என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    போட்டி போட்டு 9 கேட்ச் மிஸ் செய்த இந்திய வீரர்கள்- விளாசும் ரசிகர்கள்
    X

    போட்டி போட்டு 9 கேட்ச் மிஸ் செய்த இந்திய வீரர்கள்- விளாசும் ரசிகர்கள்

    • ஜெய்ஸ்வால் மட்டும் 4 கேட்ச்சுகளை மிஸ் செய்துள்ளார்.
    • முதல் இன்னிங்சில் மட்டும் 5 கேட்ச்சுகளை இந்திய வீரர்கள் மிஸ் செய்துள்ளனர்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு மேல் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுமாராக பீல்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் மட்டும் ஜெய்ஸ்வால் 3 கேட்ச் மிஸ் செய்துள்ளார். ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 1 கேட்ச்சை மிஸ் செய்தனர்.

    முதல் இன்னிங்சில் தான் கேட்ச் மிஸ் செய்தார்கள் என நினைத்தால், 2-வது இன்னிங்சிலும் கேட்ச் மிஸ் செய்துள்ளனர். அந்த வகையில் பென் டக்கெட் 97 ரன்களில் ஆடி கொண்டிருந்தபோது சிராஜின் பந்துவீச்சில் கேட்ச் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இதனால் கடுப்பான சிராஜ் ஜெய்ஸ்வாலை பாத்து கத்தினார்.

    இதனை தொடர்ந்து கிராலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை பும்ரா தவறவிட்டார். அது கொஞ்சம் கடினமான கேட்ச் என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரூட் கேட்ச்சை மிஸ் செய்தார். அவர் பந்து பிடிப்பதற்குள் ஸ்டெம்பிங் செய்ய முயற்சி செய்ததால் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.

    அடுத்த சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆட முயற்சிக்கும் போது அவரது கையில் பட்டு பந்து மேலே செல்லும் ஆனால் ரிஷப் பண்ட் பந்தை முன்னாடி தேடுவாரே தவிர சற்று மேலே பார்க்காமல் இருப்பார். இதனால் ஜடேஜாவும் ராகும் கோபமடைந்தனர்.

    இதனால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய வீரர்களை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஜெய்ஸ்வாலை வசைபாடி வருகின்றனர்.

    Next Story
    ×