என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,230-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 82,160
16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240
15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680
14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-09-2025- ஒரு கிராம் ரூ.141
17-09-2025- ஒரு கிராம் ரூ.142
16-09-2025- ஒரு கிராம் ரூ.144
15-09-2025- ஒரு கிராம் ரூ.143
14-09-2025- ஒரு கிராம் ரூ.143
- நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் அவங்க யாருன்னே தெரியாது சொல்லிட்டீங்க.
- 2023-ம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் அவங்க யாருன்னே தெரியாது. அவங்களை காங்கிரஸ் அழைத்து வந்துள்ளது எனக்கு எதிராக அரசியல் செய்ய என்று ஒரு பச்சைப்பொய்யை சொல்லி தமிழ்நாட்டு மக்களை 14 வருஷமாக ஏமாற்றி வந்தீர்களே... அது யாரு ஏமாத்தினது.
2023-ம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க. தி.மு.க. வந்துருச்சி. நீ எதுவும் பேசிறாத. சென்னை பக்கமே வந்துடாத. நான் மாதம் மாதம் ரூ.50,000 தந்துவிடுகிறேன் என்று டீல் பேசுனது யாரு. போட்டது யாரு... என்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
- ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.
- ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.
ஸ்டீல்பேர்ட் (Steelbird) ஹை-டெக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இக்னைட் (IGNYTE) ஹெல்மெட், ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இணைக்கும் IGN-58 திறந்த முக ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில், எக்ஸ்பான்டெட் பாலிப்ரொப்பிலீன் (EPP) லைனர் தொழில்நுட்பத்துடன் வரும் மிகவும் மலிவு மாடல்களில் இந்த ஹெல்மெட் ஒன்றாகும்.
IGN-58 இன் EPP லைனர் மீண்டும் மீண்டும் ஏற்படும் அதிர்ச்சிகளை உறிஞ்சி, வடிவத்தை மீண்டும் பெறவும், தண்ணீர் மற்றும் ரசாயனங்களின் வெளிப்பாட்டைத் தாங்கவும் முடியும். இது அதன் நீண்டகால பயன்பாட்டிற்கு அதிக ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.

அதன் வடிவமைப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ABS ஷெல், UV மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் உடன் கூடிய பபிள் வைசர் மற்றும் பாதுகாப்பான கட்டுதலுக்கான டபுள் டி-ரிங் பக்கிள் அமைப்பு ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் வசதிக்காக, ஹெல்மெட் ஒவ்வாமை எதிர்ப்பு பேட், சுவாசிக்கக்கூடிய மெஷ் பேனல்கள் மற்றும் நீக்கக்கூடிய சீக் பேட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.
IGN-58 540மிமீ முதல் 620மிமீ வரையிலான அளவுகளில் வைட், டெசர்ட் ஸ்டார்ம், அத்தெனா கிரே, பேட்டில் கிரீன், செஸ்ட்நட் ரெட், பிளாக், ஸ்குவாட்ரான் புளூ, டல் ஸ்லேட், டீப் கிரீன், அர்மடா புளூ மற்றும் ரெடிட்ச் புளூ போன்ற வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். ரைடர்கள் தங்கள் தோற்றத்தைத் தனிப்பயனாக்க ஐந்து ஈகிள் தீம் டெக்கால் செட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம். இந்திய சந்தையில் இந்த ஹெல்மெட்டின் விலை ரூ. 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
மதுரை:
திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண்.16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) நாளை ஒரு நாள் மட்டும் மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி மற்றும் கோட்டயம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ஆலப்புழை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் ஹரிபாடு, அம்பாலப்புழை, ஆலப்புழை, சேர்த்தலை மற்றும் எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன.
- மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ரஷியாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ரஷியாவின் கம்சட்கா பகுதியில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, காம்சட்கா தீபகற்பத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கிக்கு கிழக்கே 128 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில், 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, விழுப்புரம், திருச்சி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
- தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்.
சென்னை:
அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
ரிஷபம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் கிடைக்கும்.
மிதுனம்
சான்றோர்களை சந்தித்து மகிழும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் யோகமுண்டு.
கடகம்
மனக்குழப்பம் அகலும் நாள். பயணம் பலன்தரும் விதம் அமையும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.
சிம்மம்
வரவைவிட செலவு கூடும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். மனத்தளவில் நினைத்த காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். முன்னோர் வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.
துலாம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கல்யாண கனவுகள் நனவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றம் கிடைக்கலாம்.
மகரம்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண் விரயங்கள் உண்டு. உறவு பகையாகலாம்.
கும்பம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நீண்ட நாளைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மீனம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (20.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
கிண்டி: லேபர் காலனி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ். மினி, பாலாஜி நகர், நாகிரெட்டித்தோட்டம், ஈக்காட்டுதாங்கல் காந்தி நகர் மெயின் ரோடு, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் 1வது மெயின் ரோடு, அருளையம்பேட்டை, தெற்கு மற்றும் வடக்கு கட்டம், முத்துராமன் செக்டார், முத்துராமன் தெரு, கணபதி காலணி, லாசர் தெரு.
செம்பியம்: சிம்சன் குரூப் ஆஃப் கம்பெனிஸ், ஓசூர் கார்டன், ஐபிஎல் கம்பெனி, பைமெட்டல் பேரிங், சிம்சன், டாஃபே கம்பெனி, டீச்சர்ஸ் காலனி, சந்தோஷ் நகர், வீனஸ் நகர், கடப்பா சாலை, சாரதி நகர், கலைமகள் நகர், வில்லிவாக்கம் சாலை, முகாம்பிகை நகர்.
ஆவடி: கிரீன் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.
ஆழ்வார்திரு நகர்: லட்சுமி நகர், ராதா அவென்யூ, ஏகேஆர் நகர், ராதா நகர், வேலன் நகர் 5 முதல் 9வது தெருக்கள்.
எழும்பூர்: அட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பாரக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீர பத்ரன் தெரு, கடூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஈவிகே சம்பத் சாலை, டெர்மியா சாலை, பிஎச் சாலை, கெல்லிஸ் சாலை தெரு, பிரான்சன் கார்டன் தெரு, வெங்கடபதி தெரு, ஹாலிஸ் சாலை, ஏர் இந்தியா காலனி, சுந்தர்லால் நார்த் அவென்யூ, ஆர்ம்ஸ் சாலை, லூதர்ன் கார்டன் போலீஸ் குடியிருப்பு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, டாக்டர் முனியப்பா சாலை, ஈகா தியேட்டர், எஸ்ஐ குவாட்டர்ஸ், கேஜி ரோடு, உமா காம்ப்ளக்ஸ், பிரான்சன் கார்டன், பால்ஃபோர் சாலை.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை.
- வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-3 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி நள்ளிரவு 12.55 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 9.29 மணி வரை பிறகு மகம்
யோகம் : மரண யோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகனத்தில் சேவை
இன்று பிரதோஷம், ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமலையில் திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலையில் சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-பெருமை
கடகம்-வாழ்வு
சிம்மம்-கண்ணியம்
கன்னி-நலம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-நிறைவு
தனுசு- உறுதி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-நம்பிக்கை
மீனம்-பயணம்






