வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: இன்று முதல் அமல் #LPGGas

கியாஸ் சிலிண்டரின் விலை நள்ளிரவில் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: இன்று முதல் அமல் #LPGGas
Published on

புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் 835 ரூபாய்க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் 913 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், நள்ளிரவில் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது என்பது குறிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com