என் மலர்
உலகம்
- 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் பைசாபாத் அருகே இன்று காலை 7.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
- கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளது.
- கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
- தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
துருக்கி அருகே கருங்கடலில் ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய டிரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது.
துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் ரஷியாவை சேர்ந்த 'கைரோஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. காலி டேங்கர்களுடன் ரஷியாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் இருந்த 25 மாலுமிகளை மீட்டனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பலான 'விராட்' மீதும் டிரோன் தாக்குதல் நடந்தது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. மேற்கு நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோதும் ரஷிய இந்த கப்பல்கள் மூலம் எண்ணெய் விற்று, உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டி வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
எனவே நீரில் செல்லக் கூடிய டிரோன்கள் மூலம் அவற்றை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
- சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
இந்த சூழலில், இந்த மாதம் 25 ஆம் தேதி வெர்ஸ்டரில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார். விஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் உயிரிழந்தார்.
விஜய்யின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்த இங்கிலாந்து காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விஜய்யின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமும், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டனில் உள்ள விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான்கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
- சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் இம்ரான்கானின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் சிறையில் இம்ரான்கான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் இம்ரான் கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பியான குர்ராம் ஜீஷன் கூறியதாவது:-
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இம்ரான்கானின் புகழைக் கண்டு பயப்படுகிறார்கள். இதனால்தான் அவரது படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட அனுமதிக்கவில்லை. அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதமாகி விட்டது. அவரை சந்திக்க குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.
கடந்த சில நாட்களில் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் உயிருடன் இருக்கிறார். தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான்கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். அவர் வெளிநாடு சென்று அவர் விரும்பும் இடத்தில் அமைதியாக இருந்தால் அவருக்கு சலுகைகள் கூட வழங்குவதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
ஆனால் அதை இம்ரான் கான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் இம்ரான்கானின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
- அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
- கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.
இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.
- இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
- ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 191 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.
- அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தையடுத்து அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது என தனது குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அனைத்து புகலிட விண்ணப்பங்களையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் இயக்குனர் ஜோசப் எட்லோ கூறியதாவது:-
ஒவ்வொரு வெளிநாட்டவரும் அதிகபட்சமாக சரிபார்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்யும் வரை புகலிட கோரிக்கைகளின் இடை நிறுத்தம் அமலில் இருக்கும் என்றார். 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன் என்று டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு புகலிட விண்ணப்ப நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
- அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அந்நாட்டின் கடல்பகுதியில் உருவான டிட்வா புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே வெள்ளம்-நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்து உள்ளது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 488 நிவாரண மையங்களில் 43,925 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை அளிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து ஆபரேசன் சாகர் பந்து திட்டத்தின் கீழ், பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியது.
- மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
- சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
- மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு கிடைத்தது.
லண்டன்:
சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) கடல்சார் தொழிலை ஒழுங்குபடுத்தும் முன்னணி அதிகார அமைப்பாகும். இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு ஆதரவாகக் கிடைத்தது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கடல்சார் களத்தில் தொடர்ந்து சேவை செய்வதற்காக, இந்தியாவிற்கான சர்வதேச கடல்சார் அமைப்பில் சர்வதேச சமூகத்தின் பெரிய அளவிலான ஆதரவை இந்தியா பெற்றுள்ளது என தெரிவித்தது.






