என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • புவலாய் புயலால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகினர்.
    • புயல் தாக்குதலால் பிலிப்பைன்சில் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டன.

    குவாங் டிரை:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், புவலாய் புயலால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர்.

    இந்தப் புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ளது. அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 150 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பர்ஹான் 57 ரன்னிலும், பகர் சமான் 47 ரன்னிலும் வெளியேறினர்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 20 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 57 ரன்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து அசத்தினார்.

    இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. திலக் வர்மா 69 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 17 ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது.

    அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.

    பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தில் டிரெயிலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ராஜாசாப் படத்தின் டிரெயிலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    • இறப்பிற்கான காரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன.
    • கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் ராஜகுமாரி இன்று இரவு பார்வையிட்டார்.

    இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர், வேலுசாமிபுரத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுவதுமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

    கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இருவரின் உடல்நிலை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்ற அனைத்து நோயாளிகளும் உடல்நலம் தேறி வருகின்றனர்.

    சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 31 பேர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள 60 முதல் 70 மருத்துவர்கள் குழுவுடன், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

    16 மருத்துவர்களைக் கொண்ட தனிக்குழு நியமிக்கப்பட்டு உடற்கூராய்வு பணிகள் நடைபெற்றன.

    இறப்பிற்கான காரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன. இந்த அறிக்கைகளின்படி, பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் மூச்சுத்திணறல் எனத் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.  

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல அவுட்டானது.

    துபாய்:

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பர்ஹான் 57 ரன்னில் அவுட்டானார். பகர் சமான் 47 ரன்னில் வெளியேறினார்.

    ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
    • நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பலரும் இரங்கலையும், தத்தமது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கரூர் கொடுந்துயரம், மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.

    இறைவா அந்தக் குடும்பங்களை ஆறுதல் படுத்து... இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய்உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு" என்று தெரிவித்துள்ளார். 

    • 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.
    • சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது.

    இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.

    இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறுகையில்," நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்" என்கிறார்.

    படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகர் சசிகுமாருக்கும் படக்குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    • தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமாக ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி நேற்றிரவு இரங்கல் தெரிவித்திருந்தார்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமாக ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவ நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ராகுலுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், "கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி நேற்றிரவு இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார்.
    • விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து சோதனை நடத்தினர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார்.

    வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து சோதனை நடத்தினர்.

    வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்துள்ளது.

    கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
    • லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர்.

    லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் அமைப்பில் 6வது அட்டவணையில் இடம் கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறையை தூண்டியதாக காலநிலை செயல்பாட்டாளர்கள் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், லடாக்கின் அற்புதமான மக்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரால் தாக்கப்படுகின்றன.

    லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு பாஜக, 4 இளைஞர்களை கொன்றும் சோனம் வாங்க்சுக்கை சிறையிலடைத்தும் பதிலடி அளித்துள்ளது.

    கொலையை நிறுத்துங்கள். வன்முறையை நிறுத்துங்கள். லடாக்குக்கு ஒரு குரல் வேண்டும், அதனை வழங்குங்கள். அவர்களுக்கு அரசமைப்பின் 6-ஆவது அட்டவணையை வழங்குங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • திரும்பிக் கூட பார்க்காம தனி விமானத்தில் ஏறி, சென்னை போறாரு விஜய். இது ஏற்புடையதா?
    • 8.45-க்கு நாமக்கல்ல இருக்கணும். 8.45-க்கு தான் சென்னைலயே கிளம்புறீங்க.

    கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    30 பேர் இறந்துட்டாங்க, உங்க கருத்து என்னனு பத்திரிகையாளர்கள் கேக்குறாங்க. திரும்பிக் கூட பார்க்காம தனி விமானத்தில் ஏறி, சென்னை போறாரு விஜய். இது ஏற்புடையதா?

    8.45-க்கு நாமக்கல்ல இருக்கணும். 8.45-க்கு தான் சென்னைலயே கிளம்புறீங்க. தனி விமானம் லேட்டா வந்துச்சா? காலதாமதமா வராம இருந்திருந்தா, தண்ணி, உணவு இல்லாம மக்கள் செத்திருப்பாங்களா?

    ஆகவே, விஜய் மீதும் தவறு இருக்கு.. விஜய் ரசிகர்கள் மீதும் தவறு இருக்கு.. சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மீதும் தவறு இருக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×