என் மலர்tooltip icon

    துபாய்

    • பீர் முகம்மது ஆதம் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
    • இம்முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம்.

    துபாய்:

    துபாயில் தனியார் நிறுவனம் சார்பில் அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கல் வாரந்தோறும் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41). இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அவர் அதிர்ஷ்ட லாட்டரியில் வாங்கிய சீட்டுக்கு 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசு கிடைத்துள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி மற்றும் 4 வயது மகள் நெல்லையில் வசித்து வருகின்றனர். துபாயில் கடந்த 3 ஆண்டுகளாக நானும் என்னுடைய இந்திய, பாகிஸ்தானிய நண்பர்கள் என மொத்தம் 20 பேர் சேர்ந்து மாதந்தோறும் அதிர்ஷ்ட லாட்டரியில் பங்கு பெறுவோம்.

    இம்முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம். முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார்.
    • இந்த ஓட்டலில் ஒரு விருந்தினருக்கு 8 ஊழியர்கள் இருப்பார்கள்.

    உலகின் ஒரே 10 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல் என்று அழைக்கப்படுவது துபாயில் உள்ள ஜூமேரா புர்ஜ் அல் அரப் ஓட்டலாகும். துபாயில் ஏற்கனவே புர்ஜ் கலிபா போன்ற உயரமான கட்டிடங்கள் உள்ள நிலையில், அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.

    இந்த ஓட்டலின் உயரம் 321 மீட்டர் ஆகும். இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும். இங்கு வரும் விருந்தினர்களுக்கு பல சொகுசு விடுதிகள், பிரைவேட் பீச், நீச்சல் குளங்கள், தங்க பேசியல், டைமண்ட் மசாஜ் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் உள்ளன.

    ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார். இந்த உதவியாளர் 24 மணிநேரமும் விருந்தினர்களுக்கு உதவ தயாராக இருப்பார். இந்த ஓட்டலில் ஒரு விருந்தினருக்கு 8 ஊழியர்கள் இருப்பார்கள். ஓட்டலின் மேல்தளம் மட்டும் 10 சதுர மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்த இடவசதி கொண்டது. கடலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருப்பதால் அலைகளுக்கு மேல் மிதப்பதை போன்ற அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்குகிறது.

    இங்கு 8 உலகத்தரம் வாய்ந்த விடுதிகளும் உள்ளன. அதில், ஒரு உணவு விடுதி நீருக்கு அடியில் உள்ளது. இங்கிருந்து விருந்தினர்கள் கடல்வாழ் உயிரினங்களை கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்து கொண்டே சுவையான உணவுகளை சாப்பிட முடியும். இந்த ஓட்டல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



    • ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் 2வது இடத்திலும், இலங்கை வீரர் ஹசாரங்கா 3வது இடத்திலும் உள்ளனர்.

    பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், பிலிப் சால்ட் 3-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் உள்ளார்.

    • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்படுகிறது.
    • 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

    அதன்படி 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்படுகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பும்ரா இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார்.

    சோபர்ஸ் விருதை ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2017) ஆகியோர் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் தீப்தி சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    மகளிருக்கான ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 41, 73, 135 ரன்கள் எடுத்ததால் ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.

    கேப்டன் கவுர் ஒரு இடம் பின்தங்கி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20 தரவரிசையில் 12வது இடத்தில் நீடிக்கிறார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடம் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 14வது இடத்தில் நீடிக்கிறார்.

    பந்துவீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    • சாதாரண வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்.
    • பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த தாமதத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    துபாய்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகம், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் பொருட்களை (செக் இன் உடைமைகள்) கொண்டு செல்ல புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சிவில் விமான பாதுகாப்பு பணியகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இந்த புதிய விதிமுறைகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், விமான நிலைய செயல்திறனை அதிகரிக்கவும் பயன் உள்ளதாக உள்ளது. இதில் விமான பயணிகள் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கடுமையான அளவு மற்றும் எடை கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு இயக்கும் முக்கிய விமான நிறுவனங்கள் தங்களது பேக்கேஜ் கொள்கைகளை புதுப்பித்துள்ளன. அதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையில் 2 பைகள் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் சர்வதேச விமானங்களில் செக் இன் உடைமைகளில் மூலம் 2 பைகளை மட்டுமே எடுத்து செல்லலாம். கூடுதல் உடைமைகள் இருந்தால் அதற்கான கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும்.

