என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- மதுரை அணி இதுவரை 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் தோற்றது.
- திருச்சி அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் தோற்றது.
நெல்லை:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. நேற்று டன் 22 ஆட்டங்கள் முடிந்து உள்ளன.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. திருப்பூர் தமி ழன்ஸ் 8 புள்ளிகளுடனும், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 6 புள்ளிகளுடனும், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளி களுடனும், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகியவை தலா 2 புள்ளி களுடனும் உள்ளன.
முன்னாள் சாம்பியன் கோவை அணி 5 போட்டிகளில் தோற்றதால் வாய்ப்பை இழந்து வெளியேறியது. பிளே ஆப் சுற்றின் 3-வது இடத்துக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 23- வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
சதுர்வேத் தலைமையிலான மதுரை அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் தோற்றது. திருச்சியை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.
சுரேஷ்குமார் தலைமையிலான திருச்சி அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் தோற்றது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும்.
- SENA நாடுகளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 6 சதம் விளாசியுள்ளார்.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது.
இதனால் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமாக இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சிலும் 2-வது இன்னிங்சிலும் இந்திய வீரர் ரிஷ்ப பண்ட் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஆனால் இவர் SENA நாடுகளில் சதம் அடித்து இந்தியா வெற்றி பெற்றதில்லை. அந்த வகையில் அவரது சோகம் இந்த டெஸ்ட்டிலும் தொடர்கிறது.
அதன்படி SENA நாடுகளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை.
2019-ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் இந்தியா டீரா செய்த நிலையில், மற்ற 5 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
இதில் 4 சதம் இங்கிலாந்துக்கு எதிராக அடித்துள்ளார். ஒரு டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவ்விரு அணிகள் இதுவரை 120 டெஸ்டில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- 1993-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுகிறது.
இதன்படி ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் இரு அணிக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்தில் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காராக இறங்கி சொதப்பிய லபுஸ்சேன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். விரலில் ஏற்பட்ட காயத்தால் ஸ்டீவன் சுமித் விலகி விட்டார். இரு மூத்த வீரர்கள் இல்லாதது சற்று பலவீனம் தான் என்றாலும் அவர்களுக்கு பதிலாக ஜோஷ் இங்லிஸ், சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டு உள்ளனர். கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், வெப்ஸ்டர் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்காட் போலன்ட் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த அணியில் கிரேக் பிராத்வெய்ட், கேசி கார்டி, ஷாய் ஹோப், மிகைல் லூயிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், ஷமார் ஜோசப், அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீலஸ், ஜோமல் வாரிகன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இவ்விரு அணிகள் இதுவரை 120 டெஸ்டில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 61-ல் ஆஸ்திரேலியாவும், 33-ல் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 25 போட்டி டிரா ஆனது. மற்றொரு டெஸ்ட் சமனில் (டை) முடிந்தது.
1993-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை. அந்த 32 ஆண்டுகால ஏக்கத்தை உள்ளூர் சூழலில் தணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை பேன்கோடு செயலியில் பார்க்கலாம்.
- நாங்கள் 430 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம்.
- எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை.
லீட்ஸ்:
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விரட்டிப்பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜோ ரூட் 53 ரன்னுடனும், ஜாமி சுமித் 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தோல்வி குறித்து பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், "இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக எங்களுக்கு அமைந்தது. எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை.
இந்த இரண்டு விஷயங்களால் நாங்கள் இந்த போட்டியை இழந்து விட்டோம். நாங்கள் 430 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 25 ரன்களில் நாங்கள் இழந்து விட்டோம். இன்று கூட எங்களுக்கு பல வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நாங்கள் ஏற்கனவே முதல் இன்னிங்சில் கடைசி கட்டத்தில் கொத்தாக விக்கெடுகள் இழந்ததை பற்றி பேசினோம். வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்த பிரச்சனையை நாங்கள் சரி செய்ய வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக இருக்காது. எனினும் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இளம் வீரர்களால் நிறைந்தது எங்கள் அணி. எனவே அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இன்றைய நாளில் முதல் செஷனில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். பெரிய அளவு ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் பந்து பழையதாக மாறியவுடன் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. பந்து பழையதாக மாறிய பிறகும் விக்கெட்டை எடுக்கும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பந்து பழையதாகிவிட்ட பிறகு அவர்கள் நன்றாக பேட் செய்தனர். அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஜடேஜா நன்றாக பந்து வீசி வாய்ப்புகளை ஏற்படுத்தினார். இதேபோன்று பும்ரா எந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்பு தான் நாங்கள் அதற்கான முடிவை எடுப்போம்.
