என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • திருப்பூர் அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது.
    • கோவை அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 4 தோல்வி அடைந்துள்ளது.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருப்பூர் அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி கண்டு 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கோவை அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 4 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    • இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.
    • டக்கெட் அரை சதம் அடித்து அசத்தினார்.

    லீட்ஸ்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்களான கிராவ்லி மற்றும் டக்கெட் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய பந்து வீச்சாளர்கள் அவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    இவர்களது பாட்னர்ஷிப் 100 ரன்களை கடந்துள்ளது. இதில் டக்கெட் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் 5-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது.

    • ரிங்கு சிங்கு எம்.பி. பிரியா சரோஜிக்கும் இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
    • இவர்களது திருமணம் 3 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். இந்திய அணியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.

    கடந்த 8-ம் தேதி ரிங்கு சிங்குக்கும், எம்.பி. பிரியா சரோஜிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அத்துடன் இவர்களது திருமணம் இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இவர்களது திருமணம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் பிப்ரவரி 2026-ல் நடைபெறும் என குடுப்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் நடைபெறும் திருமணத்திற்கான இறுதி தேதி விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர்.

    நவம்பர் மாதத்தில் ரிங்குவின் கிரிக்கெட் பணிகள் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடைசி நாள் 90 ஓவர்கள் பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியும்.
    • அதற்கு காலையில் பும்ராவையும், மதியம் ஜடேஜாவையும் எதிர்த்து அவர்கள் நன்றாக விளையாட வேண்டும்.

    லீட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன் எடுத்து பதிலடி கொடுத்தது. 6 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 364 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 371 ரன் இலக்காக இருந்தது. கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடைசி நாளில் இங்கிலாந்து அணிக்கு ஜடேஜா தொல்லையாக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி 'பாஸ்பால்' அட்டாக்கிங்கில் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கடைசி நாள் 90 ஓவர்கள் பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியும். அதற்கு காலையில் பும்ராவையும், மதியம் ஜடேஜாவையும் எதிர்த்து அவர்கள் நன்றாக விளையாட வேண்டும். இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஜடேஜா நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களுக்கு பிரச்னையாக இருப்பார் என வாகன் கூறினார்.

    • இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 350 ரன் தேவை.
    • லீட்ஸ் ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி இதற்கு முன்பு 362 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று இருந்தது.

    லீட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன் எடுத்து பதிலடி கொடுத்தது. 6 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 364 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 371 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் கே.எல். ராகுல் (137 ரன்), ரிஷப் பண்ட் (118 ரன்) சதம் அடித் தனர். கார்ஸ் , ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், ஷோ யிப் பஷீர் 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் டும் கைப்பற்றினார்கள்.

    361 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. சிராவ்லி 12 ரன்னுடனும், பென்டக்கெட் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 350 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் உள்ளது.

    இந்திய அணி இங்கிலாந்தின் 10 விக்கெட் கைப்பற்றி வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த டெஸ்டில் வெற்றி பெற முயற்சிக்கும்.

    லீட்ஸ் ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி இதற்கு முன்பு 362 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இந்த ஆடுகளத்தில் அதிகபட்சமாக 404 ரன் இலக்கை ஆஸ்திரேலிய அணி இங்கிநாந்துக்கு எதிராக (1948-ம் ஆண்டு) எடுத்தது.

    இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது இந்தியாவா? இங்கிலாந்தா? அல்லது டிராவில் முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    • இந்திய அணி 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இதனால் இங்கிலாந்து அணிக்கு371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனால் 6 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. இதில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் சதத்தால் இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நடுவரின் முடிவுக்கு எதிராக செயல்பட்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதமும், ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப்பண்ட் 2 இன்னிங்சிலும் (134 ரன், 118 ரன்) சதம் அடித்தார்.
    • மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார். இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 7-வது இந்திய வீரர் ரிஷப்பண்ட் ஆவார்.

    இந்த நிலையில் ரிஷப்பண்ட் ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அவர் சூப்பர், சூப்பர், சூப்பர் என்று 3 முறை கூறி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, 'ரிஷப்பண்டின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. இளம் வீரரான அவரது ஆட்டம் முற்றிலும் அருமையாக இருந்தது' என்றார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பயணத்தில் மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் முட்டாள், முட்டாள், முட்டாள் என்று 3 முறை கூறி கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது அவரை கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ரிஷப்பண்ட் கூறும்போது, 'பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிகளாக மாற்றும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது. இது கடினமான செயல்முறையாகும். எனது பலவீனங்களை கடந்தது அதிர்ஷ்டமே. கடின உழைப்பு, கவனம், ஒழுக்கம் ஆகியவை இதில் சம்மந்தப்பட்டுள்ளன' என்றார்.

    • இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார்.
    • 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஒரு டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையையும் முறியடித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சங்ககாரா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 ரன்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை இப்போட்டியில் 252 ரன்கள் அடித்து பண்ட் முறியடித்துள்ளார்.

    • 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.
    • இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார்

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், ரூட் ஆகியோர் இதுவரை 210 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் ஜெயவர்தனே (205), ஸ்மித் (200) ஆகியோர் உள்ளனர்.

    • திலீப் ஜோஷி டெஸ்டில் 6 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
    • இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

    இருதய கோளாறு காரணமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் ஜோஷி (77) காலமானார்.

    இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 1979-83 காலத்தில் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 6 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

    திலீப் ஜோஷி இறப்பிற்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல் ஆகியோர் சதம் விளாசினர்.
    • குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல், பண்ட் (2) ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்.

    இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது.

    இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனை 6 முறை மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் மற்றொரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணி ஒரே டெஸ்டில் 5 சதங்கள் அடித்தது 1 முறை மட்டுமே நடந்துள்ளது. 1955 இல் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரே இன்னிங்சில் 5 சதங்கள் விளாசியது.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
    • பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷப் பண்ட், கே.எல் ராகுலுக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2024 ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே சஞ்சீவ் கோயங்கா திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×