    சாதாரண வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த உடைமைகள் 2 பைகளில் மட்டுமே இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் இந்தியாவில் இருந்து அமீரகம் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் போதும் 30 கிலோ வரை உடைமைகளை மட்டுமே எடுத்துச்செல்லலாம். பொருளாதார மற்றும் பிரீமியம் டிக்கெட்களுக்கு சாதாரண வகுப்பை விட கூடுதலாக பொருட்களை எடுத்துச்செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவர். அதிகமாக பயணிகளின் வருகை இருப்பதால் இந்திய விமான நிலையங்களில் நெரிசல் அதிகரித்து பாதுகாப்பு சோதனைகளில் காலதாமதம் ஏற்படுகிறது. பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த தாமதத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    துபாய்:

    துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள எம்.பி.இசட்- சாட் என்ற முகம்மது பின் ஜாயித் செயற்கைக்கோளின் இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளது. இதில் அந்த செயற்கைக்கோளுடன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குட்டி செயற்கைக்கோளும் இந்த மாதம் விண்ணில் பாய்கிறது.

    இது குறித்து துபாய் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் சலெம் அல் மர்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயரில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் எம்.பி.இசட் சாட் அதாவது முகம்மது பின் ஜாயித் என்ற பெயரில் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் முழுவதுமாக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் மொத்தம் 800 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த எம்.பி.இசட் சாட் பிரதேச அளவில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிசக்தி வாய்ந்த செயற்கைக்கோளாகும். அதேபோல உயர்தரத்திலான துல்லிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இந்த செயற்கைக்கோள் சேகரிக்க உள்ளது. குறிப்பாக மாறி வரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு, வேளாண்மை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும்.

    அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 மடங்கு அதிக துல்லியத்தில் புகைப்படங்களை இந்த செயற்கைக்கோள் அனுப்ப உள்ளது. தரவிறக்கமானது மும்மடங்கு வேகமாக இருக்கும்.

    இதில், 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 நட்சத்திரங்கள், அரபி வழிவெழுத்தில் எழுதப்பட்ட செயற்கைக்கோளின் பெயர், அமீரக தேசிய கொடி மற்றும் அமீரக பிரதேசத்தை காட்டும் வரைபடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக இம்மாதத்திற்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த செயற்கைக்கோளுடன் அமீரகத்தில் உள்ள விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்ப கல்லூரிகளின் ஒத்துழைப்பில் ஹெச்.சி.டி சாட் -1 என்ற மினி நானோ செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரி மாணவர்கள் அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்படும் பேலோட் எனப்படும் கருவிகள், உபகரணங்களை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கி உள்ளனர்.

    இந்த குட்டி செயற்கைக்கோளும் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் எம்.பி.இசட் சாட் உடன் சேர்த்து 2-வது செயற்கைக்கோளாக பால்கன் 9 ராக்கெட்டில் இது அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படும் நிகழ்வை காண https://mbrsc.ae/live/ என்ற இணையதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
    • அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.

    நடிப்பு, ரேஸிங் என பிசியாக இருக்கும் அஜித் குமார் தற்போது துபாய் சென்றுள்ளார்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார்.

    அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.

    இந்நிலையில், அங்கு தனது அணியினருடன் அஜித் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
    • டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

    அதன்படி, டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் சக நாட்டவர் ஹாரி புரூக் நீடிக்கிறார்.

    3வது இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் உள்ளார்.

    டாப் 10 தரவரிசையில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    இந்நிலையில், இந்திய பேட்டிங் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவை சந்தித்து வருகின்றனர்.

    விராட் கோலி 633 புள்ளிகளுடன் 24-வது இடத்திலும், ரோகித் சர்மா 560 புள்ளிகளுடன் 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் அவர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

    • பேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தில் உள்ளார்.
    • வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் பேட்டிங், பந்துவீச்சில் ஏற்றம் கண்டுள்ளார்.

    துபாய்:

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட் (773 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் சமாரி அடப்பட்டு (733 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 2ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (720 புள்ளி) ஒரு இடம் சரிவைச் சந்தித்து 3ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் (652 புள்ளி) 6 இடம் ஏற்றம் கண்டு 7வது இடத்திற்கு வந்துள்ளார்.

    இந்நிலையில், ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (771 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேஹன் ஸ்கட் (704 புள்ளி) 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (698 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

    இந்தப்பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா (665 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 5ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்தப் பட்டியலிலும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் (616 புள்ளி) 2 இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்திற்கு வந்துள்ளார்.

    ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் மரிசேன் கேப் (444 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (407 புள்ளி) 2ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ் (401 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தென் ஆப்பிரிக்கா சென்றது.

    துபாய்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்த வெற்றியால் தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.

    இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (66.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (58.89 சதவீதம்), இந்தியா (55.88 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.

    நியூசிலாந்து (48.21 சதவீதம்), இலங்கை (45.45 சதவீதம்), இங்கிலாந்து (43.18 சதவீதம்), வங்கதேசம் (31.25 சதவீதம்) அணிகள் அடுத்த 4 இடங்களில் உள்ளன.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

    • நடப்பு ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
    • இந்தப் பரிந்துரைப் பட்டியலில் 2 இலங்கை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது.

    அதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் குசால் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு இந்த விருதை இந்தியாவின் விராட் கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×