என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது.. ரோகித்தை கலாய்த்தாரா விராட் கோலி?
- ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை.
- என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த ஆர்சிபி முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் தற்போது வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது என்றும் களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன் என்றும் விராட் கோலி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி எனது கேரியரை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் போது என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று நான் சொல்ல வேண்டும்.
அதை சொல்ல வேண்டுமெனில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது. மாறாக 20 ஓவர்களும் முழுமையாக விளையாடி களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன். நான் அப்படிப்பட்ட வீரர். அது போன்ற திறமையில் கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். அதை வைத்து நீங்கள் பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அணிக்கு உதவ வேண்டும்.
என்று கூறினார்.
ரோகித் சர்மா இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் இம்பேக்ட் வீரராக இருந்தார். இதனால் விராட் கோலி ரோகித் சர்மாவை கலாய்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






