என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
- அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்கவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை "கட்டுக்கதை" என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது .
அதானி குழுமத்திற்கு எதிராக எந்த முறைகேடுகளையும் கண்டறியவில்லை என்றும், எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியான இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதன் பங்குகளில் 50 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
அதானி மீதான முக்கிய குற்றச்சாட்டு, அவர் வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை அமைத்தார், தனது சொந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் முதலீடு செய்தார், பங்குகளின் விலையை உயர்த்தினார், மேலும் இந்த பங்குதாரர்கள் கடன்களைப் பெறுவதற்கு பிணையம் வழங்கினர் என்பதுதான்.
அதானி குழுமத்துடன் தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு முதலீடுகளில் அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பேசினார்.
- இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பயணத்தின் போது இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனக்கு வலுவான தனிப்பட்ட உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், "நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நான் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது" என்று கூறினார்.
சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்து மோடி ஒரு அழகான அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா விதித்த தடைகளை டிரம்ப் நியாயப்படுத்தினார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவுக்கும் இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசிய அவர், "மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் விலை குறைந்தால், புதின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்தப் போரிலிருந்து விலகப் போகிறார்" என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தான் தீர்த்ததாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
இதற்கிடையே டிரம்ப்பின் இந்த பயணத்தின்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
- இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் குசல் மெண்டிஸ்.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மதுல்லா குர்பாஸ், செதிக்குல்லா அடல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
குர்பாஸ் 14 ரன்னிலும், அடல் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கரிம் ஜனத் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இப்ராகிம் ஜத்ரன் 24 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரசூலி 9 ரன்னிலும், ஓமர்சாய் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 79 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. 7ஆவது விக்கெட்டுக்கு முகமது நபி உடன், ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். ரஷித் கான் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், முகமது நபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வெலாலகே வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் முகமது நபி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அடுத்து அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்கருக்கு தூக்கினார். 4ஆவது சிக்ஸ் அடிக்கும்போது 20 பந்தில் அரைசதம் அடித்தார்.
கடைசி பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.
170 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 8 பந்துகள் மீதமிருக்க, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் குசல் மெண்டிஸ். அவர் 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கமெண்டிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தோல்வியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் குரூப் A இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவில்குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதற்கிடையே இன்று (செப்டம்பர் 19) ஓமன் அணியுடன் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது.
- முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத உயர்வை அறிவித்தார்.
- மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளம் வாக்காளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார்.
இந்தத் திட்டம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட, பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு முதலமைச்சரின் நிஷாத் சுயம்சய உதவித்தொகை திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளையும் நிதிஷ் குமார் வெளியிட்டிருந்தார்.
- ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது.
- ரியான் கூக்லர் இயக்கி நடித்த இப்படத்தில் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், மைல்ஸ் கேட்டன், ஜாக் ஓ'கானெல் ஆகியோர் நடித்துள்ளனர்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
இந்திரா
அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவான இந்திரா திரைப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர், சுமேஷ் மூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திடைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை (செப்டம்பர் 19) வெளியாக உள்ளது.
ஹவுஸ் மேட்ஸ்
டி.ராஜாவேல் இயக்கத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ் . ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக உருவான இதில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா சந்தினி பைஜு, வினோதினீ, தீனா, அப்தூல் லீ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
சின்னர்ஸ்
உலகளவில் சுமார் 360 மில்லியன் டாலர்கள் வசூலித்த ஆங்கில திகில் படமான சின்னர்ஸ் இன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. ரியான் கூக்லர் இயக்கி நடித்த இப்படத்தில் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், மைல்ஸ் கேட்டன், ஜாக் ஓ'கானெல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷ்ஷ்ஷ்
நடிகைகள் சோனியா அகர்வால், இனியா, , ஐஸ்வர்யா தத்தா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ஷ்ஷ்ஷ் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் நாளை ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
'போலீஸ் போலீஸ்'
மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'போலீஸ் போலீஸ்'. சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்சென்ட் ராய் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இவை தவிர இந்தியில் கஜோல் நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் தி டிரயல் 2 வது சீசன் நாளை வெளியாகிறது.
- சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
- திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
- இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை - வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
செப்டம்பர் 19ம் தேதியான நாளை, கிஸ், சக்தித் திருமகன், தண்டகாரண்யம், படையாண்ட மாவீரா ஆகிய 4 திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
கிஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள திரைப்படம் கிஸ். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சக்தித் திருமகன்
விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். சக்தித் திருமகன் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாளை வெளியாகிறது.
தண்டகாரண்யம்
இயக்குனர் அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படையாண்ட மாவீரா
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார் வ.கௌதமன். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
- கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸ் விளாசினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மதுல்லா குர்பாஸ், செதிக்குல்லா அடல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குர்பாஸ் 14 ரன்னிலும், அடல் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கரிம் ஜனத் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இப்ராகிம் ஜத்ரன் 24 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரசூலி 9 ரன்னிலும், ஓமர்சாய் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 79 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. 7ஆவது விக்கெட்டுக்கு முகமது நபி உடன், ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். ரஷித் கான் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், முகமது நபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வெலாலகே வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் முகமது நபி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அடுத்து அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்கருக்கு தூக்கினார். 4ஆவது சிக்ஸ் அடிக்கும்போது 20 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.
- ரோபோ சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.
- ரோபோ சங்கர் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.
- பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.
புரோ கபடி லீக் 2025 சீசனில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி 45-41 என 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் பாதி நேர ஆடடத்தில் ஜெய்ப்பூர் 24-18 என முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் 21-23 என சறுக்கினாலும் வெற்றியை உறுதி செய்தது.
ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.
பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.
ஜெய்பூர் அணிக்கு டேக்கிள் மூலம் 13 புள்ளிகள் கிடைத்தன. இதில் 3 சூப்பர் டேக்கிள் மூலம் கிடைத்தன. பெங்கால் அணிக்கு 8 புள்ளிகள் கிடைத்தன.






