என் மலர்
உலகம்
- மாணவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- முதற்கட்ட தகவல்படி முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலையில் உயர்நிலைப் பள்ளி இசைக்குழு மாணவர்களை ஏற்றுச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தில் 40 பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 43 வயதான கினா பலேட்டியர் என்ற நபரும், 77 வயதான பீட்ரைஸ் பெர்ராரி என்ற நபரும் உயிரிழந்தனர். மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நியூயார்க் மாநில காவல்துறையின் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் எல் மஸ்ஸோன்," முதற்கட்ட தகவல்படி முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது என்றார்.
- ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
- ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார். இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்று இருக்கிறார். கனடா சென்று இருக்கும் அவர், அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றி, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பிறகு தற்போது தான் ஜெலன்ஸ்கி முதன்முறையாக கனடா சென்றுள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் தரையிறங்கிய ஜெலன்ஸ்கியை கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ டொரோண்டோ பயணம் மேற்கொண்டு அங்குள்ள உக்ரைன் மக்களை சந்திக்கின்றனர். உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கு சதவீதம் பேர் தற்போது கனடாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசிய கனடாவுக்கான ஐ.நா. தூதர் பாப் ரே, "அவருக்கு உதவுவதற்காக பலவற்றை செய்து இருக்கிறோம், மேலும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. உக்ரைன் மக்களுக்காக எங்களால் முடிந்தவற்றை தொடர்ச்சியாக செய்யப் போகிறோம்," என்று தெரிவித்து உள்ளார்.
- இசைத்துறை மூலம் பாப் கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் டெய்லர் ஸ்விப்ட்டின் தாக்கம் குறித்து முதல் கல்வி கருத்தரங்கை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது.
- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்பட 7 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அறிஞர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விப்ட். 33 வயதான இவர் கிராமி விருதை வென்றுள்ளார். பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தனது இசை சுற்றுப்பயணத்தை சமீபத்தில் தொடங்கினார்.
5 கண்டங்கள், 17 மாநிலங்களில் 131 இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில், கொரோனாவுக்கு பிறகு முடங்கிய பொருளாதாரம் மீண்டு வருவதாக ஏற்கனவே பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இசைத்துறை மூலம் பாப் கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் டெய்லர் ஸ்விப்ட்டின் தாக்கம் குறித்து முதல் கல்வி கருத்தரங்கை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது. அடுத்தாண்டு (2024) பிப்ரவரி 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆன்லைன் வழியாகவும் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்பட 7 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அறிஞர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- காதலியிடம் இருந்து பரிசை பெறுவதற்காக ஆர்வத்துடன் அமர்ந்திருந்த சவுகான் தனது காதலி வழங்கிய புரத பெட்டியை வாங்கியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
காதலர்கள் தங்கள் இணையர்களுக்கு விலை உயர்ந்த தங்க, வைர நகைகளை பரிசளிப்பதை கேள்விபட்டிருக்கிறோம். அல்லது அவர்கள் விரும்பிய பொம்மைகள் மற்றும் வித்தியாசமான பொருட்களை பரிசாக அளிப்பதை பார்க்க முடியும். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு அளித்த பரிசு பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் சித்தார்த் சவுகான் என்பவரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவரது காதலி கனிகா பிஷ்ட் என்பவர் சவுகான் கார் அருகே வருகிறார். பின்னர் அவர் கையில் கொண்டு வந்திருந்த புரத சத்துக்கள் அடங்கிய பெட்டியை தனது காதலனுக்கு பரிசாக வழங்குகிறார்.
காதலியிடம் இருந்து பரிசை பெறுவதற்காக ஆர்வத்துடன் அமர்ந்திருந்த சவுகான் தனது காதலி வழங்கிய புரத பெட்டியை வாங்கியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பதிலுக்கு தனது பரிசாக அவர் காதலியின் நெற்றியில் மென்மையாக முத்தம் கொடுப்பது போல் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோ 1.32 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைபார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- கண்காட்சியில் கலைஞர்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை சிற்பம், வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
- நிர்வாண மாடல்கள் வழியாக செல்ல விரும்பாத பார்வையாளர்களுக்கு என்று தனிவழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லண்டனில் ராயல் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கலை கண்காட்சி நாளை தொடங்கி வருகிற ஜனவரி 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் புகழ்பெற்ற கலைஞர் மெரினா அப்ரமோவிச்சின் படைப்புகள் இடம்பெற உள்ளது.
இக்கண்காட்சி எல்லைகளை தாண்டி பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள விரும்பும் பார்வையாளர்கள் நிர்வாணமாக நிற்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடைவெளி வழியாக தங்களது உடல்களை திணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய கண்காட்சியின் தலைவர் ஆண்ட்ரியா டார்சியா, இந்த நடைமுறை பாலினம், பாலியல், ஆசை மற்றும் நிர்வாண தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான மோதலை ஏற்படுத்தும். இந்த கண்காட்சியில் கலைஞர்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை சிற்பம், வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிர்வாண மாடல்கள் வழியாக செல்ல விரும்பாத பார்வையாளர்களுக்கு என்று தனிவழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்த நிலையில், கனடா செல்கிறார்
- மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் வகையில் இந்த பயணம் பார்க்கப்படுகிறது
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார்.
இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. கனடா அதிபர் ட்ரூடோ, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷியா மீது குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பின் தற்போது முதன்முறையாக ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். இதற்கு முன்னதாக வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
- உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரஷியா நடவடிக்கை
- யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள நாட்டிற்கு இந்த தடை இல்லை
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷியாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
ரஷியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷியா தற்காலிக தடை விதித்துள்ளது.
ரஷியா ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த உத்தரவு வந்த நிலையில், ரஷியாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக மார்க்கெட்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்த தடை கிடையாது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
- வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21-ம் தேதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கனடா, இந்தியா நாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் கனடாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது என வெள்ளை மாளிகை கூறியது.
வாஷிங்டன்:
இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சாட்டியது.
தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் கனடா அரசின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
மேலும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை நான் உறுதியாக நிராகரிக்கிறேன்.
குற்றச்சாட்டுகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
- கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
- எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என இந்தியாவுக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒட்டாவா:
இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு, இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.
இதுதொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா, இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளைப் பகிர்ந்துகொண்டேன்.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்.
இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை. இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
- பாகிஸ்தானில் கடைசியாக 2018ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது
- தொகுதி மறுசீரமைப்பு இறுதி பட்டியல் நவம்பரில் வெளியிடப்படும்
342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாட்டு மக்களவையில் 272 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவையன்றி 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசியாக 2018 ஜூலை மாதம் அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முழு பெரும்பான்மையிடங்களுக்கு குறைவாக இடங்களை பிடித்தது. இருப்பதற்குள்ளேயே அதிக இடங்களில் வென்ற கட்சி என்பதால் அவர் சில கட்சிகளுடன் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.
கடந்த ஏப்ரல் 10 அன்று அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக, பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நஆட்சியை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷெஹ்பாஸ் ஷரீஃப் பிரதமராக பதவியேற்றார். அவரது பிரதமர் பதவி காலம், 2023 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து இடைக்கால பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் என்பவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்நாட்டுக்கான பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எந்த அறிக்கையும் அளிக்காமல் இருந்து வந்ததால் அரசியலில் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், 2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு பிறகு 54-நாள் தேர்தல் பணிகள் நடைபெற்ற பிறகு ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது.
அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியும், ஷெஹ்பாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாகும்.
- ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
- 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன
2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.
போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.
இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.
இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.
இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.






