என் மலர்
துபாய்
- ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இந்தியா விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.
இந்நிலையில், ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அதன்படி, 2012 டி20 உலகக்கோப்பை, 2015 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி, 2016 டி20 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடரில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.
- துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இந்த தொடரில் இருந்து பிரிட்டன் வீரர் டிராபர் விலகியுள்ளார்.
துபாய்:
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு சுற்றுகள் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், பிரிட்டனின் முன்னணி வீரரான ஜாக் டிராபர் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
எனது உடலை நிர்வகிப்பதற்கும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து போட்டியிடுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கும் நான் குழு ஆலோசனையைப் பெறுகிறேன். துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் நான் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இறுதிச்சுற்றில் டென்மார்க் வீராங்கனை கிளாரா தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 7-6 (7-1), 6-1 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 6-4, 4-6, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
இறுதிப்போட்டியில் ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனுடன் மோதுகிறார்.
- முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஐசிசி தொடரில் (ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) முகமது ஷமி 19 இன்னிங்சில் மொத்தம் 60 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கானை (32 இன்னிங்சில் 59 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி ஷமி முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் ஜவகல் ஸ்ரீநாத் (47 விக்கெட்), ஜடேஜா (43 விக்கெட்) ஆகியோர் இருக்கின்றனர்.
- முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் செய்த இந்திய வீரர்களில் அசாருதீன் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இருவரும் தலா 156 கேட்ச் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் சங்ககரா (448ல் 218), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (375ல் 160) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரஸ்சை சேர்ந்தவருமான அரினா சபலென்கா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டாசன் 6-3, 6-2 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா துபாய் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது.
- நெட் பயிற்சியில் 2 பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசினர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது. இந்த அணி பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. அதற்குப் பதிலாக நெட் பயிற்சியில் ஈடுபட்டது.
நெட் பயிற்சியின்போது இரண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெட்டில் பந்து வீசியுள்ளனர். இருவரும் அபாரமான வேகப்பந்து வீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டியுள்ளனர்.
குறிப்பாக அவைஸ் அகமது யார்க்கர் பந்து மூலம் தனது காலை உடைக்க முயற்சி செய்தார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவைஸ் அகமதிடம் ரோகித் சர்மா கூறுகையில், "நீங்கள் (அவைஸ் அகமது) டாப்-கிளாஸ் பவுலர். உங்களுடைய இன்ஸ்விங் யார்க்கர்களால் என்னுடைய காலை உடைக்க முயற்சி செய்தீர்கள். வெல் டன்! நீங்கள் இங்கே வந்து எங்களுக்கு உதவியதற்காக நன்றி" என தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
அவைஸ் அகமது மற்றும் அவருடன் வந்த வாசிம் அக்ரம் ஆகிய இரண்டு பேரும் உண்மையிலேயே நல்ல பந்து வீச்சாளர்கள்.
இருவரும் சிறப்பாக பந்து வீசியதாக எங்கள் பேட்ஸ்மேன்கள் சொன்னதைக் கேட்டேன். அவர்களுடன் பேசுவதற்கு எங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தது. அவர்கள் துபாயில் வசித்து வருகிறார்கள்.
அவர்களைப் பற்றி எங்களுக்கு அதிகமாக தெரியாது. அவர்களை நாங்கள் முதன்முறையாக பார்த்தோம். இருவரும் உண்மையிலேயே தரமான பந்து வீச்சாளர்கள் என தெரிவித்தார்.
"ஷாஹீன் ஷா பந்து வீசுவதைப் போன்று நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு பந்து வீசினேன். அவர்கள் என்னை பாராட்டினார்கள்" என அவைஸ் அகமது குறிப்பிட்டார்.
- 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
- சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 6-4, 6-0 என இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினை எதிர்கொள்கிறார்.
மேலும், 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்ற ரஷிய வீராங்கனை ஆண்ட்ரீவா காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஷ்விடெக் உடன் மோதுகிறார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-2, 6-1 என பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது.
- ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய ஜோமல் வாரிக்கன் 19 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் கொங்கடி திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதேபோல் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது.
- ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட் சாய்த்து வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றிருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய வாரிக்கன் 19 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய நோமன் அலி 16 விக்கெட் வீழ்த்தினார்.
இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் கொங்கடி திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில் சமீபத்தில் முடிந்த 19 வயதுக்குட்பட்ட ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையில் திரிஷா ஒரு சதம் உள்பட 309 ரன் குவித்தார். மேலும் பவுலிங்கில் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.






