என் மலர்
கனடா
- இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.
- இதுதொடர்பான ஆதாரங்களை இந்திய வெளியுறவு அதிகாரிகளை எங்கள் நாட்டின் தூதர்கள் 6 பேரும் நேரில் சந்தித்து வழங்கினர்.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசின் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கனடா- இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் சற்று தணிந்த நிலையில் தற்போது மீண்டும் வெடிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி லாவோஸ் நாட்டில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்பில் கனடா மக்களின் பாதுகாப்பு குறித்து மோடியிடம் பேசியதாக ட்ரூடோ தெரிவித்தார்.
ஆனால் அவர் அப்படி எதுவும் மோடியிடம் பேசவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்துள்ளதாகக் கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது நிலைமையை இன்னும் மோசமடைய வைத்துள்ளது. அதாவது, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக இந்தியா அதிரடி அறிவிப்பு ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்டது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்க இந்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூடோ ஓட்டோவாவில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசியதாவது, இந்தியாவின் செயல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாததாக உள்ளது.
கனேடிய மண்ணில் கனேடியர்களுக்கு எதிரான கொலை, வன்முறை சம்பவங்கள் என பல்வேறு குற்றச்செயலைகளை ஆதரித்து இந்திய அரசு மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இந்த குற்றங்களுக்கு இந்திய அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்திய வெளியுறவு அதிகாரிகளை எங்கள் நாட்டின் தூதர்கள் 6 பேரும் நேரில் சந்தித்து வழங்கினர். ஆனாலும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் ட்ரூடோ விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கனடா அரசு தெரிவித்திருக்குறது.
- கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- நிஜ்ஜார் கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசின் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்தியா- கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. விசா ஒப்புதல் உள்ளிட்ட சேவைகளும் சற்று காலத்துக்கு முடங்கின. பின்னர் இரு நாடு உறவும் சுமூகமாக சூழளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல் நிஜ்ஜார் கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது. அதாவது, நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்தியத் தூதருக்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்து உள்ளனர் என கனடா குற்றச்சாட்டை தெரிவித்தது.
இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்ததுடன், கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு இன்று சம்மன் அனுப்பி, அந்நாட்டிலுள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்தது.
இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக தெரிவித்த மத்திய அரசு, ஸ்டீவர்ட் வீலர் உட்பட இந்தியாவில் உள்ள கனடாவுக்கான தூதர்கள் 6 பேரை வரும் 19 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம்
- நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என ட்ரூடோ குற்றம்சாட்டினார்
இந்தியாவுக்கு எப்போதும் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா தலைநகர் ஒடாவா [Ottawa] நகரில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மாரிசான், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குக் கனடா முற்றுமுதலான ஆதரவை அளிக்கிறது. இருப்பது ஒரே ஒரு இந்தியாதான், இதை தெளிவுபடுத்தியாக வேண்டும்.
இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். சர்வதேச விவகாரங்களில் இந்தியா முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு சர்ச்சை, காஷ்மீரில் நடந்துவரும் பயங்கரவாத சம்பவங்கள், சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கனடா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கானடா- இந்தியா இடையே உரசல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
- வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள்.
- மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்கு குறைவான அனுமதி வழங்குகிறோம்.
ஒட்டாவா:
கனடாவில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். அதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ கூறும்போது, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்கு குறைவான அனுமதி வழங்குகிறோம். அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும்.
குடியேற்றம் நமது பொருளாதாரத்திற்கு ஒரு நன்மை. ஆனால் அதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும்போது, நாங்கள் ஒடுக்குகிறோம் என்றார்.
கனடாவில் 2023-ம் ஆண்டு 5.09 லட்சம் பேருக்கும், 2024-ம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1.75 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போதைய கட்டுபாட்டால் 2025-ம் ஆண்டு வழங்கப்பட்ட வெளிநாட்டினருக்கு எண்ணிக்கையை 4.37 லட்சமாக குறைக்கும்.
கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்த
வர்கள். சர்வதேச மாணவர் அனுமதிகளைக் குறைக்கும் கனடா அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை தேர்ந்தெடுக்கும் சூழல் உள்ளது.
- பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார்.
- பிரணீத் உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரணீத். இவர் கனடா நாட்டில் தங்கி சமீபத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
இந்த நிலையில் பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார். பிரணீத், அவரது அண்ணன் உள்ளிட்ட அனைவரும் ஏரியில் குதித்தனர். ஆனால் பிரணீத்தை தவிர மற்ற அனைவரும் கரை வந்து சேர்ந்தனர். பிரணீத்தை மட்டும் காணவில்லை.
இதையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் ஏரியில் இருந்து பிரணீத்தின் உடலை மீட்டனர். அவரது உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
போர்ட் மெக்நீல்:
கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
- கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வருகிறது
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஷோவான WWE நிகழ்ச்சியில் வரும் மல்யுத்த வீரர் டேவ் படிஸ்டாவை யாராலும் மறக்க முடியாது. எவ்வளவு வலியையும் தாங்கிக் கொள்வதில் தேர்ந்தவராக படிஸ்டா [55 வயது] புகழ் பெற்று விளங்கினார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் படிஸ்டா நடிகராக கலக்கி வருகிறார்.

