என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஆர்சிபி வெற்றி பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
- 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
- சின்னசாமி மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
18-வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேயத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன் பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தவுள்ளனர். அந்த பேரணி விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ள நிலையில் தற்போது இருந்தே அந்த மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.
இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






