என் மலர்tooltip icon

    உலகம்

    காதலனுக்கு புரதசத்து பெட்டியை பரிசளித்த இளம்பெண்: பதிலுக்கு முத்தத்தை பரிசளித்த காதலன்
    X

    காதலனுக்கு புரதசத்து பெட்டியை பரிசளித்த இளம்பெண்: பதிலுக்கு முத்தத்தை பரிசளித்த காதலன்

    • காதலியிடம் இருந்து பரிசை பெறுவதற்காக ஆர்வத்துடன் அமர்ந்திருந்த சவுகான் தனது காதலி வழங்கிய புரத பெட்டியை வாங்கியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    காதலர்கள் தங்கள் இணையர்களுக்கு விலை உயர்ந்த தங்க, வைர நகைகளை பரிசளிப்பதை கேள்விபட்டிருக்கிறோம். அல்லது அவர்கள் விரும்பிய பொம்மைகள் மற்றும் வித்தியாசமான பொருட்களை பரிசாக அளிப்பதை பார்க்க முடியும். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு அளித்த பரிசு பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இன்ஸ்டாகிராமில் சித்தார்த் சவுகான் என்பவரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவரது காதலி கனிகா பிஷ்ட் என்பவர் சவுகான் கார் அருகே வருகிறார். பின்னர் அவர் கையில் கொண்டு வந்திருந்த புரத சத்துக்கள் அடங்கிய பெட்டியை தனது காதலனுக்கு பரிசாக வழங்குகிறார்.

    காதலியிடம் இருந்து பரிசை பெறுவதற்காக ஆர்வத்துடன் அமர்ந்திருந்த சவுகான் தனது காதலி வழங்கிய புரத பெட்டியை வாங்கியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பதிலுக்கு தனது பரிசாக அவர் காதலியின் நெற்றியில் மென்மையாக முத்தம் கொடுப்பது போல் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோ 1.32 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைபார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×