என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அவிநாசி பாலத்திற்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- நாயுடு என்பதை ஜாதி பெயர்தானே என விமர்சனம் செய்யப்பட்டது.
ஊர், தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரில் ஜாதி பெயர் இடம் பெற்றிருந்தால் அதை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. அரசாணை வெளியிட்ட அடுத்த நாள், கோவை அவினாசியில் 10 கி.மீ. நீள மேம்பாலம் திறக்கப்பட்டது. அந்த சாலைக்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் வைக்கப்பட்டது.
நேற்று அரசாணை வெளியிட்டு இன்று சாதி பெயருடன் கூடிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 10 கி.மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட கோவை அவினாசி மேம்பாலத்திற்கு புகழ்பெற்ற ஜி.டி. நாயுடு பெயரை வைத்திருப்பதை குறையாக சொல்கிறார்கள். ஜி.டி. நாயுடு யார்? அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. அநத் பகுதிலேயே குடியிருந்தவர்.
கோவை மட்டுமல்ல எல்லாப் பகுதி மக்களாலும் போற்றப்பட்டவர் என்பதால் அவரது பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் ஜி.டி. நாயுடு பெயரை சூட்டியுள்ளார். பலதரப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.
ஜி.டி. நாயுடு பெயரில் ஜாதி பெயர் என்றால் ஜி.டி. பாலம் என்றா வைக்க முடியும்?. ஜி.டி. நாயுடு என்று வைக்கப்படுவதனால்தான் இன்னார் என்று அறியப்படுகிறார்.
இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் பார்க்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முகமது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான "காட்டாளன்" படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் "காட்டாளன்", மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது.
பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது.
படத்திற்கான இசையை "காந்தாரா", "மகாராஜா" போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார்.
இப்படத்தில், முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார்— இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது.
ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.
இதில், தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் ஹனான் ஷா இணைந்துள்ளனர்.
- ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
- உலக கோப்பை என்பது இன்னும் முடிக்கப்படாத வேலையாக உள்ளது.
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீ்ந்திர ஜடேஜா, 2027ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஜடேஜாவுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜடேஜா கூறியதாவது:-
இது என் கையில் இல்லை. என்றாலும் 2027 உலக கோப்பையில் விளையாட நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு என்னை தேர்வு செய்யாததற்கு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் சில விசயங்களை கொண்டுள்ளனர்.
அது தொடர்பாக என்னிடம் பேசினார். இது என்னை அணி அறிவிக்கப்பட்டு என்னுடைய பெயர் அதில் இடம் பெறவில் என்று ஆச்சர்யப்படவைக்க விரும்பவில்லை. கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் என்னிடம் பேசியது சிறந்த விசயம். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்.
உலகக் கோப்பையில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அது போட்டிக்கு முந்தைய போட்டிகளைப் பொறுத்தது. மேலும் நான் அவற்றில் சிறப்பாகச் செயல்பட்டால், அது நன்றாக இருக்கும். கடந்த முறை நாங்கள் இறுதி போட்டியில் வந்து தோல்வியடைந்தோம். எனவே உலக கோப்பை என்பது முடிக்கப்படாத வேலையாக இருக்கிறது.
இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.
அஸ்திரேலியா தொடரில் இரண்டு இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் செல்லி விரும்பவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். அக்சர் படேல் அணியில் உள்ளதால், ஜடேஜாவுக்கு வாய்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின. குறிப்பாக, மனிதன்.. மனிதன்.., வானத்த பார்த்தேன்.., காளை காளை., ஏதோ நடக்கிறது.., முத்து முத்து பெண்ணே.., உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்கள் ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி (நேற்று) ரிலீஸ் ஆனது. இதனால், ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- ஒரு பகுதியில் போரை நிறுத்த முடியும் என்றால், மற்ற இடங்களிலும் நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. விரைவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் "நான் டிரம்ப் உடன் டெலிபோன் மூலம் பேசினேன். அப்போது, இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடியும் என்றால், உக்ரைன்- ரஷியா போர் உள்ளிட்ட மற்று போர்களை உறுதியாக நிறுத்த முடியும்" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்பிடம் உக்ரைனின் எரிசக்தி சிஸ்டம் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அத்துடன், எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா உக்ரைன் மீது கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை.
தமிழ் சினிமாவில் கிராமத்து சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொம்புசீவி படத்தின் டீசர் இன்று மாலை வௌியானது.
- கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்," என் மேல் ஏன் இவ்வளவு பாசம்? என இசைஞானி இளையராஜா கேட்டார்.
அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.
- இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
- தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.
அப்போது அவர்," 90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.
மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களின் முழு விவரம்:
பாரதியார் விருதை (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கு விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்க்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது.
இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
இசையமைப்பாளர் அனிருத், நடிகை சாய் பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா, நடிகர் ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டிக்கு விருது வழங்கப்பட்டது.
2021ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது திருநாவுக்கரது, நெல்லை ஜெயந்தா, எஸ்.சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது.
2022ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது சாந்தகுமாரி, அப்துல்காதர், முத்துகணேசனுக்கு வழங்கப்பட்டது.
2023ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது, கவிஞர் ஜீவபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- மாநில அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரி மிரட்டியதாக மம்தா குற்றச்சாட்டு.
- மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்ற்சாட்டை வெளியிடுவதாக மம்தா எச்சரிக்கை.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆனால், மம்தா பானர்ஜி SIR-ஐ கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் தலைமை செயலாளர், மந்திரி அரூப் விஸ்பா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மேற்கு வங்க மாநில தேர்தல் ஆதிகாரி மாநில அதிகாரிகளை மிரட்டியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். அத்துடன், எல்லையை மீறினால் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முதல்வரானார். அதில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக மாநில தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் மம்தா பேசியது மற்றும் அதை மொழிமாற்றம் செய்யப்பட்ட வீடியோவை அனுப்புமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாநில தேர்தல் அதகாரி மீது எந்தவொரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக இருந்தாலும், ஆதாரங்களுடன் லோக்பாலில் முறையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
- நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.
இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் பேசிய கிம் ஜாங் உன், உக்ரைனில் ரஷியாவின் பக்கம் போராடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என்று கூறினார்.
ரஷியாவுக்காக போராடி சுமார் 600 வட கொரிய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தென் கொரியா அண்மையில் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தலைசிறந்த காலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
3 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது வழங்கியதில் எனக்கும் பெருமை. கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 2 முறை ஏறுகிறது தங்கம் விலை. தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் சீன் பார்பபெல்லா, வெள்ளை மாளிகைக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
- இதய வயது, அவரது உண்மையான வயதை விட 14 வயது இளமையானது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிரம்ப் மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் சுகாதார பரிசோதனை செய்து கொண்டார்.
இந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் சீன் பார்பபெல்லா, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்டிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், "அதிபர் டிரம்ப் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரது இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் மற்றும் உடல் செயல்பாடு மிகவும் வலுவாக உள்ளன. ECG சோதனைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட இதய வயது, அவரது உண்மையான வயதை விட 14 வயது இளமையானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது டிரம்ப்பின் உண்மையான வயது 79, ஆனால் அவரது இதயத்தின் வயது 65 என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியை ஏற்ற வயதான நபர் என்ற சாதனையையும் டிரம்ப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், டிரம்பின் கால்கள் வீங்கி, கைகளில் காயங்களுடன் காணப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்து சில கவலைகள் இருந்தன. இருப்பினும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாகக் காணப்படும் நாள்பட்ட பிரச்சனையால் கால்கள் வீங்கியிருப்பதாக அப்போது மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.






