என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
    • மந்திரம் நோயை குணப்படுத்தி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    அதிபர் தேர்தலை ஒட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரு வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில் டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இந்த சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொடர்ந்து, டெல்லியின் இந்து சேனா அமைப்பினர் அவரது நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக 'சிறப்பு ஹோமம்' நடத்தினர்.

    டெல்லியில் உள்ள தில்ஷத் கார்டனில் உள்ள மா பக்லமுகி சாந்தி பீடத்தில், 1.25 லட்சம் புனித மஹாமிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரிக்கும் மகாமிருத்யுஞ்சய் ஜப ஹோம யாகத்தை பூசாரிகள் நடத்தி உள்ளனர். இந்த மந்திரம் நோயை குணப்படுத்தி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    இதுதொடர்பாக இந்து சேனாவின் செய்தி தொடர்பாளர், முன்னாள் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தங்களுக்கு கவலைகள் இருப்பதாகவும், அவருக்கு உதவ தெய்வீக தலையீடு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

    • டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளால் அச்சுறுத்தல்கள் உள்ளன என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    கடந்த 14-ந்தேதி பென் சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் டிரம்பின் வலது காதில் தோட்டா உரசி சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த நிலையில் டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது.

    இதற்கு அப்போது அதிபராக இருந்த டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். இதனால் டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்துள்ளதாகவும், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த தகவல் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, கடந்த நிர்வாகத்தில் இருந்து, முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக ஈரானிய அச்சுறுத்தல்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம்.

    காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளால் அச்சுறுத்தல்கள் உள்ளன என்றார். மேலும் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய மேத்யூ குரூக்சுக்கும் வெளிநாடு அல்லது உள்நாட்டில் உள்ள சதிகாரர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஈரான் தெரிவித்தது.

    • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது.

    அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகிலுள்ள வீடற்ற முகாமில் வசித்து வரும் சாமுவேல் ஷார்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் சம்பத்தன்று 2 கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு ஒருவரை தாக்க சென்றதாகவும் பாதுகாப்பு கருதி அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
    • டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    அதிபர் தேர்தலை ஒட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரு வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில் டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இந்த சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், அதே இடத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், முன்னாள் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட AR-15 ரக துப்பாக்கிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

    லாஸ் வேகாசில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் பைடன், "போரில் பயன்படுத்தக்கூடிய இது போன்ற ஆயுதங்களை அமெரிக்க வீதிகளில் இருந்து அகற்ற என்னுடன் இணையுங்கள். டொனால்டு டிரம்ப்-ஐ சுடுவதற்கு AR-15 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. இவற்றின் பயன்பாட்டை சட்டவிரோதமாக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது.
    • ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது.

    கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான 'பிரெஸ்டீஜ் பால்கன்' ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர்.

    இந்த எண்ணெய் கப்பல் டேங்கர் ஏடன் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது. மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.

    எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் கூறுகையில், எண்ணெய் டேங்கர் மூழ்கி, தலைகீழாக இருந்தது. இருப்பினும், கப்பல் நிலைபெற்றதா அல்லது எண்ணெய் அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிகிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

    இந்த கப்பல் 2007ல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் ஆகும். இத்தகைய சிறிய டேங்கர்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது. இது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் முக்கிய மையமாகும். பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் டுகும்-ன் பரந்த தொழில்துறை மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.

    • பணி செய்யும் இடத்தில் விசுவாசமும், பணியின் மீது மரியாதையும் வைத்திருக்கும் ஊழியர்களை கண்டுபிடிக்கும் சிறிய சவால் நிகழ்ச்சியாக ஒரு நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.
    • வீடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் 1.5 கோடி பேர் ரசித்து உள்ளனர்.

    வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்த காலத்தில், சம்பளம் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் என்றால் ஒரு ஊழியர், வேறுநிறுவனத்திற்கு எந்த நேரத்திலும் மாறிவிட தயாராகிவிடுவார். ஆனால் எல்லோரும் அப்படித்தானா?

    பணி செய்யும் இடத்தில் விசுவாசமும், பணியின் மீது மரியாதையும் வைத்திருக்கும் ஊழியர்களை கண்டுபிடிக்கும் சிறிய சவால் நிகழ்ச்சியாக ஒரு நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.

    அவர்கள், சில ஊழியர்களிடம் அதிகப்படியான பணத்தை காட்டி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உடனடியாக விட்டுவிடுவீர்களா? என்று கேட்டு வீடியோ பதிவு செய்தது. அப்படி ஒரு உணவக ஊழியரிடம் ரூ.83 லட்சம் பணத்தை கட்டுக்கட்டான நோட்டுகளாக நேரடியாக நீட்டுகிறார்கள்.

