என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2027 உலக கோப்பையில் விளையாட விருப்பம்: ஜடேஜா ஆசை நிறைவேறுமா?
- ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
- உலக கோப்பை என்பது இன்னும் முடிக்கப்படாத வேலையாக உள்ளது.
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீ்ந்திர ஜடேஜா, 2027ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஜடேஜாவுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜடேஜா கூறியதாவது:-
இது என் கையில் இல்லை. என்றாலும் 2027 உலக கோப்பையில் விளையாட நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு என்னை தேர்வு செய்யாததற்கு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் சில விசயங்களை கொண்டுள்ளனர்.
அது தொடர்பாக என்னிடம் பேசினார். இது என்னை அணி அறிவிக்கப்பட்டு என்னுடைய பெயர் அதில் இடம் பெறவில் என்று ஆச்சர்யப்படவைக்க விரும்பவில்லை. கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் என்னிடம் பேசியது சிறந்த விசயம். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்.
உலகக் கோப்பையில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அது போட்டிக்கு முந்தைய போட்டிகளைப் பொறுத்தது. மேலும் நான் அவற்றில் சிறப்பாகச் செயல்பட்டால், அது நன்றாக இருக்கும். கடந்த முறை நாங்கள் இறுதி போட்டியில் வந்து தோல்வியடைந்தோம். எனவே உலக கோப்பை என்பது முடிக்கப்படாத வேலையாக இருக்கிறது.
இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.
அஸ்திரேலியா தொடரில் இரண்டு இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் செல்லி விரும்பவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். அக்சர் படேல் அணியில் உள்ளதால், ஜடேஜாவுக்கு வாய்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.






