என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: விமானத்தில் இருந்து இறங்கிய ஆர்சிபி வீரர்கள்: பூங்கொத்துடன் வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்
- அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெங்களூரு வந்தடைந்தனர்.
- சிவக்குமாருடன் ஆர்சிபி கொடியை வைத்து விராட்கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.
இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெருங்களூரு வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் விமானத்தின் அருகிலேயே சென்று பூக்கொத்துடன் வரவேற்றார். அவருடன் விராட்கோலி ஆர்சிபி கொடியை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