    இந்த வேலையை விட்டுவிட முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால் அவர், நான் இந்த வேலையை விடமாட்டேன் என்று பணியில் விசுவாசமாக இருக்கிறார். இறுதியில் அந்த நபரின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை பாராட்டி குறிப்பிடத்தக்க தொகையை அவருக்கு பரிசாக வழங்கினார்கள் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். உணவக நிறுவனமும் ஊழியரை பாராட்டியது. இந்த வீடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் 1.5 கோடி பேர் ரசித்து உள்ளனர்.

    • வீடியோ 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.
    • வடக்கு கர்நாடகாவில் கடந்த 2021-ம் ஆண்டு ஒருவர் மாட்டிற்கு 20 கிராம் தங்கசங்கிலியை அணிவித்தார்.

    நம்மை ஆச்சரியப்படுத்தும் பல வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. அந்த வகையில் எருமை மாட்டிற்கு 10 கிலோ தங்க சங்கிலியை அணிவிக்கும் ஒரு வீடியோ காட்சி, இன்ஸ்டாகிராமில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் ஒரு முதியவர் நகைப் பெட்டியை திறக்கிறார். அதில் தடிமனான தங்கநிற சங்கிலி உள்ளது. அருகில் நிற்கும் நீல நிற உடை அணிந்த வாலிபர் அந்த சங்கிலியை எடுத்து, படுத்துக் கிடக்கும் எருமை மாட்டிற்கு அணிந்து விடுகிறார்.

    இதை வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர், பசுமாட்டிற்கு 10 கிலோ தங்க சங்கிலி என்று குறிப்பிட்டு உள்ளார். வீடியோவில் எருமை மாட்டிற்கு சங்கிலி அணிவிக்கப்படுவதும், பதிவில் பசுமாடு என்று குறிப்பிட்டு இருந்ததும் வலைத்தளவாசிகளுக்கு சிரிப்பை வரவழைத்தது. மாடு கிடக்கும் தொழுவம் சிமெண்டு காரை பெயர்ந்து பழமையாக தோற்றமளிக்கிறது. இதையெல்லாம் குறிப்பிடும் வலைத்தளவாசிகள், அது போலியான தங்க சங்கிலி என்று கிண்டல் செய்தனர். உண்மையில் அது தங்க சங்கிலியாக இருந்தால், உங்கள் செல்வச் செழிப்பை காட்ட விரும்பினால் பாலஸ்தீன போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் சிலர் குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த வீடியோ 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி உள்ளனர். இதேபோல வடக்கு கர்நாடகாவில் கடந்த 2021-ம் ஆண்டு ஒருவர் மாட்டிற்கு 20 கிராம் தங்கசங்கிலியை அணிவித்தார். வாழை இலையில் மற்ற பொருட்களுடன் வைத்து பூஜை செய்து அணிவித்த சங்கிலி, விழா முடிவில் மாயமானது. பின்னர் அது மாட்டின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலையில் இருந்த உணவுப் பொருட்களுடன் சங்கிலியையும் மாடு விழுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.





    • உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.
    • மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபையில் 79-வது கூட்டம் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்று உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26-ம் தேதி ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
    • போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.


    இப்போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள்,பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    • மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
    • தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

     

    விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.

    மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    • கான் யூனிஸ், ரஃபாவில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
    • மத்திய காசாவில் 10 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

    நுசெய்ரத் மற்றும் ஜவைடா ஆகிய இரண்டு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

    கடந்த வாரம் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தலைவர் முகமது தெய்ஃப்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தியில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பின்னரும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பரிந்துரையை வழங்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. காசா மீதான கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவும், ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள 120 பிணைக்கைதிகளை விடுவிக்கவும் சர்வதேச மத்தஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தாக்குதல் மக்கள் வசித்து வந்த நான்கு வீடுகள் மீது நடத்தப்பட்டதாக அவசர பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய காசாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு விரிவாக இந்த தாக்குதல் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    தெற்கு காசாவில் திங்கட்கிழமை (நேற்று) இரவு இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

    • தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார்.
    • டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரை சேர்ந்தவர் ஜிங் (வயது33). இவர் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டார். இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கினார்.

    அப்போது தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார். காரில் அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளை பிடித்து கொண்டு ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து வெளியே வந்து அலுவலகம் செல்லும் காட்சிகள் டிரோன் கேமரா மூலம் அம்பலமானது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிங் விசாரணை நடத்தினார். அவரது மனைவி அவரது நிறுவன உரிமையாளருடன் தகாத உறவு இருந்ததும், அவர் தன்னை ஏமாற்றுவதையும் ஜிங் கண்டுபிடித்தார். டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    ×