என்று கில் கூறினார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர்ந்து 2 முறை இந்தியா தோல்வியடைந்தது.
- இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கூட இந்தியா தகுதிபெறவில்லை.
லீட்சில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை அடுத்தடுத்து வென்ற இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர்ந்து 2 முறை தோல்வியடைந்து கோப்பையை இழந்த இந்தியா இம்முறை இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பின்பு விளையாடிய கடைசி 9 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை விட கீழே உள்ள வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- 2-வது இன்னிங்சில் 373 ரன்களை குவித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது
- அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
மேலும், இந்த போட்டியில் வென்றதன் மூலம் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு எதிராக 350க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து இருமுறை படைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்கள் அடித்து
வெற்றி பெற்றிருந்த நிலையில், லீட்ஸ் டெஸ்டில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கையும் எட்டி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
- 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து இந்தியா ஆல்-அவுட் ஆனது.
- 2-வது இன்னிங்சில் 373 ரன்களை குவித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. கடந்த 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை தவிர வேறு எந்த அணியும் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
- 16.5 ஓவரில் 3 மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
இன்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கோவை அணி திருப்பூர் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியன் சச்சின் 24 ரன்கள் எடுத்தார்.
திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளையும் நடராஜன், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 138 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அமித் சாத்விக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் நிலைத்து நிற்காமல் மற்ற வீரரகள் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
கோவை அணி சார்பில் புவனேஸ்வரன், திவாகர், சுப்ரமணியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் திருப்பூர் அணி 16.5 ஓவரில் 3 மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி வெற்றது.
- இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இழந்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து பேட்டிங் செய்து நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் முடிவில் 21 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்தது.
இன்று கடைசி நாள் ஆட்டத்தில், 188 ரன்கள் சேர்த்த பிறகே முதல் விக்கெட்டை இங்கிலாந்து இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.
தொடக்கவீரர் சாக் க்ராலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் விழுந்தன.
ஜோ ரூட் நிலைத்து நின்று அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு அச்சாரம் இட்டார்.
இறுதியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இழந்துள்ளது
- ஜெய்ஸ்வால் மட்டும் 4 கேட்ச்சுகளை மிஸ் செய்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் மட்டும் 5 கேட்ச்சுகளை இந்திய வீரர்கள் மிஸ் செய்துள்ளனர்.
லீட்ஸ்:
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு மேல் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுமாராக பீல்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் மட்டும் ஜெய்ஸ்வால் 3 கேட்ச் மிஸ் செய்துள்ளார். ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 1 கேட்ச்சை மிஸ் செய்தனர்.
முதல் இன்னிங்சில் தான் கேட்ச் மிஸ் செய்தார்கள் என நினைத்தால், 2-வது இன்னிங்சிலும் கேட்ச் மிஸ் செய்துள்ளனர். அந்த வகையில் பென் டக்கெட் 97 ரன்களில் ஆடி கொண்டிருந்தபோது சிராஜின் பந்துவீச்சில் கேட்ச் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இதனால் கடுப்பான சிராஜ் ஜெய்ஸ்வாலை பாத்து கத்தினார்.
இதனை தொடர்ந்து கிராலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை பும்ரா தவறவிட்டார். அது கொஞ்சம் கடினமான கேட்ச் என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரூட் கேட்ச்சை மிஸ் செய்தார். அவர் பந்து பிடிப்பதற்குள் ஸ்டெம்பிங் செய்ய முயற்சி செய்ததால் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.
அடுத்த சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆட முயற்சிக்கும் போது அவரது கையில் பட்டு பந்து மேலே செல்லும் ஆனால் ரிஷப் பண்ட் பந்தை முன்னாடி தேடுவாரே தவிர சற்று மேலே பார்க்காமல் இருப்பார். இதனால் ஜடேஜாவும் ராகும் கோபமடைந்தனர்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய வீரர்களை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஜெய்ஸ்வாலை வசைபாடி வருகின்றனர்.
- 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
- திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நெல்லை:
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கோவை அணி திருப்பூர் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியன் சச்சின் 24 ரன்கள் எடுத்தார்.
திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளையும் நடராஜன், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- திருப்பூர் அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது.
- கோவை அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 4 தோல்வி அடைந்துள்ளது.
நெல்லை:
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருப்பூர் அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி கண்டு 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கோவை அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 4 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.






