search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "incharge"

    இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. #SriLankaAttacks #IS
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த வாரம் தேவாலயம் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகினர். இதையடுத்து, ராணுவமும் போலீசாரும் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
     
    இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் பலர்  கைது செய்யப்பட்டனர். 



    இதற்கிடையே, இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிறிது நேரத்தில் வீட்டில் குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

    இந்நிலையில், இலங்கை கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்புக் கொண்டது. #SriLankaAttacks #IS
    திருவண்ணாமலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக காப்பக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். #ChildrenHome #GirlsRescued
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ரமணா நகர் எம்.கே.வி. தெருவில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. நிர்வாகியாக நந்தகுமார், மேலாளராக அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது30) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் 17 வயதுக்கு உட்பட்ட 15 சிறுமிகள் உள்ளனர்.

    அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடப்பதாகவும், காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்பட பல்வேறு கொடுமைகள் நடப்பதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



    நேற்று இரவு கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் விரைந்து சென்று காப்பகத்தில் சோதனை நடத்தினர். அப்போது காப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதனை சோதனை செய்ததில் 100-க்கணக்கான ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், எதிர்த்து கேள்வி கேட்கும் சிறுமிகளை சாப்பாடு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமை செய்ததாகவும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து காப்பகத்தில் இருந்து கம்ப்யூட்டர், லேப்-டாப் உட்பட முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், காப்பகத்துக்கு பூட்டு போட்டனர். திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள காப்பகத்தின் நிர்வாகி நந்தகுமாரை தேடி வருகின்றனர். இரவு காவலர், சமையலர் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 15 சிறுமிகளும் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

    இதேபோல், திருவண்ணாமலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். #ChildrenHome #TiruvannamalaiCollector #GirlsRescued

    ×