மார்வெல் யுனிவெசில் கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் படிஸ்டாவின் டிரான்ஸ்பர்ண்மெசன் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தான் நடித்திருந்த The Last Showgirl படத்தின் திரையிடலுக்காக வந்த படிஸ்டாவின் புது லுக் வைரலாகி வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுவெளியில் தோன்றியபோது எடுக்கப்பட்ட படிஸ்டாவின் புகைப்படங்களையும் தற்போதய புகைப்படத்தையும் பதிவிட்டு படிஸ்டாவுக்கு என்னாச்சு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகினர். தனது ஜிம் பாடி லுக்கில் இருந்து மாறுபட்டு மிகவும் ஒல்லியான தோற்றத்தில் பாடிஸ்டா உள்ளதே இந்த கேள்விக்கு காரணம். டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 'டங்கி' என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டினார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கால்நடையாகச் செல்லும் ஆவணமற்ற இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு ஜனவரி- ஜூன் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தனது 'டங்கி' என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா-அமெரிக்க எல்லைக் கடப்பைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இப்போது அமெரிக்காவை அணுகுவதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழியைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை, மெக்சிகோ எல்லைப் பாதையைப் பயன்படுத்தும் வழக்கமான பாதையிலிருந்து ஊடுருவல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
- 70,000 வெளிநாட்டு மாணவர்களின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ளது
- இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கடனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, கனேடியர்களுக்கு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக வேலைகளுக்காக அதிகளவில் குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக நேற்று முன் தினம் அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி கனடாவுக்கு வரும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, 25 சதவீதம் வரை நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறைப்பது, படிப்பதற்காக மாணவர்கள் பெர்மிட், வேலைக்கான பெர்மிட் பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த முடிவு தங்களின் எதிர்காலக் கனவுகளுடன் கனடாவில் படித்து வரும் கிட்டத்தட்ட 70,000 வெளிநாட்டு மாணவர்களில் பலரின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்திய மாணவர்களே ஆவர்.
எனவே ஜஸ்டின் ட்ருடோ அரசின் இந்த முடிவை எதிர்த்து வெளிநாட்டு மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிரின்ஸ் எட்வார்ட் மாகாணத்தில் உள்ள சட்டமன்ற கட்டடத்தின் வெளியே இந்திய மாணவர்கள் திரண்டு அரசின் இந்த திடீர் முடிவை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓன்டாரியோ, மானிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர். ஒர்க் பெர்மிட்களின் கால அளவை அதிகரிப்பது, நிறைந்த குடியுரிமை கிடைப்பதற்கு சிக்கல் இல்லாத நடைமுறையை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை அவர்கள் தங்களின் கோரிக்கைகளாக முன்வைத்து போராடி வருகின்றனர்.


- லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.
- சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன
சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார [எலெக்ட்ரிக்] வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலக சந்தையில் தங்களை நிலைநிறுத்தி லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.

இதுதவிர்த்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதிக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக சீன மின்சார வாகனங்களுக்கு அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிக வரி விதித்திருந்தன. தற்போது கனடாவில் இறக்குமதி ஆகும் சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருகிறது.
கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இது அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.
தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில்தான் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது
- மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்க பரிந்துரைத்துள்ளார்
ராயல் பேங் ஆப் கனடா
உலகம் முழுவதிலும் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங் ஆப் கனடாவில் [Royal Bank of Canada] சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது ராயல் பேங் ஆப் கனடா வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த நேடைன் அன் [Nadine Ahn] கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

காதல் உறவு
வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் நேடைன் தொடர்பிலிருந்த மேசன் என்ற அந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
வழக்கு
மேலும் இதுதொடர்பாக நேற்று [ஆகஸ்ட் 23] நீதிமாறத்திலும் ராயல் பேங் ஆப் கனடா வங்கி வழக்குத் தொடர்ந்துள்ளது. தனது அறிக்கையில் ராயல் பேங் ஆப் கனடா கூறியதாவது, வங்கியின் விதிகளை மீறி தலைமை நிதி அதிகாரியாக இருந்த நேடைன் ஆன் தனக்குக் கீழ் வேலை செய்துவந்த மேசனுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக உறவு வைத்துள்ளார். ப்ராஜெக்ட் கென் என்ற திட்டத்தில் நேடைன் ஆன் மேற்பார்வையில் பணியாற்றிவந்த மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்படச் சிறப்புச் சலுகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

நஷ்டஈடு
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள நேடைன் ஆன், தங்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான காதல் உறவும் இல்லை என்றும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி மக்கள் மத்தியில் தனது பெயருக்கு வெளிப்படையாகக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆன் மற்றும் மேசன் ஆகிய இருவரும் வங்கியிடம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.






