ற அமைப்பு உள்ளது. அது இந்தியாவை விட மோசமானது" என்று கூறினார்.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவாவில் நிலவும் அமைதியின்மை குறித்து பேசிய அவர் பாகிஸ்தான் அரசு அதன் சொந்த மக்களை குண்டுவீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
"பலுசிஸ்தானிலும் கைபர் பக்துன்கவாவிலும் அவர்கள் செய்தது அட்டூழியங்கள். அவர்களின் சொந்த குடிமக்களைக் குண்டுவீசித் தாக்குகின்றனர்" என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் குறிப்பாக இந்தியாவில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
- இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
- 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களின்படி, பாகிஸ்தான் தரையிலிருந்து தரைக்கு பாய்ந்து தாக்கும் ஃபதே (Fatah) ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் என்று கூறப்படுகிறது.
ஃபதே ஏவுகணை, ஒரு குறுகிய தூர தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது திட எரிபொருள் அடிப்படையிலான ஏவுகணை என்பதால், இதை விரைவாக ஏவ முடியும். இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது
இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது ஏவுகணையை சோதிப்பது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் அது தரையிலிருந்து தரைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.
- நிலநடுக்கம் குறித்து நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்.
பாகிஸ்தானில் இன்று மாலை 4 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அருகே பாகிஸ்தானில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவ வாகனங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்துகிறது.
இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையும் பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
- இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் நாடியுள்ளது.
ரஷிய செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்த ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, "இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நல்ல உறவில் இருக்கும் ரஷ்யா, இருநாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
- இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
- இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என உத்தரவு.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதேபோன்று இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறை முகங்களுக்கு செல்லவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் துறை முகங்களில் இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளது.
இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறை முகங்களுக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சகத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






