search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan parliament"

    • பாகிஸ்தானில் கடைசியாக 2018ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது
    • தொகுதி மறுசீரமைப்பு இறுதி பட்டியல் நவம்பரில் வெளியிடப்படும்

    342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாட்டு மக்களவையில் 272 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவையன்றி 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    கடைசியாக 2018 ஜூலை மாதம் அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முழு பெரும்பான்மையிடங்களுக்கு குறைவாக இடங்களை பிடித்தது. இருப்பதற்குள்ளேயே அதிக இடங்களில் வென்ற கட்சி என்பதால் அவர் சில கட்சிகளுடன் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.

    கடந்த ஏப்ரல் 10 அன்று அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக, பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நஆட்சியை விட்டு வெளியேறினார்.

    இதனையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷெஹ்பாஸ் ஷரீஃப் பிரதமராக பதவியேற்றார். அவரது பிரதமர் பதவி காலம், 2023 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து இடைக்கால பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் என்பவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    அந்நாட்டுக்கான பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எந்த அறிக்கையும் அளிக்காமல் இருந்து வந்ததால் அரசியலில் குழப்பம் நிலவியது.

    இந்நிலையில், 2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.

    அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    இதற்கு பிறகு 54-நாள் தேர்தல் பணிகள் நடைபெற்ற பிறகு ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது.

    அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியும், ஷெஹ்பாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாகும். 

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் சபாநாயகர் ஆனார். #ImranKhan #PakistanParliament
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது. அந்தக் கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் புதிய அரசு அமைக்கிறது.



    இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கட்கிழமை கூடியது. இதில் இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித்தலைவர் பிலாவல் சர்தாரி பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து புதன்கிழமை (நேற்று) சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி, மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசாத் கைசரை களம் இறக்கியது.

    11 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் சையத் குர்ஷித் ஷா நிறுத்தப்பட்டார்.

    நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தேர்தல் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.பி.க்கள் சபைக்கு வர தாமதம் ஏற்பட்டதால், தேர்தல் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அனைத்து எம்.பி.க்களும் ஓட்டு போட்டனர். அதைத் தொடர்ந்து ஓட்டுப்பெட்டி நாடாளுமன்ற செயலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் வெற்றி பெற்றார். அவருக்கு 176 ஓட்டுகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட சையத் குர்ஷீத் ஷா 146 ஓட்டுகள் பெற்றார். 8 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் ஆகும்.

    முன்னாள் சபாநாயகர் ஆயாஸ் சாதிக், சபாநாயகர் தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவித்தார்.

    வெற்றி பெற்ற ஆசாத் கைசர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்த தலைவர்கள், எம்.பி.க்களை சந்தித்து அவர்களுடன் கை குலுக்கினார். அவர்கள், புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அதையடுத்து ஆசாத் கைசர் புதிய சபாநாயகராக பதவி ஏற்றார். அவருக்கு முன்னாள் சபாநாயகர் ஆயாஸ் சாதிக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    அதையடுத்து அவர் சபையை நடத்தினார். சபையில் அமளி நிலவியது. அவர் அமைதியை நிலை நாட்ட முயற்சித்தும் அது பலன் தரவில்லை. இதையடுத்து அவர் சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

    புதிய சபாநாயகர் ஆசாத் கைசர், கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.   #ImranKhan #PakistanParliament #tamilnews
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். #Pakistan #Parliament #PMElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது.

    116 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, சிறிய கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்க உள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதற்கான அழைப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் விடுத்து உள்ளார். இன்று புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.



    அதைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.

    நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) 64 இடங்களை கைப்பற்றி உள்ளது. மற்றொரு முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இவ்விரு கட்சிகளும் தேர்தலுக்கு பின்னர் கைகோர்த்து உள்ளன. இது ஒரு பக்கம் இம்ரான்கான் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    நடக்க உள்ள சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு இந்தக் கட்சிகள் பலத்த போட்டியை உருவாக்கும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் லாகூர் மாதிரி நகரில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ராஸா கிலானி, முன்னாள் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சையத் குர்ஷீத் ஷா, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) மூத்த தலைவர் கவாஜா ஆசிப், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி, கூட்டு வியூகம் ஒன்றை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சியும் வகுத்து உள்ளன.

    பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப் நிறுத்தப்படுகிறார்.இம்ரான் கானுக்கு ஷாபாஸ் ஷெரீப் கடும் போட்டியை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் நிலவுகிறது.  #Pakistan #Parliament #PMElection 
    பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் வரும் 13-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்கின்றனர். பிரதமராக இம்ரான் கான் 18-ம் தேதி பதவி ஏற்று கொள்கிறார். #ImranKhan #ImranKhanswearingin
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுன்றத்துக்கு கடந்த 25-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் வேட்பாளர்கள் 12 இடங்களிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே ஆஸம் பிரிவு), பலூசிஸ்தான் தேசிய கட்சி, பாகிஸ்தான் முத்தாஹிதா குவாமி இயக்கம், பலூசிஸ்தான் அவாமி கட்சி, அவாமி தேசிய கட்சி, அவாமி முஸ்லிம்  லீக், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சானியத் மற்றும் ஜம்ஹூரி வட்டான் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளனர். ஆக உதிரி கட்சிகளிடம் தற்போது 20 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர 14 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. 116 உறுப்பினர்களுடன் அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்கள் மற்றும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி.க்களுடன் மும்முரமாக பேசி வருகிறார்.    

    இந்நிலையில்,  புதிதாக தேர்வான உறுப்பினர்களுடன் பாகிஸ்தான் 15-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 13-ம் தேதி கூடுகிறது. 

    அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்கின்றனர். வரும் 14-ம் தேதி அந்நாட்டின் சுதந்திர தினத்துக்கு பின்னர்,  பிரதமராக இம்ரான் கான் 18-ம் தேதி பதவி ஏற்று கொள்வார் என தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ImranKhan #ImranKhanswearingin  
    ×