இந்தோனேசியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்தோனேசிய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை
Published on

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த இந்தோனேசிய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான புதிய அரசாணையில் அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை மந்திரி மியுத்யா ஹபீத் கையெழுத்திட்டார்.

இந்த தடையின்படி, 16 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் யூடியூப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துக்கொள்ள முடியாது. அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com