என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரோபோ சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.
- ரோபோ சங்கர் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.
- பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.
புரோ கபடி லீக் 2025 சீசனில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி 45-41 என 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் பாதி நேர ஆடடத்தில் ஜெய்ப்பூர் 24-18 என முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் 21-23 என சறுக்கினாலும் வெற்றியை உறுதி செய்தது.
ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.
பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.
ஜெய்பூர் அணிக்கு டேக்கிள் மூலம் 13 புள்ளிகள் கிடைத்தன. இதில் 3 சூப்பர் டேக்கிள் மூலம் கிடைத்தன. பெங்கால் அணிக்கு 8 புள்ளிகள் கிடைத்தன.
- ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார்.
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன்.
- அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம்.
திமுகவில் இணைந்தது குறித்து மருது அழகுராஜ் கூறியதாவது;-
அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன். 20 வருடமாக அதிமுகவிற்கு என்னுடைய தமிழ், எழுத்து, பேச்சையும் ஒப்படைத்து உழைத்தவன். எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை, ஆக்கிரமிப்பு அரசியலை ஜனநாயகத்திற்கு புறம்பானது என கண்டித்த காரணத்தினால் அங்கிருந்து விலக்கப்பட்டேன். அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி அபரிகரித்தார். இப்போது அதிமுகவை பாஜக அபகரித்துள்ளது.
எம்ஜிஆர் காலத்தில் திராவிடக்கழகம் ஒன்றிணைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடியாமல் போனது. தற்போது எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தில் திராவிட இயக்கம் ஒன்றாகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அன்வர் ராஜா வந்துள்ளார். நான் வந்துள்ளேன். இன்னும் பல்லாயிரம் மற்றும் பல லட்சம் பேர் வருவார்கள்.
எடப்பாடி பழனிசாமியே ஆசி கொடுத்து அனுப்பி வைப்பார். திமுக கட்சியை வலப்படுத்துவற்கு எடப்பாடி பழனிசாமியும் துணையாக இருக்கிறார். அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம். அதிமுக-விற்கு பல காலம் உழைத்தவர்களை நல்ல எண்ணத்துடன் அனுப்பி வைத்துள்ளார் என எடுத்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை வேளையில் கருமேகம் சூழ்ந்தது. பின்னர், பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று இரவு 11.15 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, ஈரோடு, தேனி, நாமக்கல், நெல்லை மாவட்டங்களில் இரவு 11.15 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கும் படம் Right. இப்படத்தில், நட்டி நடராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடிக்கின்றனர்.
நீதிமன்ற களத்தை கொண்டுள்ள இப்படம் வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
இந்நிலையில், ரைட் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.
- சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் வருகிற 22ஆம் தேதி முதல் அமல்படுத்த இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் வருகிற 22ஆம் தேதி முதல் ஷாப்பிங் செய்ய தொடங்குங்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி மாநில அரசின் 1723 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
தீபாவளி மற்றும் நவராத்திரி விரைவில் வரவிருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இனிமேல் 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும். டெல்லியின் தாய்மார்கள், சகோதரிகள் வீட்டில் முதலாளியாக இருந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இன்னும் மேலும் மேலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்புகிறேன்.
சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொருட்களை வாங்காதீர்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை மட்டுமே வாங்குவதாக உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- த.வெ.க. நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.
- துணை பொதுச் செயலாளராக இருந்த நிர்மல்குமார் இணைப் பொதுச் செயலாளராக நியமனம்.
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருந்த நிர்மல்குமார் இணைப் பொதுச் செயலாளராக நியமனம்.
தவெக-வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ராஜ்மோகன் ஊடக அணி துணை பொதுச் செயலாளராக நியமனம்.
மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகியோர் தவெக துணை பொதுச் செயலாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- இதுவரைக்கும் நடித்த படங்களை விட இந்த படம் ஜாலியான படமாக இருக்கும்.
- எப்பவும் போல கருத்து சொல்லுங்க. எப்பவும் போல கூட இருங்க.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் கவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இதுவரைக்கும் நடித்த படங்களை விட இந்த படம் ஜாலியான படமாக இருக்கும். உங்களுக்கு பிடிக்கும் என நம்புறேன். ஒன்னுமே இல்லாதவன இவ்வளவு தூரம் கூப்பிட்டு வந்து விட்டுது நீங்கதான். இங்கிருந்து ரொம்ப தூரம் கூப்பிட்டு போவீங்கனு நம்புறேன். நாளைக்கு தியேட்டருக்கு வந்த படத்தை பாருங்க. எப்பவும் போல கருத்து சொல்லுங்க. எப்பவும் போல கூட இருங்க. நன்றி.
என கூறினார்.
- இமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரணாவத் மணாலியில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறது.
- மேகவெடிப்பு, மழை வெள்ளத்தால் இமாச்சல பிரதேசம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று. கனமழையுடன் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. ஒருமுறை அல்ல. பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளது.
வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்கள் எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கங்கனா ரணாவத் "நேற்று, என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். தயது செய்து என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நான் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். என்னுடைய வீடும் இங்கேதான் உள்ளது" எனத் தெரிவிததுள்ளார்.
மவுன்டைன் ஸ்டோரி என்ற ரெஸ்டாரன்ட்-ஐ கங்கனா ரணாவத் மணாலியில் இந்த வருடம் தொடங்கினார். உண்மையான இமாச்சல பிரதேச மாநில உணவுகளை வழங்கும் உணவகம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்.
மணாலி சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் இங்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கங்கனா ரணாவத், பாஜக தலைவரும், மணாலியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கோவிந்த் சிங் தாகூர் உடன் சோலங்க், பல்சான் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கும் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பாற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவால் சோலாங் கிராமம் முழுவதற்கும் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, பியாஸ் ஆறு படிப்படியாக தனது எல்லையை விரித்து கரையோர அரிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கொண்டு அரிப்பை தடுக்க ஆற்றின் திசையை மாற்றிட விடவேண்டும்" எனத் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியில் இருந்து இமாச்சால பிரதேசத்தின் பெய்த கனமழை மற்றும் பருவமழை காரணமாக 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் 52 பேர் ஆவார்கள்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை வேளையில் கருமேகம் சூழ்ந்தது. பின்னர், பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, டெல்லி, விஜயவாடா, ஷீரடி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர்.
- இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட தகுதியாக இருந்தும் ஒரு சில வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது பலரது மத்தியிலும் பேசுபொருளானது.
அந்த வகையில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பெற்று விளையாட தகுதியானவர் ஜெய்ஸ்வால் என அவரை ஆதரித்தும், இந்திய அணியின் நிர்வாகத்தை விமர்சித்தும் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட வைக்கப்பட்டு வருகிறார். இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.
ஏனெனில் அவரைப் போன்ற ஒரு திறமையான துவக்க வீரர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இடம்பிடித்து விளையாட வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரை ஒரு வடிவத்தில் மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார்.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்குள் பலத்த போட்டி நிலவுவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் விரைவாக தனது வாய்ப்பை எட்டிப்பிடிப்பார்.
என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.






