என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
    • விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசவில்லை.

    ஐபிஎல் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியை காண பலர் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மைதானத்திற்கு வெளியே இறப்புகள் ஏற்பட்டபோதும், உள்ளே ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் எதிற்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

    "மக்கள் கூட்ட நெரிசலில் இறந்து கொண்டிருக்கும் போது, வெற்றி கொண்டாட்டத்தில் அதைப் பற்றிய குறிப்பு கூட இல்லாமல் ஒளிபரப்பப்படுவது நம்பமுடியாததாக இருக்கிறது" என ஒரு எக்ஸ் பயனர் தெரிவித்துள்ளார்.

    "உயிரற்ற உடல்கள் சுற்றிக் கிடக்கும் போது கூட சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டம்.. மனிதநேயம் எங்கே? இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

    மரணத்திலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இது அவமானகரமானது, கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. பொறுப்பானவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று மற்றொரு பதிவில் கூறப்பட்டுள்ளது.

    விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசாததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

    இதற்கிடையில், மைதானத்திற்குள் இருந்தவர்களுக்கு விபத்து குறித்து தெரியாது என்று பிசிசிஐ கூறுகிறது.

    இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கேட்டுக் கொண்டார். இதற்கு காரணம் ஏற்பாட்டாளர்கள் தான் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறினார். 

    • ஆர்.சி.பி. அணிக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
    • சின்னசாமி மைதானத்திலும் பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.

    இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.

    அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில், சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆர்.சி.பி.யின் ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டங்களை ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக திட்டமிட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
    • கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

    ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) அணி கோப்பையை வென்றது. 18 வருடம் கழித்து தற்போது ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதை, அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆர்சிபி அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.

    பின்னர் வீரர்கள் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்

    இந்த நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார லேசான தடியடி நடத்தினர். 

    • ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
    • விதான் சவுதாவில் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்.சி.பி. அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் விதான் சவுதாவில் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் தாவர்சந்த் கெலாட், கவர்னர் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் உள்பட அணி வீரர்கள் அனைவருக்கும் தலைப்பாகை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து, ஆர்.சி.பி. வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக ரசிகர்கள் மைதானத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

    • 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
    • சின்னசாமி மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

    18-வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேயத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன் பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தவுள்ளனர். அந்த பேரணி விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ள நிலையில் தற்போது இருந்தே அந்த மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.

    இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • சிவக்குமாருடன் ஆர்சிபி கொடியை வைத்து விராட்கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • தனது பதவியை கூட மறந்து ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராகவே மாறினார்.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

    இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெருங்களூரு வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் விமானத்தின் அருகிலேயே சென்று பூங்கொத்துடன் வரவேற்றார். அவருடன் விராட் கோலி ஆர்சிபி கொடியை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


    முன்னதாக பெங்களூரு விமான நிலையத்திற்கு காரில் வரும் போது கையில் ஆர்சிபி கொடியை பிடித்தபடி கர்நாடக துணை முதல்வர் வருகை தந்தார். அவர் தனது பதவியை கூட மறந்து ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராகவே மாறினார்.

    ஆர்சிபி அணி வீரர்களை வரவேற்றது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது என அனைத்தையும் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் 18 வருடங்களாக இந்த தருணத்தைக் கனவு காண்கிறேன். இறுதியாக அது இங்கே வந்துவிட்டது. நாம் நினைத்ததை விட பெரியது, சிறந்தது என பதிவிட்டிருந்தார்.

    • அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெங்களூரு வந்தடைந்தனர்.
    • சிவக்குமாருடன் ஆர்சிபி கொடியை வைத்து விராட்கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

    இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெருங்களூரு வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் விமானத்தின் அருகிலேயே சென்று பூக்கொத்துடன் வரவேற்றார். அவருடன் விராட்கோலி ஆர்சிபி கொடியை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆர்சிபி அணியினர் திறந்த வெளி பஸ்சில் வெற்றி பேரணி நடத்துவதாக இருந்தது.
    • கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாததால் வெற்றி பேரணி ரத்து செய்யப்பட்டது.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

    இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

    மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு வந்து சேரும் ஆர்சிபி அணி, மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடக்க இருந்தது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்த ஆர்சிபி வீரர்களுக்கு அந்த அணியின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக ரசிகர்கள் ஆர்சிபி அணியின் வருகைக்காக 1 மணி அளவில் இருந்தே விமான நிலையத்தை ரசிகர்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை ஆர்சிபி அணியினர் சந்திக்கின்றனர்.
    • மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

    இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

    மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு வந்து சேரும் ஆர்சிபி அணி, மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் பெங்களூருவில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறை கைவிரித்ததால் அந்த அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை.
    • என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த ஆர்சிபி முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் தற்போது வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது என்றும் களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன் என்றும் விராட் கோலி கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி எனது கேரியரை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் போது என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று நான் சொல்ல வேண்டும்.

    அதை சொல்ல வேண்டுமெனில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது. மாறாக 20 ஓவர்களும் முழுமையாக விளையாடி களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன். நான் அப்படிப்பட்ட வீரர். அது போன்ற திறமையில் கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். அதை வைத்து நீங்கள் பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அணிக்கு உதவ வேண்டும்.

    என்று கூறினார்.

    ரோகித் சர்மா இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் இம்பேக்ட் வீரராக இருந்தார். இதனால் விராட் கோலி ரோகித் சர்மாவை கலாய்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • கோவையில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் போட்டி போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 8 தொடர் முடிந்துள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிக பட்சமாக 4 முறையும் (2017, 2019, 2021, 2022) கோவை கிங்ஸ் 2 தடவையும் (2022, 2023), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), திண்டுக்கல் டிராகன்ஸ் (2024) தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றன.

    9-வது டி.என்.பி.எல். போட்டி நாளை ( வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் ஜூலை 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் , திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்டு சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோவையில் 8 ஆட்டங்களும் (ஜூன் 5 முதல் 11 வரை) , சேலத்தில் 9 போட்டிகளும் (13 முதல் 19 வரை), நெல்லையில் 7 ஆட்டங்களும் (21 முதல் 26 வரை) திண்டுக்கல்லில் இறுதி ஆட்டம், பிளே ஆப் உள்பட 8 போட்டிகளும் (ஜூன் 28 முதல் ஜூலை 6 வரை) நடக்கிறது.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். லீக் சுற்று 29-ந்தேதியுடன் முடிகிறது. ஜூலை 1-ந்தேதி குவாலிபையர்1' ஆட்டமும், 2-ந்தேதி எலிமினேட்டர் போட்டியும், 4-ந்தேதி குவாலிபையர்2' ஆட்டமும், இறுதிப்போட்டி ஜூலை 6-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கோவையில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. மறுநாள் 6-ந்தேதி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் மோதின. இந்த பரபரப்பான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    அந்த அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாலை அந்த பேரணி நடைபெறும்.

    இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியை முன்னாள் ஆர்சிபி அணி நிர்வாகத்தின் தலைவர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா நேற்று டிவி-யில் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை கண்கலங்கி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×