என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    தீவிர ரசிகராக கொடி பிடித்தபடி காரில் சென்ற கர்நாடக துணை முதல்வர்- வீடியோவை பதிவிட்டு நெகிழ்ச்சி
    X

    தீவிர ரசிகராக கொடி பிடித்தபடி காரில் சென்ற கர்நாடக துணை முதல்வர்- வீடியோவை பதிவிட்டு நெகிழ்ச்சி

    • சிவக்குமாருடன் ஆர்சிபி கொடியை வைத்து விராட்கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • தனது பதவியை கூட மறந்து ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராகவே மாறினார்.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

    இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெருங்களூரு வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் விமானத்தின் அருகிலேயே சென்று பூங்கொத்துடன் வரவேற்றார். அவருடன் விராட் கோலி ஆர்சிபி கொடியை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


    முன்னதாக பெங்களூரு விமான நிலையத்திற்கு காரில் வரும் போது கையில் ஆர்சிபி கொடியை பிடித்தபடி கர்நாடக துணை முதல்வர் வருகை தந்தார். அவர் தனது பதவியை கூட மறந்து ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராகவே மாறினார்.

    ஆர்சிபி அணி வீரர்களை வரவேற்றது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது என அனைத்தையும் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் 18 வருடங்களாக இந்த தருணத்தைக் கனவு காண்கிறேன். இறுதியாக அது இங்கே வந்துவிட்டது. நாம் நினைத்ததை விட பெரியது, சிறந்தது என பதிவிட்டிருந்தார்.

    Next Story
    ×